- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மதிவதினியை காப்பாற்றிய ஜனனி... கடைசியில் ட்விஸ்ட் வைத்த கிட்னி திருடன் தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது
மதிவதினியை காப்பாற்றிய ஜனனி... கடைசியில் ட்விஸ்ட் வைத்த கிட்னி திருடன் தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தேவசகாயம் மர்ம அறையில் மறைத்து வைத்திருக்கும் பெண் மதிவதினி என்பதை அறியும் ஜனனி, அவரை காப்பாற்ற அதிரடியாக களத்தில் இறங்கி உள்ளார்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வந்த வண்ணம் உள்ளது. தேவசகாயம் ஒரு கிட்னி திருடன் என்பதை அறிந்துகொண்ட ஜனனி, அவனிடம் இருந்து தப்பிக்க பிளான் போட்டு வருகிறார். தான் தப்பிப்பதோடு அங்கு அவுட் ஹவுஸில் சிக்கி இருக்கும் பெண்ணையும் காபாற்ற வேண்டும் என திட்டமிடுகிறார். அப்போது அந்த பெண் இருக்கும் அறையை ஜன்னல் வழியாக ஜனனி பார்த்துக் கொண்டிருக்க, உள்ளே இருந்த பெண் வெளியே ஓடி வந்து தேவசகாயத்திடம் சிக்கிக் கொள்கிறார். அப்போது தான் அந்த பெண் மதிவதினி என்பது தெரியவருகிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மதிவதினியை மீட்கும் ஜனனி
தப்பிச் செல்ல முயன்ற மதிவதினிக்கு டாக்டர்கள் மயக்க ஊசி போட்டு மீண்டும் ரூமில் அடைத்துள்ளனர். மயக்க ஊசி போட்டிருப்பதால் அவரது உடல் உறுப்புகளை உடனே எடுக்க முடியாது. அதனால் மருத்துவர்கள் காத்திருக்கிறார்கள். அப்போது தேவசகாயம் தான் வெளியே சென்றுவிட்டு வருவதாக சொல்லிவிட்டு காரில் கிளம்பிச் செல்கிறார். இதையெல்லாம் நோட்டமிட்ட ஜனனி, இதுதான் சரியான டைம் என முடிவெடுத்து, மதிவதினியை காப்பாற்ற களத்தில் குதிக்கிறார். அவர் தன்னுடைய ரூமில் இருந்து வேக வேகமாக அவுட் ஹவுஸ் நோக்கி செல்கிறார். கையில் கட்டையையும் எடுத்துச் செல்கிறார்.
குறுக்கே வந்த தேவசகாயம்
உள்ளே போனதும் அங்கிருந்த டாக்டர்களை கட்டையால் அடிச்சு விரட்டும் ஜனனி, அங்கு மயக்க நிலையில் இருக்கும் மதிவதினியை தட்டி எழுப்பி, எப்படியாவது இங்கிருந்து தப்பிச்சு போயிடலாம் என சொல்லி அழைத்துச் செல்கிறார். இருவரும் அந்த வீட்டின் கேட்டை நோக்கி ஓடும் போது எதிரே எமனாக வந்து நிற்கிறார் தேவசகாயம். அவரிடம் இருந்து ஜனனியும் மதிவதினியும் எப்படி தப்பித்தார்கள் என்பதை இன்றைய எபிசோடில் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். ஜனனி, தேவசகாயத்தை அடிச்சு போட்டுவிட்டு எஸ்கேப் ஆகியிருக்க கூடும். இல்லையெனில் அவர் இவர்களை மீண்டும் ஹவுஸ் அரெஸ்ட் செய்திருக்கக்கூடும்.
சக்திக்கு தெரியவரும் உண்மை
மறுபுறம் சக்தி, ஜனனியை போலீஸில் சிக்க வைத்த அமுதாவின் கணவரை கண்டுபிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்து அவரிடம் இருந்து உண்மையெல்லாம் தெரிந்துகொள்கிறார். தனக்கு பணம் தருவேன் என சொன்னதால், அமுதாவை பிளாக்மெயில் பண்ணி ஜனனிக்கு எதிராக பேச வைத்து, அதனை வீடியோவாக எடுத்து, பின்னர் அவரை தானே கழுத்தறுத்து கொலை செய்துவிட்டதாக கூறுகிறார். அவர்கள் 20 லட்சம் பணம் கொடுப்பேன் என சொன்னதால் இப்படி செய்ததாக சொல்கிறார். இதைக்கேட்ட சக்தி, நான் அந்த பணத்தை தருகிறேன். எனக்கு அந்த வீடியோ ஆதாரத்தை கொடு என டீல் பேசி இருக்கிறார்.
ஆதி குணசேகரன் போட்ட கண்டிஷன்
இதையடுத்து நேராக வீட்டுக்கு செல்லும் சக்தி, தன் அண்ணன் ஆதி குணசேகரனிடம் தனக்கு 20 லட்சம் பணம் தேவைப்படுவதாக கேட்கிறார். அதற்கு ஓகே சொல்லும் ஆதி குணசேகரன், அதற்கு முன் தனக்கு எதிராக நீங்கள் வைத்திருக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு பணத்தை வாங்கிக்கோ என சொல்கிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப் போய் இருக்கிறார் சக்தி. அவர் அண்ணன் கேட்ட ஆதாரங்களை எல்லாம் ஒப்படைப்பாரா? அமுதாவின் கணவரிடம் இருந்து அந்த வீடியோவை மீட்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

