- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சரவணனுக்கு ஆறுதலாக இருந்த பாண்டியன்; டிராமாவை ஆரம்பித்த சுகன்யா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்!
சரவணனுக்கு ஆறுதலாக இருந்த பாண்டியன்; டிராமாவை ஆரம்பித்த சுகன்யா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்!
Pandian stands for his son Saravanan : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 563ஆவது எபிசோடில் குழந்தை இல்லை என்ற அதிர்ச்சியில் கடைக்கு வந்த சரவணனுக்கு பாண்டியன் ஆறுதலாக இருந்துள்ளார்.

குமரவேல், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் சீன் பற்றிய காட்சிகள் ஒளிபரரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் மாசமாக இருக்கும் மனைவிக்காக புடவை வாங்கி கொடுத்து கேக் எல்லாம் சரவணன் உள்பட குடும்பத்தோடு அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தனர். இதையடுத்து தான் தங்கமயிலின் செக்கப்பிற்காக மருத்துவமனைக்கு சென்றார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அரசி, பாண்டியன்
ஆனால், மருத்துவமனையில் தங்கமயிலை பரிசோதனை செய்த டாக்டர் மயில் கர்ப்பமே இல்லை. பிரக்னன்ஸி கிட் தவறான ரிப்போர்ட் கொடுத்துவிட்டது. நூற்றில் ஒன்று இந்த மாதிரி நடக்கும். உண்மையில் தங்கமயில் கர்ப்பமே இல்லை என்று கூறிவிட்டார். இதைக் கேட்ட ஒட்டு மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டிற்கு வந்து அனைவரும் அழுது கொண்டே இருந்தனர்.
தங்கமயில், சரவணன், தங்கமயில் கர்ப்பம் இல்லை
ஆனால், உண்மையில் தங்கமயில் கர்ப்பமாக இருந்து கரு கலைந்திருந்தால் கூட குடும்பத்தினர் சோகமாக இருப்பதும், அழுது கொண்டே இருப்பதிலும் ஒரு நியாயம் இருக்கு. இதில் கருவே ஃபார்ம் ஆகவில்லை. பிரக்னன்ஸி கிட்டை வைத்து மட்டும் செக் செய்து கொண்டு பார்த்துவிட்டு நான் மாசமாக இருக்கிறேன் என்று சொல்வதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும் மருத்துவரிடம் சென்று முதலில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
அதன் பிறகு உறுதி செய்ய வேண்டும். இது தான் நடைமுறை. இதற்கு குடும்பத்தினர் அழ வேண்டிய அவசியம் இல்லை. மேலும், தங்கமயில் வீட்டிற்கு வந்த போதே அவரை மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு பரிசோதனை செய்திருக்கலாம். அதைவிட்டு குடும்பமே அழுவது என்பது சரியில்லை. தங்கமயிலுக்கு மீனா மற்றும் ராஜீ என்று அனைவரும் ஆறுதல் சொல்கின்றனர். அதே போன்று கடைக்கு சென்ற சரவணனுக்கு பாண்டியன் ஆற்தல் கூறுகிறார். டீ கடைக்கு கூட்டிச் சென்று டீ வாங்கி கொடுத்து சமாதானப்படுத்துகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு
இது ஒரு புறம் இருக்க வழக்கம் போல சுகன்யா தனது கணவர் வீட்டில் நடக்கும் சம்பவத்தை எதிர் வீட்டில் சொல்லிவிட்டார். அதில் ஒரு சிலருக்கு வருத்தமாக இருந்தாலும், மற்றவர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர். ஜெயிலுக்கு சென்று வந்ததிலிருந்து குமரவேல் ஒரு மாதிரியாக இருப்பதாக குடும்பத்தினர் பேசிக் கொண்டனர்.
அதன் பிறகு வீட்டிற்கு வந்த பாண்டியனின் குடும்பத்தினரை சற்று சமாதானப்படுத்தினார். மேலும், மருத்துவமனையில் தங்கமயில் வீக்காக இருக்கிறார், நன்றாக சாப்பிட வேண்டும், நல்லா பாத்துக்கோங்க என்று சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர் குழந்தை இல்லை என்று சொல்லிவிட்டார் என்று பாண்டியனிடம் கூறி கோமதி அழுதார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய 563ஆவது எபிசோடு
தங்கமயிலை கூப்பிட்டு அவருக்கு ஆறுதல் கூறினார். சரவணன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை. அதை நினைத்து சற்று வருத்தப்பட்டார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 563ஆவது எபிசோடு முடிவடைந்தது. நாளை, சரவணன் மற்றும் தங்கமயில் தொடர்பான காட்சிகள் இடம் பெறும் என்று தெரிகிறது. முதலில் குடும்பத்தினர் அனைவரும் சரவணனிடம் பேசுவார்கள். அதன் பின்னர் சரவணன் மற்றும் தங்கமயில் தொடர்பான காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. அடுத்த எபிசோடுக்கு நாளை வரை காத்திருப்போம்.