- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Perfume அடிச்சு காலி பண்ணிட்டு; மனைவியிடம் கெஞ்சும் செந்தில் – ரூ.10 ஆயிரத்துக்கு Perfume வாங்க பிளான்!
Perfume அடிச்சு காலி பண்ணிட்டு; மனைவியிடம் கெஞ்சும் செந்தில் – ரூ.10 ஆயிரத்துக்கு Perfume வாங்க பிளான்!
Pandian Stores 2 Promo Video : செந்திலுக்கு அரசு வேலை கிடைத்ததைதொடர்ந்து நாளுக்கு நாள் அவரது அட்ராசிட்டி தாங்க முடியவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோவில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

செந்தில் மற்றும் மீனா
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது செந்தில் மற்றும் மீனா, கதிர் மற்றும் ராஜீயின் காதல் காட்சிகளில் அடிக்கடி சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. சீரியல் டிஆர்பி பட்டியலில் சரிவை சந்தித்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்னும் கம்பீரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இன்றைய புரோமோவில் செந்தில் தனது வாசனை திரவியத்தைதேடிக் கொண்டிருக்கும் நிலையில், அது தான் ஏற்கனவே காலி ஆகிவிட்டது. அதனால், நான் குப்பை தொட்டியில் போட்டுவிட்டேன் என்று மீனா, சொல்ல, உடனே உன்னுடைய வாசனை திரவியத்தை கொடு என்று கேட்டு வாங்கி அதிலேயே செந்தில் குளித்தார்.
ராஜீ மற்றும் கதிர்
அதே நறுமணத்தோடு வெளியில் வர தனது அப்பாவிடம் திட்டும் வாங்கிக் கொண்டார். மேலும், முதல் மாத சம்பளம் வரவும் ரூ.10 ஆயிரத்திற்கு வாசனை திரவியங்கள் வாங்கி குவிக்க போகிறேன் என்று தனது அப்பாவிடம் சவால் விடுகிறார். இது ஒரு புறம் இருக்க, கதிர் மற்றும் ராஜீயின் காதல் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ராஜீ தனது திருமணம் குறித்த உண்மையை வெளிப்படுத்திய நிலையில் கதிர் எந்த தவறும் செய்யவில்லை என்பதை பாண்டியன் நன்கு புரிந்து கொண்டார். இதன் காரணமாக கதிரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார். அடுத்ததாக ராஜீ தனது அப்பாவை சந்தித்து தனது ஆதங்கத்தையும், தனக்கு என்ன நிலையில் திருமணம் நடைபெற்றது என்பதையும் கண்ணீர்மல்க வெளிப்படுத்தினார்.
ராஜீ தனது அப்பாவை சந்தித்து பேசினார்
ராஜீ தனது அப்பாவை சந்தித்து பேசிய நிலையில் சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவருக்கும் இடையில் மோதல் முற்றியது. இதற்கு மாரியும் உடந்தையா இருந்துள்ளார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய புரோமோ முடிவுற்றது. இது இன்றைய 551ஆவது எபிசோடில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.