- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரகுவுக்கு ஸ்கெட்ச் போடும் அன்பு; ஆனந்தியை துரத்தும் மித்ரா - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
ரகுவுக்கு ஸ்கெட்ச் போடும் அன்பு; ஆனந்தியை துரத்தும் மித்ரா - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்திக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸை கொடுத்தது ரகு தான் என்பதை கண்டுபிடிக்கிறார் அன்பு.

Singappenne serial Today Episode
சன் டிவியில் நம்பர் 1 சீரியலாக இருந்து வருவது சிங்கப்பெண்ணே சீரியல் தான். இதில் கடந்த வாரம் முழுக்க ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்ததும், பஞ்சாயத்தில் அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க சுயம்பு கங்கணம் கட்டிக் கொண்டு வந்ததை பார்த்தோம். இறுதியாக ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடித்து அவனை பஞ்சாயத்து முன் கொண்டுவந்து நிறுத்த உத்தரவிடப்பட்டது. கடந்த வாரம் முழுக்க சிங்கப் பெண்ணே சீரியல் அனல்பறக்க ஒளிபரப்பானதால், இதன் டிஆர்பி ரேட்டிங்கும் எகிறியது. அதன்படி இதுவரை இல்லாத அளவாக 11 புள்ளிகளுக்கு மேல் பெற்று கெத்து காட்டியது.
சிங்கப்பெண்ணே சீரியல் இன்றைய எபிசோடு
கர்ப்பத்திற்கு காரணமானவனை கண்டுபிடிக்க ஆனந்தி, சிங்கப்பெண்ணாய் கிளம்பி சென்னைக்கு வர அன்புவும் அவர் மீதுள்ள காதலால், அவருக்காக உதவ வருகிறார். இருவரும் சேர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்கள். அப்போது தன்னுடைய இந்த பிரச்சனைக்கு ரகு தான் முக்கிய காரணம் என்கிற உண்மையை போட்டுடைக்கிறார் ஆனந்தி. ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து அவன் தான் ஆனந்தியை மயங்க வைத்த விஷயமும் அன்புக்கு தெரியவருகிறது. இதனால் அவனை தேடி கண்டுபிடித்து நாலு எலும்பை உடைச்சா இதற்கு யார் காரணம் என உண்மையை சொல்லிவிடுவான் என அன்பு கூறுகிறான்.
ரகுவை தேடிச் செல்லும் அன்பு
அந்த ராஸ்கலை சும்மாவே விடக்கூடாது என ஜெயந்தி கூறியது. ரகு வீட்டில் இல்லாத விஷயத்தை அன்பு கூறுகிறான். ஆனால் அவன் வீட்டின் மேல் அவனுடைய பிரெண்டு ஒருத்தன் இருக்கான். அவனைப் போய் பிடித்து விசாரித்தால், விஷயம் தெரியும் அதற்காக தான் ஆனந்தி உடன் செல்கிறேன் என கூறுகிறார் அன்பு. ஆனந்தியிடம் ரகு வீட்டுக்கு கிளம்புகிறார் அன்பு, அவனுடன் முத்து மற்றும் ஜெயந்தி இருவருமே கிளம்பி செல்கிறார்கள். அப்போது அவர்களை மித்ரா காரில் பின் தொடர்ந்து வருகிறார். இதனை நோட் பண்ணிய அன்பு, அவரை திசை திருப்ப வேறு ரூட்டில் செல்கிறார்.
ஃபாலோ பண்ணும் மித்ரா
ரித்திகா - டயனா தன்னை கேலி செய்யும் போது அன்பு தனக்காக வந்து பேசியதாக ஆனந்தி கூறுகிறார். தற்போது திடீரென வந்து மித்ரா உனக்கு சப்போர்ட் பண்ணுகிறாள் என்றால் அதற்கு ஏதாச்சும் ஒரு காரணம் இருக்கும் என சொல்கிறார் ஜெயந்தி. இதையடுத்து ரகுவின் நண்பன் வீட்டுக்கு சென்று அவனிடம் ரகு பற்றி கேட்கிறார்கள். அவன் உண்மையை கூற மறுப்பதால், அடித்து கேட்கிறான் அன்பு. அவனிடம் தான் ஒரு போலீஸ் என்றும் அன்பு கூறுகிறான். இதையடுத்து ரகு இருக்கும் இடத்தை அவன் கூறினானா? ஆனந்தியின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும்.