- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரோகிணியை விடாது கருப்பாய் துரத்தும் பிரச்சனை... சிறகடிக்க ஆசை சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்டா?
ரோகிணியை விடாது கருப்பாய் துரத்தும் பிரச்சனை... சிறகடிக்க ஆசை சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்டா?
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷை ஸ்கூலில் சேர்ந்த்துவிட்டுள்ள ரோகிணிக்கு தற்போது அடுத்த பிரச்சனை வந்துள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம்.

Siragadikka aasai serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி, ஓட்டலில் வேலை செய்வது பிடிக்காமல், ஸ்ருதியின் அம்மா, அடியாட்களை அனுப்பி பிரச்சனை செய்ய சொல்கிறார். அந்த ரெளடிகளும் அங்குள்ள நீத்துவிடம் வம்பிழுத்து அடாவடி செய்ததை பார்த்து கடுப்பாகும் ரவி, முத்துவை ஓட்டலுக்கு வரச்சொல்லி, அந்த அடியாட்களை அடித்து ஓட விடுகிறார். இறுதியாக அந்த அடியாட்களில் ஒருவனை பிடித்து யார் உன்னை அனுப்பியது என முத்து கேட்க, அதற்கு அவர் கேரளா கார அம்மா தான் அனுப்பி வைத்தார்கள் என உண்மையை உலறிவிடுகிறார். ஸ்ருதியின் அம்மா அனுப்பிய ஆட்கள் தான் அது என தெரியவருகிறது.
அம்மாவிடம் சண்டை போடும் ஸ்ருதி
பின்னர் வீட்டுக்கு செல்லும் ரவி அங்கு ஸ்ருதியிடம் சண்டை போடுகிறார். இதையடுத்து கடுப்பாகும் ஸ்ருதி, தன்னுடைய அம்மாவின் வீட்டுக்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். நீத்து தப்பான பெண்ணாகவே இருந்தாலும், நீங்கள் இதுபோன்று செய்வதால் வேண்டுமென்றே என்னையும் ரவியையும் பிரிப்பதற்கான வாய்ப்பு இருக்கு. தயவு செஞ்சு இனிமேல் இப்படியெல்லாம் செய்யாதீங்க என சொல்கிறார் ஸ்ருதி. மறுபுறம் வீட்டில் மீனாவும் முத்துவும் விளையாடிக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக விஜயா மீது தண்ணியை ஊற்றிவிடுகிறார் மீனா. இதனால் கோபமடையும் விஜயா, மீனாவை திட்டுகிறார். பின்னர் முத்து அங்கிருந்து நைசாக மீனாவை அழைத்துக் கொண்டு செல்கிறார்.
மனோஜுக்கு வந்த எதிர்பாரா அழைப்பு
கிரீஷ் படிக்கும் போர்டிங் ஸ்கூலிற்கு ஏசி வாங்க, அந்த பள்ளியை சேர்ந்த ஊழியர் ஒருவர் மனோஜின் கடைக்கு வருகிறார். அங்கு அவர் ஏசி வாங்கியதற்கு 20 சதவீதம் டிஸ்கவுண்டும் வழங்குவதாக கூறும் மனோஜ், அந்த ஊழியரிடம் பேசும்போது, தான் ஏராளமான டிகிரி படித்திருக்கும் விஷயத்தையும் கூறுகிறார். இதைப்பார்த்து ஆச்சர்யப்பட்ட அந்த நபர், நீங்கள் எங்கள் பள்ளியில் வந்து ஸ்பீச் கொடுக்க வருமாறு அழைக்கிறார். முதலில் தயங்கும் மனோஜ், இதுபோன்ற அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிவிடக் கூடாது என சொல்லி ஓகே சொல்கிறார். இதையடுத்து வீட்டில் வந்து ஸ்பீச்சுக்காக தயார் ஆகிறார் மனோஜ்.
கிரீஷின் ஸ்கூலுக்கு செல்லும் மனோஜ்
மனோஜ் கிரீஷின் ஸ்கூலுக்கு ஸ்பீச் கொடுக்க செல்லும் விஷயம் ரோகிணிக்கு தெரியாது. அது தெரிந்தால் நிச்சயம் ஷாக் ஆகிவிடுவார் ரோகிணி. அதுமட்டுமின்றி கிரீஷின் ஸ்கூலுக்கு மனோஜ் சென்றால் அங்கு அவரை கிரீஷ் பார்க்கவும் வாய்ப்பு உள்ளது. அவனை மனோஜ் பார்த்தால் கண்டிப்பாக வீட்டில் உள்ளவர்களிடமும் அதை சொல்லிவிடுவார். இதனால் ரோகிணிக்கு இனி செம ஆப்பு காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. கிரீஷின் ஸ்கூல் பற்றி முத்து மீனாவுக்கு தெரிந்தால் அவர்கள் அவனை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.