- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கடைக்கு போன இடத்துல காலில் கட்டோட வந்த பாண்டியன் – அலறி துடித்த கோமதி : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
கடைக்கு போன இடத்துல காலில் கட்டோட வந்த பாண்டியன் – அலறி துடித்த கோமதி : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Pandian Leg Injured : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் பாண்டியன் காலில் கட்டு போட்டுக் கொண்டு வீட்டிற்கு வந்ததை தொடர்ந்து கோமதி அலறி துடித்துள்ளார்.

கடைக்கு போன இடத்துல காலில் கட்டோட வந்த பாண்டியன் – அலறி துடித்த கோமதி : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் ஒன்று. இதில், இன்றைய 568ஆவது எபிசோடில் பாண்டியன் காலில் கட்டு போட்டுக் கொண்டு வந்துள்ளார். என்ன ஆச்சு, ஏதேச்சு என்று கோமதி, தங்கமயில் என்று அனைவரும் கதறிய நிலையில் பழனிவேல் கடைக்கு பின்புறம் படிக்கட்டை அலசி விடும் போது வழுக்கி விழுந்து அடிபட்டுள்ளது. உடனே மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் என்று எல்லாவற்றையும் எடுத்து பாத்தாச்சு. பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிட்டாங்க என்றார்.
குமரவேல், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது மீனாவின் அப்பாவும், அம்மாவும் திடீரென்று வீட்டிற்கு வந்தனர். அவர்கள், மாப்பிள்ளைக்கு அரசு வேலை கிடைத்ததைத் தொடர்ந்து குலதெய்வ கோயிலில் பொங்கல் வைத்து பூஜை செய்ய வேண்டும். அதனால் குடும்பத்தோடு அனைவரும் புறப்பட்டு வர வேண்டும் என்று மீனாவின் அப்பா கூறினார்.
அதற்கு பாண்டியனும் ஓகே எல்லோரும் போயிட்டு வாங்க என்று கூற, பழனிவேல் எப்படியோ மருமகனுக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துவிட்டீங்க என்று சொல்ல, அதற்கு மீனாவின் அப்பா, எல்லாம் சம்பந்தி கொடுத்த காசு தானே என்றார். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுகன்யா, அண்ணன் எங்கு காசு கொடுத்தார். எல்லாம் மீனா தான் ஆபிஸில் லோன் போட்டு கொடுத்தாங்க என்றார். இதைக் கேட்ட மீனா அதிர்ச்சி அடைந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாண்டியன்
அனைவரும் சுகன்யாவை சத்தம் போட, பாண்டியன் ஏன் அவரை திட்டுறீங்க. சுகன்யா சொன்னது உண்மை தான். இப்படியெல்லாம் பிரச்சனை வரும் என்பதற்காகத்தான் நான் அப்போதே வேண்டாம் என்றேன். ஆனால், யாரும் கேட்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது மீனாவின் அப்பாவும், அம்மாவும் உடனே அங்கிருந்து புறப்பட்டனர்.
மீனா உடனே வெளியில் வர அவரது அப்பா போயும் போயும் இந்த வீட்டில் வந்து வாக்கப்பட்டதற்கு நீ அனுபவிக்க வேண்டியது தான் என்று சொல்லிவிட்டுச் சென்றார். இதனால் கோபமடைந்த மீனா, சுகன்யாவிடம் வம்புக்கு சென்றார். எதற்கு என்னுடைய அப்பாவிடம் சொன்னீங்க, எனக்கு தெரியாதா? எப்போது சொல்ல வேண்டும், சொல்லக் கூடாது என்று அப்படி இப்படி என்று வாக்குவாதம் செய்தார். இதைத் தொடர்ந்து கடைசியாக குமரவேல் மற்றும் ராஜீ தொடர்பான காட்சிகள் இடம் பெற்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 568ஆவது எபிசோடு
அதில், ஏன் ராஜீ நீ நம்ம வீட்டுக்கு வரவில்லை. அரசி எப்படி அவங்க அப்பா அம்மா கூப்பிட்டதும் வீட்டுக்குள் சென்றாரோ அதே போன்று நியூம் வர வேண்டியது தானே என்று கேட்டார். அதற்கு ராஜீ, கதிர் மட்டுமின்றி வீட்டில் உள்ள அனைவரும் நன்றாக பார்த்துக் கொள்ளூம் நிலையில் நான் எப்படி அங்கிருந்து வர முடியும் என்றார். கடைசியாக நான் செய்தது தவறு தான். அரசியிடம் மன்னிப்பு கேட்டதாக சொல் என்றார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 568ஆவது எபிசோடு முடிவடைந்தது.