- Home
- Cinema
- தொலைக்காட்சி
- உண்மையை சொன்ன கார்த்திக் : கோபத்தில் கும்பாபிஷேகத்தை நிறுத்திய மாமியார்; சூடுபிடிக்கும் சீரியல்!
உண்மையை சொன்ன கார்த்திக் : கோபத்தில் கும்பாபிஷேகத்தை நிறுத்திய மாமியார்; சூடுபிடிக்கும் சீரியல்!
Most Awaited Twist in Zee Tamil Karthigai Deepam 2 Serial : கும்பாபிஷேகத்தை நடத்த வேறு வழியில்லாத சூழலில் கார்த்திக் தான் யார் என்ற உண்மையை சொன்ன நிலையில் அடுத்து என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் 2
கார்த்திகை தீபம் 2 சீரியலில் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தவும், பிரிந்திருந்த தனது 2 குடும்பத்தை ஒன்று சேர்த்து வைக்கவும் கார்த்திக் சென்னையிலிருந்து தனது தாத்தாவின் ஊருக்கு சென்றார். அங்கு மூடியிருந்த கோயிலை திறந்த தனது மாமாவின் கையால் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் என்று வாக்குறுதி கொடுத்து அத்தை சாமுண்டீஸ்வரியின் வீட்டில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். நாளடைவில் அத்தையின் நம்பிக்கையை பெற்று அவரது மகள் ரேவதியை திருமணமும் செய்தார்.
கோயில் கும்பாபிஷேகம்
ஆரம்பத்தில் ரேவதிக்கு கார்த்திக்கை பிடிக்கவில்லை என்றாலும் கூட, அதன் பிறகு கார்த்திக் யார் என்ற உண்மையை தெரிந்து கொண்டு அவரை காதலிக்க ஆரம்பித்தார். இப்போது இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கனவோடு ரேவதி இருக்கிறார். இந்த சூழலில் தான் ஏற்கனவே கும்பாபிஷேகம் நடைபெற இருந்த நிலையில் கார்த்திக்கின் அம்மா விபத்தில் உயிரிழந்தார். இதனால் கும்பாபிஷேகம் நின்றது.
யார் என்ற உண்மையை சொன்ன கார்த்திக்
அதன் பின்னர் எப்போதெல்லாம் கும்பாபிஷேகத்தை நடத்த பேச்சு அடிபடுகிறதோ அப்போதெல்லாம் காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோர் அதனை நிறுத்த எல்லா வேலைகளையும் செய்தார்கள். ஒரு கட்டத்தில் சாமியாடி வேட்டைக்கு சென்ற ராஜராஜனை கொலை செய்யவும் துணிந்தனர். ஆனால், அதில் சிக்கியது பரமேஸ்வரி தான். இப்படிப்பட்ட நிலையில் தான் கடைசியாக கோயிலில் பாம் வைக்கவும் துணிந்தனர்.
கும்பாபிஷேகத்தை நிறுத்த பிளான் போட்ட காளியம்மாள்
கும்பாபிஷேகத்தை நிறுத்த 2 இடங்களில் வெடிகுண்டு வைத்தனர். இதில் ஒரு இடத்தை காளியம்மாவே கார்த்திக்கிடம் சொல்லி அதனை எடுத்துவிட்டார். ஆனால், 2ஆவது வெடிகுண்டை ராஜராஜன் அணிந்திருந்த மாலையில் வைத்திருந்தார். அதை கண்டுபிடிக்க முடியாத நிலையில் தான் யார் என்ற உண்மையை கார்த்திக் சொல்ல முன் வந்தார். ரேவதி, பரமேஸ்வரி, கவுசல்யா, மயில்வாகனம் என்று எத்தனையோ பேர் சொன்னாலும் இதுதான் அதற்கான பதிலாக இருக்கும் என்று கூறி யார் என்ற உண்மையை சொல்லிவிட்டார்.
கும்பாபிஷேகத்தை நிறுத்திய சாமுண்டீஸ்வரி
இது தொடர்பான எபிசோடு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில், கார்த்திக் அத்தை என்னை மன்னித்துவிடுங்கள். ராஜா சேதுபதியின் உண்மையான பேரன் யார் என்று உங்களிடம் சொல்வதாக சொல்லியிருந்தேன். அது வேறு யாருமில்லை நான் தான் என்றார். அதனை கேட்ட சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைந்து கோயில் கும்பாபிஷேகத்தை நிறுத்தினர். ஒவ்வொரு முறையும் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது நான் அசிங்கப்படுவதோடு அவமானமும் படுகிறேன். இனிமேல் இந்த கோயில் கும்பாபிஷேகம் நடக்காது என்று கூறுகிறார்.
கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுமா?
கார்த்திக் கையோடு உங்களது அம்மாவை யார் கொலை செய்தது என்ற உண்மையையும் சொல்கிறார். ஆனால், அதையெல்லாம் சந்திரகலா நம்பவே இல்லை. பரமேஸ்வரி காலில் விழாத குறையாக கோயில் கும்பாபிஷேகத்தை நடத்துவது பற்றியும், தனது பேரனை பற்றியும் கூறுகிறார். ஆனால், அதற்கெல்லாம் சாமுண்டீஸ்வரி மசிவதாக இல்லை. அதோடு அந்த எபிசோடும் முடிந்தது. இனி தான் ஆட்டம் சூடுபிடிக்கும். அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.