MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • விடுதலையான புஷ்பா... சக்தியை பழிவாங்க ரங்கநாயகி செய்த சதி வேலை - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

விடுதலையான புஷ்பா... சக்தியை பழிவாங்க ரங்கநாயகி செய்த சதி வேலை - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நேற்றைய எபிசோடில் புஷ்பாவுக்காக ரங்கநாயகி சாட்சி சொல்ல வர சக்தி அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 08 2023, 03:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
meenakshi ponnunga serial

meenakshi ponnunga serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் புஷ்பாவுக்காக ரங்கநாயகி சாட்சி சொல்ல வர சக்தி அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, புஷ்பாவும் நீதிமணியும் கொலை முயற்சி நடந்ததாகச் சொல்லப்படும் நேரத்தில் தன்னுடன் இருந்ததாக ரங்கநாயகி சொல்ல, கோர்ட் அதை ஏற்றுக்கொள்கிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Zee Tamil meenakshi ponnunga serial

Zee Tamil meenakshi ponnunga serial

புஷ்பா மேல் சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கோர்ட் புஷ்பாவை விடுதலை செய்கிறது. இதுக்குத்தான் இந்த கேஸெல்லாம் வேண்டாம்னு சொன்னேன் என்று சொல்லும் மீனாட்சி, சக்தியிடம், உன்னால ரங்கநாயகி அம்மாவே மாறிட்டாங்க என்கிறாள். புஷ்பா சக்தியிடம், நான் தாண்டி உங்க அம்மாவை கொல்லப் பாத்தேன், உன்னால என்ன பண்ண முடிஞ்சது, உன்னை இன்னும் என்னல்லாம் பண்றேன் பாரு என்று சொல்கிறாள். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
meenakshi ponnunga serial

meenakshi ponnunga serial

பின்னர் வரும் நீதிமணி, நானும் புஷ்பாவும் தப்பே செய்யலை, எங்களை ஜெயில்ல வெச்சிட்டேல்ல உனக்கு இருக்கு என்று மிரட்டுகிறான். காரில் ஏறப் போகும் ரங்கநாயகி சக்தியைப் பார்த்து புன்னகைக்கிறாள். ரங்கநாயகி தான் அப்ரூவரை தப்பிக்க வைத்திருக்கிறாள் என்பது பார்வையாளர்களுக்கு தெரிய வருகிறது. அப்ரூவர் வரும் வழியில் ஒருவன் வலிப்பு வந்தது போல் நடித்து போலீஸை திசை திருப்பி அப்ரூவரை தப்ப வைத்திருக்கிறான். சக்தியை பழிவாங்க இது ரங்கநாயகி போட்ட திட்டம் என தெரிய வருகிறது.

44
meenakshi ponnunga serial

meenakshi ponnunga serial

அதை தொடர்ந்து சக்தி ரங்கநாயகியைக் கேள்வி கேட்கப் போக, மீனாட்சி சக்தியைத் தடுத்து நிறுத்தி, எதுவும் பேசக் கூடாது, வீட்டுக்குப் போகலாம் என்று அவளை ஜீப்பில் ஏறச் சொல்கிறாள். பிறகு சண்முகமும் சக்தியுடன் ஏறப் போக, புஷ்பா அவனை இழுத்துக்கொண்டு வந்து, இனிமே சக்தியும் இருக்க மாட்டா, அந்த வீடும் இருக்காது என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென வெளியேறிய மம்முட்டி... அவருக்கு பதிலாக ஜெயிலர் பட நடிகர் ஒப்பந்தம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Roja Selvamani: எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளுக்குப் உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரி vs ஜனனி மோதல் ஆரம்பம்... சவாலில் ஜெயிக்கப்போவது யார்?
Recommended image3
Siragadikka Aasai : பைனான்சியருக்கு ஆப்பு... வீட்டை மீட்க முத்துவுக்கு கிடைத்த புது ரூட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved