MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஜனனி மேல் கைவைத்த தேவசகாயத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி - அனல்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது

ஜனனி மேல் கைவைத்த தேவசகாயத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி - அனல்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தன்னை நோட்டமிடுவதை கண்டுபிடித்த தேவசகாயம், அவரை எச்சரிக்க ரூமுக்கு சென்றிருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 11 2026, 10:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை ரூமில் போட்டு அடைத்து வைடத்திருக்கும் தேவசகாயம், அவருடைய ரூமில் வாக்கி டாக்கி இருப்பதை அறிந்து அதை எடுக்க வர, அப்போது ஜனனி தூங்கிக் கொண்டிருக்கிறார். அவர் தூக்க மாத்திரை போட்டிருப்பதால், அசந்து தூங்குவதாக எண்ணி மீண்டும் கீழே இறங்கி சென்றிருகிறார் தேவசகாயம். ஆனால் ஜனனி தூக்கமாத்திரையை போடாமல் வாயிலேயே வைத்திருந்து அதை கீழே துப்பிவிட்டு, அங்கிருந்து எப்படி தப்பிச் செல்லலாம் என பிளான் போடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
ஜனனி மீது சந்தேகப்படும் தேவசகாயம்
Image Credit : youtube/suntv

ஜனனி மீது சந்தேகப்படும் தேவசகாயம்

தேவசகாயம் கீழே சென்று அவுட் ஹவுஸில் உள்ள பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக வந்துள்ள டாக்டர்களிடம் பேசிவிட்டு மீண்டும் வீட்டுக்குள் வரும் வழியில், மேலே ஜனனியின் அறையை பார்க்கிறார். அப்போது அவரைப் பார்த்ததும் ஜனனி ஸ்கிரீனை இழுத்து மூடுகிறார். இதனால் உஷாரான தேவசகாயம் விறுவிறுவென வீட்டுக்குள் சென்று, மாடியில் இருக்கும் ஜனனியின் அறைக்கு செல்கிறார். தேவசகாயம் வருவதை அறிந்த ஜனனி, மீண்டும் பெட்டில் சென்று படுத்துக் கொள்கிறார். தேவசகாயம் கதவை திறந்து பார்க்கையில் ஜனனி, படுத்தபடியே இருக்கின்றார்.

Related Articles

Related image1
ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன ஜனனி... மகன்களை தலைமுழுகிய விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஹைலைட்ஸ்
Related image2
கடத்தல் மன்னன் தேவசகாயத்துக்கு ஜனனி வச்ச ஆப்பு... எதிர்பாரா ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
34
தேவசகாயத்தை அடித்த ஜனனி
Image Credit : youtube/suntv

தேவசகாயத்தை அடித்த ஜனனி

இதையடுத்து ஜனனியின் அருகே வரும் தேவசகாயம், அவர் கன்னத்தை தட்டுகிறார். அப்போதும் கண்விழிக்காமல் தூங்குவதுபோல் நடிக்கும் ஜனனியிடம், மயக்கமா, எல்லாம் நடிப்புனு எனக்கு தெரியும் ஜனனி, நீ ஜன்னல் வழியா பார்த்தேல்ல அதுவும் எனக்கு தெரியும் என சொல்கிறார். அப்போதும் கண்விழிக்காமல் இருக்கும் ஜனனி, பின்னர் சட்டென எழுந்து தன் கையில் இருக்கும் கத்திரியால் தேவசகாயத்தை குத்திவிட்டு, அங்கிருந்து தப்பித்து கீழே செல்கிறார். அவுட் ஹவுஸில் உள்ள பெண்ணை காப்பாற்ற வேகமாக சென்றுள்ளார் ஜனனி.

44
ஆதி குணசேகரன் எடுத்த முடிவு
Image Credit : youtube/suntv

ஆதி குணசேகரன் எடுத்த முடிவு

மறுபுறம் வீட்டில் நடந்த பிரச்சனைகளை ஆதி குணசேகரனிடம் கூறுகிறார் அறிவுக்கரசி. உங்க அம்மா செத்தா கூட நீங்க ஆம்பள புள்ளைங்க யாருமே கொள்ளிபோடக் கூடாதாம். அவங்களோட பாசக்கார மருமகளுங்க தான் எல்லாத்தையும் செய்யனுமாம் என அவர் சொல்ல. அதைக்கேட்டு டென்ஷன் ஆன ஆதி குணசேகரன், நானும் அதுக்கு ஏத்தமாதிரி தான் ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். நாளைக்கு காலையில எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டு சொல்றேன் என கூறுகிறார். அவர் எடுத்துள்ள முடிவு என்ன? வீட்டில் வெடிக்கப்போகும் அடுத்த பிரச்சனை என்ன? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
வேலையை தூக்கி எறியச் சொல்லும் சோழன்... நிலா எடுத்த முடிவு என்ன? அய்யனார் துணை சீரியலில் அதிரடி திருப்பம்
Recommended image2
சாட்சிகளை செல்லாக்காசு ஆக்கிய ரோகிணி... புதுகுண்டை தூக்கிப்போட்ட மனோஜ் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
மாமியாருக்கு செக் வைத்த மருமகன்! கார்த்திக்கின் மாஸ்டர் பிளான் - சிலை திறப்பு விழாவில் நடந்த அதிரடி ட்விஸ்ட்!
Related Stories
Recommended image1
ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன ஜனனி... மகன்களை தலைமுழுகிய விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஹைலைட்ஸ்
Recommended image2
கடத்தல் மன்னன் தேவசகாயத்துக்கு ஜனனி வச்ச ஆப்பு... எதிர்பாரா ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved