- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ராஜீயின் பாசத்தால் அண்ணன் தம்பிக்குள் வெடிக்கும் பூகம்பம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நாளை நடப்பது என்ன?
ராஜீயின் பாசத்தால் அண்ணன் தம்பிக்குள் வெடிக்கும் பூகம்பம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நாளை நடப்பது என்ன?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்பா மகள் பாசம் ; அண்ணன் தம்பிக்கிடையில் வெடிக்கும் பூகம்பம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு சிறுசுகள் முதல் பெரியவர்கள் வரையில் எத்தனையோ பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதிலேயும் கதிர் மற்றும் ராஜீக்கு என்று தனி கூட்டமே உண்டு. எப்பவுமே அப்பா பேச்சை கேட்காத கதிரை ரசிகர்கள் விமர்சிப்பது வழக்கம். ஆனால், தன்னை திருமணம் செய்து கொண்டு தன்னையும் தனது குடும்ப மானத்தையும் காப்பாற்றிய கதிர் பற்றி வெளிப்படையாக ராஜீ கூறியதைத் தொடர்ந்து கதிர் மீது பாசம் சாஸ்தியாகிவிட்டது. எப்போது கதிரை திட்டிக் கொண்டு இருக்கும் பாண்டியன் ராஜீ கூறியதைக் கேட்டு மெய் மறந்து நின்றுவிட்டார்.
அப்பாவிடம் மன்னிப்பு கேட்ட ராஜீ
இதுவரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது 549 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் எபிசோடு வரையில் ராஜீயின் நகை மேட்டர் தான் இரு வீட்டிலும் பூகம்பமாக வெடித்தது. அப்போது ராஜீ தனது திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசவே அவரது அப்பா சக்திவேல் அமைதியானார். அதுவரையில் பாண்டியனை பழிதீர்க்க துடித்துக் கொண்டிருந்த சக்திவேலுவிற்கு அதன் பிறகு அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ
இந்த நிலையில் தான் இனி இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோடுகளில் ராஜீ தனது அப்பாவை தனியாக சந்தித்து பேசும் சூழல் ஏற்படுகிறது. அப்பா நீங்கள் இனிமேல் என்னுடைய கல்யாணத்தை வைத்து அத்தையின் குடும்பத்தை பழி தீர்க்குறேன் என்று எதுவும் செய்ய கூடாது. அண்ணன் எப்படியும் ஜெயிலிலிருந்து வெளியில் வந்துவிடுவான் என்று பாசத்தோடு பேசிக் கொண்டிருப்பதை சக்திவேல் பார்த்துவிடுகிறார்.
அதன் பிறகு கோபத்தோடு வீட்டிற்கு வரும் சக்திவேல் தனது அண்ணனிடம் அப்பாவும், மகளும் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். இனி மருமகனை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுங்கள், என்னுடைய மகன் மட்டும் ஜெயிலில் இருக்கட்டும் என்று ஆக்ரோஷமாக பேசுகிறார். தம்பி இப்படி பேசுவதைக் கேட்டு பொருத்துக் கொள்ள முடியாத முத்துவேல் நிறுத்து வாய்க்கு வந்தபடி எதுவும் பேசாதே என்று சத்தம் போடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை நாளைய எபிசோடில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.