- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பழனிய எங்க, அதுக்குள்ள கடைக்கு போயிட்டானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்!
பழனிய எங்க, அதுக்குள்ள கடைக்கு போயிட்டானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்!
Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனுக்கும், பழனிவேலுவிற்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இத்தனை காலமாக தனது வீட்டில் இருந்து கொண்டு தனது சாப்பாட்டில் வளர்ந்த பழனிவேல் இப்போது தனக்கே துரோகம் செய்துவிட்டதாக கூறி அவரை வீட்டைவிட்டு வெளியில் துரத்திவிட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ
பாண்டியனை பழி வாங்க, பழனிவேலுவின் அண்ணன்களான சக்திவேல் மற்றும் முத்துவேலுவின் ஏற்பாட்டில் காந்திமதி ஸ்டோர்ஸ் கடையை பழனிவேல் திறந்தார். உண்மையில் பழனிவேலுவிற்கே கடை திறப்பது பற்றியும், கடை எங்கு இருப்பது பற்றியும் தெரியாது. இந்த சூழலில் பாண்டியனும், கோமதியும் சேர்ந்து கொண்டு தங்களுக்கு பழனிவேல் துரோகம் செய்துவிட்டதாகவும், தாங்கள் நன்றாக இருக்க கூடாது என்பதற்காக அண்ணன்கள் உடன் சேர்ந்து இப்படி நடந்து கொண்டதாகவும் கூறி அவரை வீட்டைவிட்டு துரத்தினர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்,
மேலும், தனக்கும் தனது குடும்பத்திற்கும் இத்தனை ஆண்டுகாலமாக சோறு போட்டது பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை தான் என்றும், இவ்வளவு ஏன் உன்னை வளர்த்து ஆளாக்கியதும் இந்த கடை தான் என்றும் பாண்டியன் ஆக்ரோஷமாக பேசினார். ஏற்கனவே செந்தில் அரசு வேலை வாங்கிக் கொண்டு தனியாக சென்ற நிலையில் கதிர் சொந்தமாக டிராவல்ஸ் வைத்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
அவர்கள் இருவருக்கும் பாண்டியன் தனது நிலத்தை விற்று தலா ரூ.10 லட்சம் கொடுத்தார். இப்போது பழனிவேலுவும் தனியாக சென்ற நிலையில் அடுத்தாக இருப்பது சரவணன் மட்டுமே. இப்போது கடையில் மாணிக்கம் மற்றும் தங்கமயில் இருவரும் வேலை பார்த்து வரும் நிலையில் எப்படியும் கடையை சரவணன் பெயருக்கோ அல்லது தங்கமயில் பெயருக்கோ எழுதி வாங்கும் சுழுல் ஏற்படக் கூடும்.
காந்திமதி ஸ்டோர்ஸ்
இதற்கு முன்னதாக தங்கமயிலின் அப்பா மாணிக்கம் கடையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கள்ளாவிலிருந்து பணத்தை எடுத்து சென்று வருகிறார். தீபாவளிக்கு முன்னதாக மயிலுக்கு சீர் செய்ய வேண்டும் என்பதற்காக கடைக்கு ஒருவர் கொண்டு வந்த 10000 பணத்தை அப்படியே ஆட்டைய போட்டு தனது மகளுக்கு மாணிக்கம் சீர் செய்தார்.
புதிய கடை திறந்த பழனிவேல்
அதற்கு முன்னதாக ரூ.1000, ரூ.500 என்று ஆட்டைய போட்டார். இந்த சூழலில் தான் இப்படியே இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் பாண்டியன் அடுத்தடுத்து கடன் வாங்க வேண்டி வரும். அதன் மூலமாக கடையில் வியாபாரம் இல்லாமல் நடுத்தெருவிற்கு வரும் நிலை வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழனிவேல் திறந்திருக்கும் கடைக்கும் பாண்டியன் வைத்திருக்கும் கடைக்கும் இடையில் கிட்டத்தட்ட 15 கடைகள் இருக்கிறதாம். அப்படியெல்லாம் இருக்கும் போது எப்படி வியாபாரம் நடக்கும் எப்படி வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.
பாண்டியன் அண்ட் பழனிவேல்
இந்த சீரியலில் ஒவ்வொருவரும் பேசுவதும் சரி நடந்து கொள்வதற்கும் சரி ஒவ்வொரு காரணமும் இருக்கிறது. அப்படித்தான் மீனா தனிக்குடித்தனம் செல்லும் போது ராஜீ கண்ணீர் விட்டு அழுதார். ஆனால், இப்போது அதே ராஜீ தான் மீனா தப்பு செய்துவிட்டதாக கூறி அவருடன் சண்டைக்கு செல்கிறார். மேலும், பாண்டியனும் பழனிவேல் கடை திறந்ததைத் தொடர்ந்து நான் ஒன்றும் நடுத்தெருவுக்கு வந்துவிட மாட்டேன் என்று டயலாக் பேசியிருந்தார். இதை வைத்து எப்படியும் இப்படியொரு காட்சிகள் வரக் கூடும் என்று தெரிகிறது. அதுவரையில் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை பார்த்து ரசிக்கலாம்.