- Home
- Cinema
- தொலைக்காட்சி
- குணசேகரன் கேங்குக்கு விபூதி அடித்த நந்தினி... கடத்தப்படுகிறாரா தர்ஷன்? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
குணசேகரன் கேங்குக்கு விபூதி அடித்த நந்தினி... கடத்தப்படுகிறாரா தர்ஷன்? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Ethirneechal Thodargiradhu Serial : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் புர்கா அணிந்தபடி மண்டபத்திற்குள் வந்த நந்தினி, அடுத்து என்ன செய்தார் என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஒருபக்கம் தர்ஷன் கல்யாணம் யாருடன் நடக்கும் என்கிற பதற்றம். மற்றொரு பக்கம் ஜீவானந்தம், பார்கவி என்ன ஆச்சு என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர். இந்த நிலையில், மேலும் சில ட்விஸ்ட்டுகள் இனி வரும் வரும் எபிசோடுகளில் காத்திருக்கின்றன. ஜீவானந்தத்தை தேடிச் சென்ற ஜனனியை, தீர்த்துக் கட்ட ஆதி குணசேகரன் தன்னுடைய ஆட்களை அனுப்பி இருக்கிறார். அவர்களிடம் இருந்து ஜனனி நைஸாக எஸ்கேப் ஆகி விடுகிறார். பின்னர் ஜீவானந்தம் மற்றும் பார்கவியை தேடி ஒரு காட்டுப் பகுதிக்கு செல்கிறார் ஜனனி.
ஜனனியிடம் விசாரிக்கும் போலீஸ்
அப்போது அங்கு தேடுதல் பணியில் இருந்த போலீஸ் ஒருவர், அவரிடம் வந்து எதற்காக இங்கு வந்தீர்கள் என்று விசாரிக்கிறார். அவரிடம் தான் இங்கு சுற்றிப் பார்க்க வந்ததாக சொல்கிறார் ஜனனி. இங்கு இருப்பது டேஞ்சர், முதலில் இங்கிருந்து கிளம்புங்கள் என சொல்லி அனுப்பிவிடுகிறார் அந்த போலீஸ். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த பார்கவி, ஜனனியை பார்த்துவிடுகிறார். இருந்தாலும் போலீஸ் இருந்ததால் அவரால் ஜனனி உடன் செல்ல முடியாமல் போகிறது. பின்னர் காட்டுக்குள் பார்கவி செல்லும் போது ஜீவானந்தத்தின் உடைமை ஒன்றை பார்க்கிறார். அவர் உயிரோடு தான் இருக்கிறார் என்பது தெரிந்த உடன் அவரை மீண்டும் தேடிச் செல்கிறார் பார்கவி.
நந்தினியின் பிளான் சக்சஸ்
மறுபுறம் மண்டபத்தில் அன்புக்கரசி மற்றும் தர்ஷனுக்கு மேக் அப் போட வந்த பெண், நந்தினியை தன்னுடைய அசிஸ்டெண்ட் என கூறி மண்டபத்துக்குள் அழைத்துச் சென்றதை அடுத்து, அவர் ஒருவேளை நந்தினியாக இருக்குமோ என்கிற சந்தேகம் கதிருக்கு வருகிறது. ஆனால் அவர் கண்ணில் படாமல் தன்னுடைய வேலையை பார்க்க ஆயத்தமாகிறார் நந்தினி. அவர் புர்கா அணிந்திருப்பதால் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் அனைவரும் இருக்கிறார்கள். தர்ஷனை தனியாக விட்டுவிட்டு தனி அறையில் மேக் அப் போட செல்ல மறுக்கும் அன்புக்கரசியை எப்படியோ பேசி தனியாக அழைத்துச் சென்றுவிடுகிறார்கள்.
தர்ஷனை கடத்தப் போகிறார்களா?
இதையடுத்து தர்ஷனுக்கு தனி அறையில் மேக் அப் போடும் நந்தினி, தன்னுடைய முகத்தை தர்ஷனிடம் காட்டுகிறார். சித்தி நீங்களா என தர்ஷன் ஷாக் ஆன நிலையில், வாய மூடுடா என கூறும் நந்தினி, தர்ஷனிடம் பேசி அவரது மனதை மாற்ற முயற்சிக்கிறார். பார்கவியை அழைத்து வருவதில் சிக்கல் இருப்பதால், தர்ஷனை மண்டபத்தை விட்டு கடத்திவிடவும் வாய்ப்பு இருக்கிறது. அவரை கடத்திவிட்டால் இந்த கல்யாணம் திட்டமிட்டபடி நடக்க வாய்ப்பில்லை. அதனால் நந்தினி மற்றும் ஜனனியின் பிளான் அதுவாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இனி வரும் கட்டாயம் அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதி.