- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற கதிர் – பதற்றத்தில் இருந்த ராஜீயை பத்திரமாக மீட்ட கதிர் – பாண்டியன் ஸ்டோர்ஸ்
கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற கதிர் – பதற்றத்தில் இருந்த ராஜீயை பத்திரமாக மீட்ட கதிர் – பாண்டியன் ஸ்டோர்ஸ்
Kathir Saves Raji From Dance Competition : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 571ஆவது எபிசோடில் ராஜீயைத் தேடி கதிர் சென்னை வந்த நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Kathir Saves Raji From Dance Competition : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய 570ஆவது எபிசோடில் தொட்டு தொட்டு ஆடுவது என்னால் முடியாது என்று ராஜீ மறுப்பு தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த நடுவர்கள் நாங்கள் சொல்வது போன்று தான் நீ ஆட வேண்டும் என்று ராஜீயை கட்டாயப்படுத்தவே அவர் என்னால் முடியாது என்று கூறி அங்கிருந்து புறப்பட தயாரானார். ஆனால், நடுவர்கள் அவர் அக்ரீமெண்டில் கையெழுத்து போட்டதை வைத்து பிளாக்மெயில் செய்தனர்.
டான்ஸ் போட்டி முடியும் வரை இந்த போட்டியிலிருந்து பின் வாங்க கூடாது. கடைசி வரை போட்டியில் பங்கேற்க வேண்டும். அதையும் மீறி புறப்பட்டுச் சென்றால் ரூ.10,00000 லட்சம் கொடுக்க வேண்டும் என்று பிளாக்மெயில் செய்தனர். நான் டான்ஸ் ஷோ என்று நினைத்து தான் இங்கு வந்தேன். ஆனால், இங்கு நடப்பதையெல்லாம் பார்த்தால் டான்ஸ் ஷோ போன்று தெரியவில்லை என்றார்.
நடுவர்கள் கூறியதை எல்லாம் கேட்டு ராஜீ அதிர்ச்சி அடைந்தார். எனினும் அவர் ஊருக்கு செல்ல இருந்த நிலையில் அவரை தனி அறையில் அடைத்து வைத்தனர். இந்த நிலையில் தான் இன்றைய 571ஆவது எபிசோடில் ராஜீயை தேடி கதிர் சென்னைக்கு புறப்பட்டு வந்த நிலையில் நிகழ்ச்சி ஆர்கனைசரிடம் கேட்டு சண்டை போட்டு ராஜீ இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு அங்கு சென்று கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று நடுவர்களுடன் சண்டை போட்டு ராஜீயை காப்பாற்றி அழைத்து வந்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க அரசி மற்றும் பாண்டியன் இருவரும் செஃல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதே போன்று கோமதியை போட்டோ எடுக்க கூப்பிட அவர் நான் வரவில்லை என்றார். மேலும் தனது அம்மா சொன்னதை எப்படியாவது கணவரிடம் கேட்டுவிட வேண்டும் என்றார். ஆனால், அவர் கேட்கவில்லை. வழக்கம் போல் இந்த முறை சொதப்பிவிட்டார். ஏற்கனவே குமரவேல் பற்றி போலீசில் புகார் கொடுப்பதை கோமதி விரும்பவில்லை. இது அதற்காக அல்ல, போலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டுக்கு எல்லாம் போக வேண்டுமா என்றெல்லாம் கேட்டார்.
நாம் கோர்ட்டுக்கு போகவில்லை என்றால் கேஸ் அவர்களுக்கு சாதகமாகிவிடும் என்றார். அதன் பிறகு கோமதி வாயவே திறக்கவில்லை. அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிவடைந்தது. இனி நாளை, சென்னையிலிருந்து ஊர் திரும்பும் கதிர் மற்றும் ராஜீ தொடர்பான காட்சிகள் இடம் பெறும் என்று தெரிகிறது.