- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Pandian Stores 2 - ராஜீயை வீட்டை விட்டு அனுப்ப பார்க்கும் கதிர் :முத்துவேல் அண்ட் வடிவின் பாசப்போராட்டம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Pandian Stores 2 - ராஜீயை வீட்டை விட்டு அனுப்ப பார்க்கும் கதிர் :முத்துவேல் அண்ட் வடிவின் பாசப்போராட்டம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜீயை வீட்டை விட்டு அனுப்ப கதிர் நினைக்கும் நிலையில் ராஜீக்கு அதற்கு துளி கூட உடன்பாடில்லை. இந்த சூழலில் சீரியலில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ராஜீ தனது வீட்டிற்கு செல்வாரா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு குமாரவேல் வீட்டிற்கு வந்த அரசி எல்லா உண்மைகளையும் சொன்ன பிறகு பாண்டியன் தனது மகள் அரசியை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார். மேலும் குமாரவேல் பற்றியும் போலீஸில் புகார் கொடுக்க அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். இதைத் தொடர்ந்து நகை மேட்டரில் தனது கணவர் கதிர் மற்றும் அவரது குடும்பத்தினர் எந்த தவறும் செய்யவில்லை என்பதற்காக ராஜீ தனது கடந்த கால வாழ்க்கை பற்றி தெளிவாக குறிப்பிட்டார்.
அதில், தான் கண்ணன் என்பவனை காதலித்து திருச்செந்தூர் வரை சென்ற பிறகு அவன் நகை மற்றும் பணத்திற்காக தன்னை காதலித்து ஏமாற்றியதாக குறிப்பிட்டார். அப்போது அங்கு வந்திருந்த கதிர் தன்னையும், நமது குடும்ப மானத்தையும் காப்பாற்றவே பிடிக்காமலிருந்த போதும் கூட தன்னை திருமணம் செய்து கொண்டான் என்றார்.
விட்டை விட்டு அனுப்ப பார்க்கும் கதிர்
இதன் காரணமாக ஒரு முடிவுக்கு வந்த வடிவு, அரசி எப்படி அவரது அப்பா வீட்டிற்கு சென்றாரோ அதே போன்று ராஜீயை நமது வீட்டிற்கு அழைத்து வருவோம் என்று தனது கணவரிடம் கூறுகிறார். மேலும், கதிரும் அதற்கேற்ப பேசுகிறார். அதாவது, உனக்கு விருப்பம் இருந்தால் இப்போதே உன்னுடைய வீட்டிற்கு புறப்பட்டு செல்லலால் என்றார்.
மேலும், உனக்கு பிறக்க போகும் குழந்தை என்னை எப்படி கூப்பிடும் என்று வேற கூறி ராஜீயை கோபம் அடைய செய்தார். இது தொடர்பான காட்சிகள் ஏற்கனவே ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த சூழலில் தான் இந்த இரண்டையும் வைத்து பார்க்கும் போது ராஜீயின் அப்பா முத்துவேல் மற்றும் அம்மா வடிவு இருவரும் வந்து ராஜீயை தங்களது வீட்டிற்கு அழைக்கலாம் என்று தெரிகிறது.
தனது வீட்டிற்கே ராஜீ செல்வாரா?
ஆனால், அதற்கு ராஜீ விருப்பம் தெரிவிப்பாரா அல்லது அவர்களது வீட்டிற்கு சென்றுவிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். என்னதான ராஜீ மற்றும் கதிர் இருவருக்கும் பிடிக்காத கல்யாணமாக இருந்தாலும் ஆரம்பத்தில் இருவரும் எலியும், பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டார்கள். நாளடைவில் அந்த சண்டை காதலாக மாறியது. எனினும் இருவரும் இன்னும் ஒருவருக்கொருவர் தங்களது காதலை வெளிப்படுத்தவில்லை. ராஜீக்கு கதிர் என்றால் ரொம்பவே இஷடம். அதே போன்று தான் கதிருக்கும் ராஜீ என்றால் ரொம்பவே பிடிக்கும்.
இந்த சூழலில் ராஜீ தனது அப்பா, அம்மா கூப்பிட்ட பிறகு வீட்டிற்கு செல்வாரா அல்லது வேறேதும் சம்பவங்கள் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.