- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அண்ணன் மகனுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்த கோமதி –மகளுக்காக துடிதுடித்த பாண்டியன்!
அண்ணன் மகனுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்த கோமதி –மகளுக்காக துடிதுடித்த பாண்டியன்!
Pandian Stores 2 Serial Today 571st Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 571ஆவது எபிசோடில் ராஜீயைத் தேடி கதிர் சென்னை வந்த நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீரியலில் ஒருபுறம் கதிர் மற்றும் ராஜீயின் காதல் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் மறுபுறம் அரசி மற்றும் பாண்டியனின் பாச காட்சிகள் ஒளிபரப்பு சேய்யப்படுகிறது. என்னதான், அரசி குமரவேலுவை நம்பி ஏமாந்திருந்தாலும் அரசிக்கு அவர் மீது காதல் இருந்துள்ளது. மேலும், தனது குடும்பத்தைக் காப்பாற்ற தனக்கு தானே தாலி கட்டிக் கொண்ட அரசி குமரவேல் வீட்டிற்கு சென்றார். அங்கு பல கொடுமைகளை அனுபவித்தார். அதோடு பதிலுக்கும் பல கொடுமைகளை செய்தார்.
ஒரு கட்டத்தில் அரசி தனக்கு தானே திருமணம் செய்து கொண்டது பாண்டியனுக்கு தெரியவரவே அரசியை தனது வீட்டிற்கே அழைத்து வந்தார். அதோடு கையோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று குமரவேல் மீது புகாரும் கொடுத்தார். ஒரு முறை சாட்சி சொல்ல கோர்ட்டுக்கும் சென்று வந்துவிட்டார். இந்த நிலையில், தான் குமரவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது ஜாமீனில் வெளியில் இருக்கிறார்.
இது ஒரு புறம் இருந்தால் தற்போது குமரவேல் மனம் திருந்தி வாழ்ந்து வரும் நிலையில் தனது மகனுக்காக மாரியும், பேரனுக்காக காந்திமதியும் ஒருவர் மாற்றி ஒருவராக சென்று ராஜீ மற்றும் கோமதியிடம் கோர்ட் கேஸை வாபஸ் வாங்க சொல்லி வற்புறுத்தினர். மாரி கேட்டு ராஜீ இல்லை என்ற நிலையில் காந்திமதிக்காக கோமதியால் இல்லை என்று சொல்ல முடியவில்லை. இதன் காரணமாக தனது கணவரிடம் பேசுவதாக வாக்கு கொடுத்த நிலையில் இன்றைய 571ஆவது எபிசோடில் பாண்டியனிடம் இன்று கோர்ட்டுக்கு போகாதீங்க என்றார்.
ஏற்கனவே குமரவேல் பற்றி போலீசில் புகார் கொடுப்பதை கோமதி விரும்பவில்லை. இது அதற்காக அல்ல, போலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டுக்கு எல்லாம் போக வேண்டுமா என்றெல்லாம் கேட்டார். நாம் கோர்ட்டுக்கு போகவில்லை என்றால் கேஸ் அவர்களுக்கு சாதகமாகிவிடும் என்றார். அதன் பிறகு கோமதி வாயவே திறக்கவில்லை. அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிவடைந்தது. இனி நாளை, சென்னையிலிருந்து ஊர் திரும்பும் கதிர் மற்றும் ராஜீ தொடர்பான காட்சிகள் இடம் பெறும் என்று தெரிகிறது.