- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ வீடியோ; இந்த வாரம் என்ன நடக்கும்? அரசியின் முடிவு என்ன?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ வீடியோ; இந்த வாரம் என்ன நடக்கும்? அரசியின் முடிவு என்ன?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம். மேலும், அரசி மற்றும் குமரவேல் மீண்டும் ஒன்று சேர்வார்களா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் யாருமே எதிர்பார்க்காத திருப்பம் கடந்த வார எபிசோடில் நடந்தது. இதில், குமரவேல் மீது கொடுத்த புகாரை அரசி நீதிபதி முன்பு வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இந்த வாரம் எபிசோடில் என்ன நடக்க இருக்கிறது என்பது பற்றி பார்ப்பதற்கு முன்னதாக கடந்த வாரம் என்ன நடந்தது என்பது பற்றி முதலில் சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
விவாகரத்திற்கு பிறகு மனைவிக்கு ரூ.350 கோடி ஜீவனாம்சம் கொடுத்த நடிகர் யார் தெரியுமா?
இந்த வாரம் என்ன நடக்கும்? அரசியின் முடிவு என்ன?
நீ ஏதாவது சொல்ல ஆசைப்படுகிறாயா என்று குமரவேலுவிடம் நீதிபதி கேட்ட நிலையில், அதற்கு மனம் திருந்திய குமரவேல் அரசி தரப்பிலிருந்து சொல்லப்படும் எல்லாம் உண்மை தான். நான் தான் தப்பு செய்தேன். அதற்கு என்ன தண்டனையோ அதனை அனுபவிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று குமரவேல் கண்ணீர் மல்க கூறினார்.
ஜனநாயகன் படம் எப்படி இருக்கு? ரூ.1000 கோடி வசூல் கன்பார்ம்! பிரபலம் கொடுத்த அப்டேட்
வாபஸ் வாங்க வேண்டும்
இதே போன்று அரசியிடமும் நீதிபதி கேட்க, அதற்கு அரசியோ தனது அம்மா, மாமாவின் குடும்பம், பாட்டி என்று எல்லோரையும் மனதில் வைத்துக் கொண்டு இந்த கேஸை நான் வாபஸ் வாங்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறவே குமரவேல், சக்திவேல், கோமதி, பாண்டியன், சரவணன், கதிர் என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கேஸை வாபஸ் வாங்க என்ன காரணம்
கேஸை வாபஸ் வாங்க என்ன காரணம் என்று நீதிபதி கேட்க, தப்பு செய்தவரே தப்ப ஒத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அது நடந்துவிட்டது. அதன் பிறகு அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க நான் விரும்பவில்லை. அதற்காக இவரை நான் மன்னித்துவிட்டேன் என்றெல்லாம் அர்த்தம் இல்லை. இந்த பிரச்சனையில் எங்களுடைய ரெண்டு குடும்பமும் சம்பந்தப்பட்டிருக்கு. அதனால், வீட்டில் இருப்பவர்களை வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று தான் இந்த முடிவை எடுத்தேன் என்றார்.
மேலும், எனக்கு நடந்தது பெரிய துயரம் தான். ஆனால், இவன் ஜெயிலுக்கு சென்றுவிட்டால் அதைவிட பெரிய துயரத்தை அவனுடைய குடும்பம் அனுபவிக்கும். அதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தான் இந்த கேஸை நான் வாபஸ் வாங்குறேன் என்றார். அரசி பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த குமரவேலுவிற்கு இது சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
அரசி காலில் விழுந்த குமரவேல்
இந்த நிலையில் தான் இனி இந்த வாரம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ன நடக்க போகிறது என்பது தொடர்பான புரோமோ வீடியோ வெளியானது. அதில் முதல் காட்சியாக கேஸை வாபஸ் பெற்ற அரசியின் காலில் விழுந்து குமரவேல் கதறி அழுதார். மேலும், தன்னை மன்னித்து விட வேண்டும் என்றார். அதோடு நீ கேஸை திரும்ப பெறுவ என்று நான் நினைக்கவில்லை என்று கதறி அழுதுக் கொண்டிருந்ததை குமரவேலுவின் அப்பா சக்திவேல் ஆத்திரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். பாண்டியன் அதிர்ச்சியில் இருந்தார். அரசியோ என்ன செய்வதென்று இருந்தார்.
மீண்டும் சதீஷூக்கும், அரசிக்கும் திருமணமா?
அடுத்த காட்சியாக பாண்டியனின் அக்கா, மீண்டும் வீட்டிற்கு வந்து சதீஷிற்கும், அரசிக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்து பேசினார். இதைக் கேட்டு அரசி அதிர்ச்சி அடைந்த நிலையில் இதைப் பற்றி அரசி தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லி அரசியிடம் கேட்டார். பதிலுக்கு அரசி என்ன முடிவு எடுக்க போகிறார்? சதீஷை திருமணம் செய்து கொள்ள அரசி சம்மதம் தெரிவிப்பாரா அல்லது மனம் திருந்திய குமரவேலுவை முறைப்படி திருமணம் செய்து கொண்டு அவரை கணவனாக ஏற்றுக் கொள்வாரா என்பது பற்றி இனி வரும் நாட்களில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
உண்மையில், அரசி மற்றும் குமரவேலுவிற்கு தான் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும், அரசி தற்கொலை செய்து கொள்வது போன்று ஒரு சில யூடியூப் சேனல்களில் புரோமோ காட்சிகள் வெளியாகி வருகிறது. இதன் மூலமாக இனி வரும் நாட்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் புதிய திருப்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.