- Home
- Cinema
- தொலைக்காட்சி
- S2 E692 Pandiyan Stores 2: "கொலை செய்யக்கூட தயங்கமாட்டேன்!" - தங்கமயில் குடும்பத்தை எச்சரித்த கோமதி!
S2 E692 Pandiyan Stores 2: "கொலை செய்யக்கூட தயங்கமாட்டேன்!" - தங்கமயில் குடும்பத்தை எச்சரித்த கோமதி!
Pandian Stores 2 S2 E692: பழனி வீட்டில் ஏற்பட்ட சண்டையால், இரவில் பேய் வேடமிட்டு தம்பிகளைப் பயமுறுத்த முயன்று அடி வாங்குகிறார். சோகத்தில் இருக்கும் சரவணனுக்கு ஆறுதல் கூற, மறுபுறம் கோமதி, தங்கமயிலின் குடும்பத்தை அழிக்கப் போவதாக ஆவேசப்படுகிறார்.

பழனி வீட்டில் வெடித்த விவாதம்
இன்றைய எபிசோட் பழனியின் வீட்டில் தொடங்குகிறது. பழனியின் மனைவி, பழனி மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைக்கிறார். தான் அக்கா-தம்பி உறவில் குறுக்கிடவில்லை என்றாலும், பிரச்சினை முடிந்த பிறகும் பழனி எப்போதும் அங்கேயே இருப்பதால் மீண்டும் மனஸ்தாபம் ஏற்படுமோ எனப் பயப்படுவதாகக் கூறுகிறார். இதற்கு ஆதரவு தெரிவித்த சக்திவேல், உறவுகள் எதுவாக இருந்தாலும் ஒரு அளவு இருக்க வேண்டும் என்று பழனிக்கு அறிவுரை கூறுகிறார்.
நடுநிசியில் பழனியின் 'நைஸ்' எஸ்கேப்
அக்கா கோமதி வீட்டிற்குச் சென்று தூங்குவதாகப் பழனி கூற, அதற்குச் சக்திவேல் திட்டவட்டமாக மறுத்துவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பழனி தன் மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு உள்ளே செல்கிறார். பின்னர், அனைவரும் தூங்கிய பிறகு யாருக்கும் தெரியாமல் அக்கா வீட்டிற்குச் செல்லத் திட்டமிடுகிறார். அந்த நள்ளிரவிலும் சக்திவேல் தன் மகள் எழுதிய கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படித்துக் கலங்கிக் கொண்டிருக்கிறார்.
பேய் வேடத்தில் வந்த பழனிக்குக் கிடைத்த 'தர்மஅடி'
பாண்டியன் தம்பிகள் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களைப் பயமுறுத்தப் பழனி வெள்ளை நிறப் போர்வையைப் போர்த்திக்கொண்டு பேய் போல வருகிறார். இதைக் கண்டு பயந்த தம்பிகள், அவரைப் பிடித்து 'தர்மஅடி' கொடுக்கின்றனர். பின்னர் அது பழனி என்று தெரிந்ததும் அனைவரும் சிரிக்கின்றனர். தான் தம்பிகளுடன் தூங்க வந்ததாகப் பழனி கூறுகிறார்.
சரவணனைத் தேற்றும் தம்பிகள்
சோகத்தில் இருக்கும் சரவணனுக்குப் பழனியும் தம்பிகளும் ஆறுதல் கூறுகின்றனர். சரவணனைச் சகஜ நிலைக்குக் கொண்டு வரப் பழனி ஆடிப் பாடி கலகலப்பை உண்டாக்குகிறார். அனைவரும் தூங்கிய பிறகு, தங்கமயில் சரவணனுக்குத் தொடர்ந்து போன் செய்கிறார். ஆனால், சரவணன் அதனை எடுக்காததால் தங்கமயில் மிகுந்த கவலையுடன் உறங்கச் செல்கிறார்.
கதிர் - ராஜி இடையிலான ரொமான்ஸ்
அடுத்த நாள் காலையில், கதிர் மற்றும் ராஜி இடையே அன்பான உரையாடல் நிகழ்கிறது. முந்தைய நாள் ராஜி கேட்ட ஒரு கேள்வி ("நீ ரூமில் இருந்தால் மட்டும் என்ன ஆகப்போகிறது?") தன்னை அவமானப்படுத்தியது போல் இருந்ததாகக் கதிர் கூறுகிறார். அப்போது திடீரென மீனா உள்ளே வர, கதிர் வெட்கப்பட்டு அங்கிருந்து நகர்வது ரசிக்கும்படி இருந்தது.
கோமதியின் ருத்ரதாண்டவம் மீனாவும் ராஜியும்
தங்கமயிலின் பொருட்களைத் திருப்பி அனுப்புவது பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர். பொருட்களை அனுப்பினால் அவர்கள் மீண்டும் ஏதேனும் பிரச்சினை செய்வார்களா என ராஜி சந்தேகிக்கிறார். அப்போது அங்கு வந்த கோமதி, கடும் கோபத்துடன் பேசுகிறார். "என் அக்காவுக்காக எதையும் செய்வேன், மயிலைக் கொலை செய்யக் கூடத் தயங்க மாட்டேன்" என்று கொக்கரிக்கிறார். பங்கஜம் குடும்பத்தில் ஒரு ஆள் கூட மிஞ்சக்கூடாது, தங்கமயில் இருந்த அடையாளமே தெரியக்கூடாது என்று ஆவேசப்படுகிறார்.

