MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன ஜனனி... மகன்களை தலைமுழுகிய விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஹைலைட்ஸ்

ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன ஜனனி... மகன்களை தலைமுழுகிய விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஹைலைட்ஸ்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மயக்கம் போட்டு விழுந்ததை கண்டுகொள்ளாத மகன்களிடம் முக்கிய தகவல் ஒன்றை சொல்லி இருக்கிறார் விசாலாட்சி. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 10 2026, 03:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode Highlights
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode Highlights

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் இன்றைய எபிசோடில் ஜனனியின் ரூமுக்கு சென்று ஜூஸ் கொடுத்துவிட்டு வந்த வசந்தியிடம் உன்னுடைய வாக்கி டாக்கி எங்கே என தேவசகாயம் கேட்க, அவரோ, மறந்து ரூமிலேயே வச்சிட்டு வந்துட்டேன் சார் என சொல்கிறார். இதைக்கேட்டு கடுப்பான தேவசகாயம், வசந்தியின் கன்னத்தில் பளார் என அறைவிடுகிறார். அந்த வாக்கி டாக்கியை ஜனனி எடுத்து ஏதேனும் கேட்டிருப்பாரோ என சந்தேகிக்கும் தேவசகாயம் வேக வேகமாக மாடியில் உள்ள ஜனனியின் அறைக்கு செல்கிறார்.

25
தேவசகாயத்தை நம்ப வைத்த ஜனனி
Image Credit : youtube/suntv

தேவசகாயத்தை நம்ப வைத்த ஜனனி

அங்கு கதவை திறந்து தேவசகாயம் பார்த்த போது வாக்கி டாக்கி டேபிளில் இருக்கிறது. ஜனனி, தூங்கிக் கொண்டிருக்கிறார். பின்னர் அந்த வாக்கி டாக்கியை எடுத்துவிட்டு, ஜனனி அருகே வரும் தேவசகாயம், அவரின் கன்னத்தில் தட்டுகிறார். ஆனால் ஜனனி எழுந்திருக்கவில்லை. பின்னர் அங்குள்ள டேபிளில் இருக்கும் மாத்திரையை செக் பண்ணுகிறார். அதில் ஜனனி, தூக்க மாத்திரை ஒன்றை போட்டிருப்பதை கவனிக்கிறார் தேவசகாயம். இதனால் ஜனனி எதையும் கேட்டிருக்கமாட்டார் என்கிற நம்பிக்கையில் அங்கிருந்து கிளம்புகிறார்.

Related Articles

Related image1
தேவசகாயத்தின் பிளானை ஒட்டுக்கேட்ட ஜனனி... கதிரை கதிகலங்க வைத்த நந்தினி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
Related image2
கடத்தல் மன்னன் தேவசகாயத்துக்கு ஜனனி வச்ச ஆப்பு... எதிர்பாரா ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
35
ஜனனி எடுக்கும் முக்கிய முடிவு
Image Credit : youtube/suntv

ஜனனி எடுக்கும் முக்கிய முடிவு

தேவசகாயம் சென்றதும் கண்விழிக்கும் ஜனனி, தன் வாய்க்குள் வைத்திருக்கும் மாத்திரையை எடுத்து கீழே துப்புகிறார். எப்படியாவது நடந்துவிட வேண்டும் என மனதை ஒருநிலைப்படுத்திக் கொண்டு மெல்ல மெல்ல நடக்க ஆரம்பிக்கிறார் ஜனனி. பின்னர் ஜன்னல் வழியாக வெளியே அவர் எட்டிப் பார்க்கும் போது தேவசகாயம் டாக்டர் இருவருடன் பேசுவதை பார்க்கிறார். பின்னர் அவர்கள் இருவரும் அவுட் ஹவுஸுக்கு செல்கிறார்கள். அவர்களிடம் இருந்து அவுட் ஹவுஸில் உள்ள பெண்ணை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என முடிவெடுக்கிறார்.

45
வீட்டுக்கு வந்த விசாலாட்சி
Image Credit : youtube/suntv

வீட்டுக்கு வந்த விசாலாட்சி

இதையடுத்து விசாலாட்சி ஆஸ்பத்திரியில் இருக்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன. பிரசர் அதிகமானதால் தான் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறீர்கள் என சொல்லும் டாக்டர், உங்களை உங்க மகள்கள் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள் என சொன்னதும் எமோஷனல் ஆகிறார் விசாலாட்சி. பின்னர் வீட்டுக்கு கிளம்பிச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் வருவதைப் பார்த்த கதிர், அது சும்மா டிராமா போட்டுருக்கும் என சொல்கிறார். உள்ளே வந்து டைனிங் டேபிளில் விசாலாட்சி அமர்ந்தபோது, உனக்கெல்லாம் பெத்த அம்மா மேல பாசமே இல்லையா என நந்தினி கேட்கிறார்.

55
மகன்களுக்கு விசாலாட்சி போட்ட உத்தரவு
Image Credit : youtube/suntv

மகன்களுக்கு விசாலாட்சி போட்ட உத்தரவு

அதற்கு கதிர், பாசம் வச்சிருந்த எங்க அண்ணனுக்கே துரோகம் பண்ணிட்டாங்க என கதிர் சொன்னதும் கடுப்பான விசாலாட்சி, இப்போ நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் டா. நான் செத்தாலும் நீங்கெல்லாம் வந்து எனக்கு கொள்ளி வைக்கக் கூடாது. எனக்கு என்னோட இந்த நாலு மகளுங்க இருக்காங்க என நந்தினி, ரேணுகா, தர்ஷினி, பார்கவியை காட்டுகிறார். இவளுங்க தான் எனக்கு கொள்ளி வைப்பாளுங்க என சொல்லிவிட்டு ரூமுக்குள் செல்கிறார். அம்மாவின் இந்த முடிவால் கதிர் வாயடைத்துப் போய் இருக்கிறார். இதன்பின் என்ன ஆனது என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ayyanar Thunai: காலில் விழுந்து கெஞ்சிய சேரன்.! நிலா எடுத்த அதிரடி முடிவு! அய்யனார் துணை சீரியலில் உச்சகட்ட பரபரப்பு.
Recommended image2
பாக்கியம் போட்ட கணக்கு தப்பு! சரவணன் - அஞ்சலி நெருக்கத்தால் பற்றி எரியும் பாண்டியன் வீடு.!
Recommended image3
ஆதவனுடன் 2வது திருமணமா? உண்மையை போட்டுடைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை விலாசினி
Related Stories
Recommended image1
தேவசகாயத்தின் பிளானை ஒட்டுக்கேட்ட ஜனனி... கதிரை கதிகலங்க வைத்த நந்தினி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
Recommended image2
கடத்தல் மன்னன் தேவசகாயத்துக்கு ஜனனி வச்ச ஆப்பு... எதிர்பாரா ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved