- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Pandian stores 2, S2 E696: ஒரே நாளில் மாறிய கதை! கோமதி வீட்டிற்கு செல்லும் முத்துவேல்! பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய கதை.!
Pandian stores 2, S2 E696: ஒரே நாளில் மாறிய கதை! கோமதி வீட்டிற்கு செல்லும் முத்துவேல்! பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய கதை.!
Pandian Stores 2, தாய் வீட்டில் இருந்து கண்ணீருடன் வெளியேறும் கோமதி, உறவு சேராது என வருந்துகிறார். மறுபுறம், முத்துவேலின் தாய் செண்டிமென்டாக பேசி கோமதி வீட்டிற்கு விருந்துக்கு செல்ல சம்மதிக்க வைக்கிறார். இந்த தகவலால் கோமதி பெரும் மகிழ்ச்சி அடைகிறார்.

கண்ணீருடன் வெளியேறிய கோமதி.!
இன்றைய எபிசோட் முத்துவேல் வீட்டில் இருந்து கோமதி வெளியே வருவதில் இருந்து தொடங்குகிறது. ராஜியும் கோமதியும் கனத்த இதயத்துடன் வெளியேறினர். காவல்நிலையத்திற்கு வந்து ஆதரவு அளித்ததால், மீண்டும் ஒன்று சேருவோம் என்ற நம்பிக்கையில் வந்ததாக கோமதி அழுதுகொண்டே வெளியேறினார். தான் ஆசைப்பட்டது எதுவுமே நடக்காது என கோமதி வருத்தத்துடன் புலம்பியடி தாய் வீட்டில் இருந்து வெளியேறினார். அப்போது கடையில் இருந்து பாண்டியன் மற்றும் சரவணன் வந்ததால் கோமதி அதிர்ச்சியுடன் செய்வது அறியாமல் தவிக்கிறார்.
பாண்டியனிடம் உண்மையை சொன்ன கோமதி
பின்னர் வீட்டுக்கு வந்த பாண்டியனிடம், தான் அண்ணன் குடும்பத்துடன் தான் உறவாட போகவில்லை என கூறி தானாகவே அவரிடம் ஆஜராகிறார். நான் தான் எதுவுமே கேட்கவில்லையே என பாண்டியன் கூற, கோமதி ஏதேதோ பேசுகிறார். மேலும் நன்றி சொல்லிவிட்டு அவர்களை சாப்பிட கூப்பிட சென்றதாகவும் கோமதி தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மீனா, அவர்கள் என்ன சொன்னார்கள் என கேட்டார். அதற்கு கோமதி, தனது அண்ணன்கள் இருவரும் சாப்பிட வரமாட்டேன் என கூறிவிட்டதாக தெரிவித்தார். மனசு பதறும் வகையில் ஏதேனும் கூறினார்களா என சரவணன் கேட்க, ராஜியும் கோமதியும் உடனடியாக மறுத்தனர். காவல் நிலையத்திற்கு வந்ததால், மீண்டும் அவர்களுடன் உறவு கொண்டாடுவது சரியாக இருக்காது எனவும், அதனை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது என்றும் பாண்டியன் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு பிரச்சினை என்றால் நாமும் போகலாம் என்று கூறிய பாண்டியன், இனிமேல் உங்க அண்ணன் முத்துவேல் வீட்டில் சென்று நிற்க வேண்டாம் என கூறினார்.
மயில் மீது கோவப்பட்ட கோமதி
பின்னர், இன்று தங்க மயில் கடைக்கு வந்த விஷயத்தை தனது அம்மா கோமதியிடம் கூறுகிறார் சரவணன். அதற்கு, வீட்டிற்கு வந்து அசிங்கப்படுத்தியது போதாது என்று கடைக்கு வந்தும் அசிங்கப்படுத்த வேண்டுமா என கொந்தளிக்கிறார் கோமதி. உடனடியாக குறுக்கிட்ட பாண்டியன், இனிமேல் வரக்கூடாது என்று சொல்லி மயிலை அனுப்பிவிட்டேன் எனவும் அதுகுறித்து பேசவேண்டாம் என்றும் கூறுகிறார் பாண்டியன்.
இறங்கி வந்த முத்துவேல்.! கோவப்பட்ட ;சக்திவேல்.!
மறுபுறம் முத்துவேல் குடும்பத்தினர் சாப்பிட செல்கின்றனர். சக்திவேல் அம்மா மட்டும் வரமாட்டேன் என கூறுகிறார். தனக்கு மனசு சரியில்லை என்று அவர் கூறியதும் முத்துவேல் மற்றும் சக்திவேல் அதிர்ச்சி அடைகின்றனர். உன் அருமைப் பொண்ணு வீட்டுக்கு சாப்பிட போகனும் அவ்வளவு தானே, அதெல்லாம் முடியாது என அப்போது சக்திவேல் தெரிவிக்க, போனால் என தப்பு என அவருடைய தாயார் கேட்கிறார். பிரச்சினை என்று வந்தால் போய் நிற்போம் ஆனால், சாப்பிடுவதற்கு போகமுடியாது என முத்துவேல் தெரிவிக்கிறார். தினமும் போக சொல்லவில்லை, ஒருதடவை போய் கைநனைத்தால் ஒன்று ஆகிவிடாது எனவும் சக்திவேல் அம்மா தெரிவிக்கறார். குடும்பம் ஒன்றாவதை விரும்பாத சக்திவேல் கோமதி வீட்டிற்கு சாப்பிட செல்வதற்கு தடை போடுகிறார். ஆனால், செண்டிமென்டாக பேசிய சக்திவேல் அம்மா, நீங்க இருவரும் ஒருமுறை கோமதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறியதுடன் அதில் உறுதியாகவும் இருக்கிறார்.
கையெடுத்து கும்பிட்ட கோமதியின் அம்மா
சக்திவேல் மனைவியும், முத்துவேல் மனைவியும் அதையே சொல்ல அங்கு அமைதி நிலவுகிறது. மேலும் முத்துவேல் அம்மா, முக்திவேலை கையெடுத்துக் கும்பிட்டு கோமதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்ததால் சக்திவேலால் ஒன்றுமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கோமதி வீட்டிற்கு சாப்பிட செல்லலாம் என முத்துவேல் தெரிவித்தார். அதற்கு குடும்பமே சந்தோஷத்தில் குதிக்க, சக்திவேலும் அவருடைய மகன் குமாரும் கோபம் அடைகின்றனர். இந்த ஒருதடவை மட்டும் அம்மாவுக்காக செல்வோம் என்றும், அந்த தகவலை கோமதியிடம் சொல்லிவிடவும் என்று முத்துவேல் பழனியிடம் கூறுகிறார்.
கடவுளுக்கு நன்றி சொல்கிறார் கோமதி
மறுநாள், கோமதி தனது வீட்டில் மகளுடன் சமையல் செய்துகொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பழனி வீட்டில் உள்ளோர் அனைவரையும் கூப்பிடுகிறார். பின்னர், மத்தியானம் பிரியாணி செய்வோம் எனவும், முத்துவேல் மற்றும் சக்திவேல் ஆகியோர் விருந்துக்கு வருகிறார்கள் எனவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார். இதனால் கோமதி சந்தோஷத்தில் குதிக்கிறார். பின்னர் கடவுளுக்கு நன்றி சொல்கிறார் கோமதி...

