- Home
- Cinema
- தொலைக்காட்சி
- குடும்பத்தோடு நடுத்தெருவுக்கு வந்த நிலா... சோழனின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட சேரன் - அய்யனார் துணை சீரியல்
குடும்பத்தோடு நடுத்தெருவுக்கு வந்த நிலா... சோழனின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட சேரன் - அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியலில் அண்ணனின் சதியால் நடேசனின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டு, அவர்கள் குடும்பத்தோடு நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ayyanar Thunai Serial Today Episode
அய்யனார் துணை சீரியலில் நடேசனும் அவருடைய மகன்களும், சேதமடைந்து கிடக்கும் வீட்டை சீரமைக்க வேலைகளை தொடங்கிய நிலையில், அப்போது அங்கு வந்த நடேசனின் அண்ணன், இந்த வீட்டின் மீது வழக்கு இருப்பதால் இங்கு எந்த வேலையும் பார்க்கக் கூடாது என சொல்கிறார். அதையும் மீறி வேலை பார்த்துக் கொண்டிருந்ததால், உடனடியாக போலீஸை அழைக்கும் சேரனின் பெரியப்பா, அங்கு போலீஸ் உடன் வந்து, வேலைகளை தடுத்து நிறுத்துகிறார். போலீஸும் வீட்டை சீல் வைக்க இருப்பதாக சொல்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
வீட்டை காலி பண்ண சொன்ன போலீஸ்
வீட்டுக்கு வந்துள்ள போலீஸ் அதிகாரிகள், 10 நிமிடம் டைம் தருகிறோம். அதற்குள் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துட்டு கிளம்புங்க என ஒரே போடாக போடுகிறார்கள். அதனைக் கேட்ட நடேசன், அதெல்லாம் காலி பண்ண முடியாது என அலப்பறை செய்கிறார். அவரின் செயலால் போலீஸ் மேலும் கோபமடைகிறார்கள். இதனால் உங்களுக்கு டைமெல்லாம் கிடையாது உடனே காலி பண்ணுங்க என சொல்லுகிறது போலீஸ். இதைக்கேட்ட சேரனின் பெரியப்பாவும், பெரியம்மாவும் சந்தோஷமடைகிறார்கள். எப்படியே நம்ம நினைச்சதை சாதித்துவிட்டோம் என்கிற சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
பதறிப்போன நிலா
மறுபுறம் வீட்டுக்குள் செல்லும் நடேசன், இது எங்க அப்பா எனக்கு கொடுத்த வீடு, நான் இங்க இருந்து போகமாட்டேன் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். போலீஸின் உத்தரவையும் மீற முடியாது என்பதால், எல்லோருமே என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு வழியே இல்லை என்பதால் அனைவரும் தங்கள் உடைமைகளை பேக் பண்ண ஆரம்பிக்கிறார்கள். அதே நேரத்தில் நிலாவும் ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வருகிறார். வீட்டு வாசலில் போலீஸ் இருப்பதை பார்த்து பதறிப்போகும் நிலா, வேகமாக வீட்டுக்குள் சென்று என்ன ஆச்சு என விசாரிக்கிறார்.
வீட்டை காலி பண்ணும் நடேசன் ஃபேமிலி
நிலாவுக்கு பிரச்சனை என்ன என்பது தெரியவருகிறது. அதன்பின்னர் நிலாவும் தன்னுடைய மூட்டை முடிச்செல்லாம் கட்டிக் கொண்டு வெளியேறுகிறார். இதையடுத்து போலீசார் வீட்டுக்கு பூட்டு போட்டு சீல் வைக்கிறார்கள். இவர்களை வெளியேற்றிய சந்தோஷத்தில் சேரனின் பெரியப்பாவும், பெரியம்மாவும் சிரிக்கிறார்கள். அதைப்பார்த்த நடேசனுக்கு கோபம் வருகிறது. அங்கிருந்து செல்லும் முன், மண்ணை வாரி எறிந்து நீங்கெல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க, நாசமா போயிருவீங்க என சாபம் விட்டுச் செல்கிறார்.
ஓட்டலில் தங்கும் நிலா
இதையடுத்து எங்கு செல்வதென்று தெரியாமல் அனைவரும் முழித்துக் கொண்டிருக்க, சோழன் அருகில் ஒரு ஓட்டல் இருப்பதாகவும், தற்போதைக்கு அங்கு தங்கிவிட்டு, அதன் பின்னர் என்ன செய்வதென்று யோசிப்போம் என கூறுகிறார். அந்த ஓட்டலில் இரண்டு ரூம் தான் இருக்கிறது. அதனால் ஒரு பிளான் போடும் சோழன், நிலாவும், நாமும் ஒரு ரூமில் தங்கிவிட்டு, மீதமுள்ள நால்வருக்கும் ஒரு ரூமை கொடுத்துவிடலான் என யோசிக்கிறார். அதற்குள் சேரன், நாம 5 பேரும் ஒரு ரூமில் தங்கிவிட்டு, நிலாவுக்கு ஒரு ரூமை கொடுத்துவிடலாம் என கூறுகிறார். தன்னுடைய அண்ணன் சதி பண்ணி ஏமாற்றிய சோகத்தில் இருக்கிறார் நடேசன். இதையடுத்து என்ன ஆச்சு என்பதை இனி வரும் எபிசோடுகளில் தெரிந்துகொள்ளலாம்.

