MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Pandian Stores 2: பாவம்தான் இளஞ்சோடிகள்.! போட்டுத்தாக்கும் மீனா.! ஈடுகொடுக்க முடியாத செந்தில்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இனி இப்படித்தான்.!

Pandian Stores 2: பாவம்தான் இளஞ்சோடிகள்.! போட்டுத்தாக்கும் மீனா.! ஈடுகொடுக்க முடியாத செந்தில்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இனி இப்படித்தான்.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இல், சென்னையில் கதிரின் திடீர் முடிவு ராஜியை காயப்படுத்த, மறுபுறம் பாண்டியனின் கோபம் கோமதியை தாக்குகிறது. மீனாவின் ஈகோ செந்திலுடனான உறவில் புதிய சிக்கலை உருவாக்குகிறது. இது  பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பெரும் புயலை சந்திக்கிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 06 2026, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சென்னையின் சாரல்... கதிரின் விலகல்!
Image Credit : Jiohotstar

சென்னையின் சாரல்... கதிரின் விலகல்!

வீட்டுச் சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்த ராஜி மற்றும் கதிர், சென்னைக்கு வந்த பிறகு ஒரு புதிய உலகைக் காண்கிறார்கள். மெரினா கடற்கரையின் அமைதியும், நகரத்தின் வேகமும் அவர்களுக்குள் ஒரு நெருக்கமான உணர்வை உருவாக்குகிறது. சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அந்தத் தருணங்களில் காதல் தீவிரம் அடைந்தாலும், கதிரின் மனதில் ஒரு 'பதட்டம்' ஒட்டிக்கொள்கிறது. "ஒரே அறையில் இருந்தால் பயிற்சியில் கவனம் சிதறும்" என்பது போல் கதிர் யோசிப்பதாக கதை செல்லுமாம். கதிரின் திடீர் முடிவு, ராஜியின் மனதை ரணமாக்குகிறது. காதலில் விழுந்த பெண்ணுக்கு, இந்தத் தற்காலிக விலகல் ஒரு பெரிய தவிர்ப்பாகத் தெரிவதால், அங்கே ஒரு மெல்லிய விரிசல் எட்டிப் பார்க்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பாண்டியனின் கோபம்... தகிக்கும் இல்லம்!
Image Credit : jiohotstar

பாண்டியனின் கோபம்... தகிக்கும் இல்லம்!

மறுபுறம், பாண்டியனின் இல்லம் இப்போது ஒரு போர்க்களமாக மாறியிருக்கிறது. மறைக்கப்பட்ட திருமண ரகசியம் பாண்டியனை ஒரு பிடிவாதக்காரராக மாற்றியுள்ளது. கடைக்கு வர முயன்ற கோமதியை, "நீ வந்தால் நான் வீட்டுக்கே வரமாட்டேன்" என அவர் தடுத்த நிறுத்தும் வகையில் கதைகளம் வரும் வாரத்தில் செல்லவுள்ளதாக தெரிகிறது. இது குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாசம் ஒருபுறம் இருந்தாலும், தன் கொள்கைக்காக அவர் வெளியே படுக்கும் அளவுக்குச் சென்றது, உறவுகளுக்கு இடையே ஒரு ஆழமான இடைவெளியை உருவாக்கும். இந்தச் சூழல் பாண்டியன்-கோமதி இடையிலான புரிதலை மீண்டும் கேள்விக்குறியாக்கும்.

34
செந்திலின் தவிப்பு... மீனாவின் அதிரடி ஈகோ!
Image Credit : Jiohotstar

செந்திலின் தவிப்பு... மீனாவின் அதிரடி ஈகோ!

இந்தக் குடும்பப் புயலில் சிக்கித் தவிக்கும் செந்தில், கோமதியின் வாக்குமூலத்தால் சற்றே நிம்மதி அடைகிறார். "தப்பு என் மீதுதான், மீனாவுக்கோ ராஜிக்கோ இதில் சம்பந்தமில்லை" என கோமதி உண்மையை உடைத்த பிறகு, செந்திலின் மனம் இளகுகிறது. ஆனால், அங்கேதான் மீனா தனது 'ஈகோ' ஆட்டத்தைத் தொடங்குகிறாள். பாண்டியன் எப்படி கோமதியைக் கையாளுகிறாரோ, அதே பாணியில் மீனா செந்திலிடம் காட்டும் அலட்சியம் கதையில் ஒரு சுவாரசியமான முரணைக் காட்டுகிறது. ஆண்களின் அதிகாரத்திற்குப் பெண்களின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை மீனாவின் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது.

44
திருப்பங்கள் நிறைந்த அடுத்த கட்டம்!
Image Credit : Jiohotstar

திருப்பங்கள் நிறைந்த அடுத்த கட்டம்!

தற்போது 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' ஒரு சினிமா கிளைமாக்ஸ் போன்ற பரபரப்பான கட்டத்தில் நிற்கிறது. ராஜியின் மனக்கசப்பு நீங்குமா? பாண்டியனின் கோபம் தணியுமா? அல்லது மீனாவின் பிடிவாதத்தால் புதிய சிக்கல்கள் உருவெடுக்குமா? என்கிற கேள்விகள் ரசிகர்களிடையே ஒரு 'திகில்' கலந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. உறவுகளின் சிக்கல்களையும், உணர்வுகளின் போராட்டத்தையும் அழகாகப் படம்பிடித்துக் காட்டும் இந்தத் தொடர், வரும் நாட்களில் இன்னும் பல அதிரடித் திருப்பங்களுக்குத் தயாராகி வருகிறது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சினிமா
திரைப்பட விமர்சனம்
தொலைக்காட்சி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
Pandian stores 2: பாக்கியத்தின் கொடூர முகம் இதுதான்! சென்னைக்கு சென்ற கூலிப்படை?
Recommended image2
Pandian Stores 2: யாருமே செய்யாத மேஜிக்! விஜய் டிவியின் ஒட்டுமொத்த ஸ்லாட்டையும் தட்டித்தூக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved