மக்கள் தொகை கணக்கெடுக்கிறாங்க என்று பொய் சொல்லி ஆதார் கார்டு கேட்கும் சரவணன்
Saravanan Asking Family Members Aadhar Card : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஒரு விஷயத்தில்கூட உண்மையில்லாதவளை திருமணம் செய்துவிட்டேனே என சரவணன் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
14

Image Credit : Jio Hot Star
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தீபாவளி கொண்டாட்டத்தில், குடும்பத்தினர் அனைவரும் விருந்து உண்டு, பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். தல தீபாவளிக்கு புறப்படவிருந்த பழனிவேலுக்கு பாண்டியன் வேலை கொடுத்தார்.
24
Image Credit : Jio Hot Star
சரவணன் அண்ட் தங்கமயில்
சரவணன், தங்கமயிலிடம் வயது குறித்த சந்தேகத்தால் ஆதார் கார்டை கேட்கிறார். ஆனால் தங்கமயில், எதற்கு மாமா எனக் கேட்டு மழுப்பலாகப் பேசி சமாளிக்கிறார். இதனால் சரவணனுக்கு சந்தேகம் வலுக்கிறது.
34
Image Credit : Jio Hot Star
தன்னை விட வயதில் மூத்தவர்
வயது வித்தியாசத்தில் பொய் சொல்கிறாயோ என சரவணன் கேட்க, மழுப்புகிறார் தங்கமயில். உன்னை விட 2 வயது குறைவுதான் என மயில் கூற, நான் அப்படி சொல்லவே இல்லையே என சரவணன் மடக்குகிறார்.
44
Image Credit : Jio Hot Star
தங்கமயில் ஆதார் கார்டு
ஆதார் கார்டை கேட்ட சரவணனிடம், பிறகு தருகிறேன் எனக்கூறி தங்கமயில் தப்பிக்கிறார். இதனால் மனமுடைந்த சரவணன், உண்மையில்லாதவளை திருமணம் செய்துவிட்டேனே என வருந்துகிறார்.
Latest Videos