- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மகேஷுக்கு விபூதி அடிச்சு உன் கல்யாணத்தையும் முடிக்க போறியா? ஆனந்தியை சீண்டும் கருணா - சிங்கப்பெண்ணே அப்டேட்
மகேஷுக்கு விபூதி அடிச்சு உன் கல்யாணத்தையும் முடிக்க போறியா? ஆனந்தியை சீண்டும் கருணா - சிங்கப்பெண்ணே அப்டேட்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Singappenne serial Today Episode
சன் டிவியில் சக்க போடு போட்டு வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் நாளுக்கு நாள் அதிரடி திருப்புங்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த வாரம் முழுக்க ஆனந்தி கர்ப்பமானதற்கு யார் காரணம் என்பதை அறிய பஞ்சாயத்து கூட்டப்பட்டு அதில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ஆனந்தி தன்னுடைய கர்ப்பத்திற்கு காரணமானவனை கண்டுபிடித்து பஞ்சாயத்து முன் கொண்டு வந்து நிறுத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சிங்க பெண்ணாய் கிளம்பி சென்னைக்குச் சென்ற ஆனந்தி தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை கண்டுபிடிக்க களமிறங்குகிறார்.
ஆனந்தியை சீண்டும் கருணாகரன்
இந்த நிலையில் இன்றைய எபிசோடில், தான் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு செல்கிறார் ஆனந்தி. அங்கு இருக்கும் கருணாகரன், ஆனந்தியிடம் தரக்குறைவாக பேசுகிறார். உங்க அக்கா கோகிலாவின் கல்யாணத்தை நடத்த வேலைக்கு வந்ததாக சொன்ன, அதே மாதிரி உன் அக்காவின் திருமணத்தை பெருசா சிறப்பா பண்ணியாச்சு. அப்புறம் எதுக்கு இங்க வந்த, ஊரிலேயே இருக்க வேண்டியதுதானே, உன்னுடைய தேவை எல்லாம் இன்னும் முடியவில்லையா என கேட்கிறார்.
கடுப்பாகும் ஆனந்தி
எப்படி மகேஷ் சாரை ஏமாற்றி, அவரிடமிருந்து கொள்ளையடித்து உன் அக்காவின் திருமணத்தை முடிச்சியோ... அதே மாதிரி உன்னுடைய கல்யாணத்தையும் மகேஷ் சார் தலையில நல்லா மொட்டை அடிச்சு முடிச்சிடலாம்னு வந்தியா எனக் கேட்கிறார். இதைக் கேட்டு கடுப்பான கோகிலா, போதும் சார் அவளே நொந்து போய் வந்திருக்கிறா அவளை நிம்மதியா வேல பாக்க விடுங்க என சொல்கிறார். இதற்கெல்லாம் அசராத கருணாகரன், என்ன ஆளாளுக்கு இவளுக்கு ரொம்ப சப்போர்ட் பண்றீங்க என கேட்கிறார்.
எண்ட்ரி கொடுக்கும் அன்பு
தொடர்ந்து பேசும் கருணாகரன், எப்பவுமே உன்னோட ரோமியோ தான உனக்கு சப்போர்ட்டா பேசுவாரு அவர் இன்னைக்கு வரலையா என நக்கலாக கேட்கிறார். ஒருவேளை உன் அக்கா கல்யாணத்தில் வேலை பார்த்ததால் களைப்புடன் இருக்கிறாரோ... இல்ல கல்யாண வேலைக்கு நடுவில் உன் கூட ரொமான்ஸ் பண்ணதில் ரொம்ப டயர்டு ஆகி இருப்பாரோ என எல்லைமீறி கருணாகரன் பேசும்போது மாஸாக எண்ட்ரி கொடுக்கிறார் அன்பு. அதன் பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.