- Home
- Cinema
- தொலைக்காட்சி
- இடம் வாங்கி வீடு கட்டிய கார்த்திக் – பிரம்மாண்ட ஆடம்பரமான வீட்டை ரேவதிக்கு திருமண நாள் பரிசாக கொடுக்கும் கார்த்திக்!
இடம் வாங்கி வீடு கட்டிய கார்த்திக் – பிரம்மாண்ட ஆடம்பரமான வீட்டை ரேவதிக்கு திருமண நாள் பரிசாக கொடுக்கும் கார்த்திக்!
Karthik Wedding Anniversary Gift New House to Revathi : தனது மனைவிக்காக இடம் வாங்கி அந்த இடத்தில் கார்த்திக் புதிதாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டை இப்போது ரேவதி பரிசாக கொடுக்க இருக்கிறார்.

Karthik Wedding Anniversary Gift to Revathi
கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் இன்னும் ஓரிரு நாட்களில் தங்களது முதலாமாண்டு திருமண நாளை கொண்டாட இருக்கின்றனர். ஏற்கனவே கார்த்திக் காதலர் தின பரிசாக ரேவதிக்கு சர்ஃப்ரைஸ் கொடுத்த நிலையில், இப்போது ரேவதி கார்த்திக்கிற்கு புதிதாக காஸ்ட்லி பைக் ஒன்றை புக் செய்துள்ளார். மேலும், அவருக்கு புதிய டிரஸூம் வாங்கியிருக்கிறார்.
Karthigai Deepam serial today episode update
கார்த்திகை தீபம் சீரியலில் இந்த வாரம் 2 விஷயங்கள் நடக்க இருக்கிறது. அதில் ஒன்று தான் கார்த்திக் மற்றும் ரேவதியின் திருமண நாள். 2ஆவது ரேவதியின் உயிருக்கு ஆபத்து என்று சித்தர் அருள் வாக்கு சொல்லிவிட்டார். எப்படியாவது அவரை காப்பாற்றியாக வேண்டும் என்று கார்த்திக் போராடி வருகிறார். அதைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Karthik gift new house to Revathi,
கார்த்திக்கிற்கு டிரஸ் வாங்க சென்ற இடத்தில் பெண்கள் டிரஸிங் அறையில் ரகசிய கேமரா வைத்திருந்த இளைஞரை போலீசில் பிடித்து கொடுத்தார் ரேவதி. பிடித்துக் கொடுத்த கொஞ்ச நேரத்தில் அந்த இளைஞர் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டார். அவரை தேடி கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவே, அந்த இளைஞர் ஜாமீனில் சென்றது தெரிய வருகிறது.
தனி விமானம் மூலம் மும்பை பறந்த விஜய்.. பின்னணி என்ன? அரசியல் வியூகமா? ஜன நாயகன் அப்டேட்டா?
Karthigai Deepam Revathi wedding anniversary surprise
அதன் பிறகு தான் ரேவதிக்கு அதைப் பற்றிய சீரியஸ்நெஸ் தெரிகிறது. இது ஒரு புறம் இருக்க, எப்படி ரேவதி தனது முதல் திருமண நாளுக்கு கார்த்திக்கிற்கு காஸ்ட்லியான பைக் ஆர்டர் செய்து வைத்திருக்கிறாரோ அதே போன்று கார்த்திக்கும் ரேவதிக்கு சர்ஃப்ரைஸ் கிஃப்ட் ஒன்று வைத்திருக்கிறார். அது என்ன தெரியுமா?
Karthik and Revathi latest plan
கார்த்திக் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் ரேவதிக்கு திருமண நாள் பரிசாக கொடுப்பதற்கு புதிய வீட்டை கட்டியுள்ளார். ஒரு இடம் வாங்கி அந்த இடத்தில் பார்த்து பார்த்து வீடு கட்டியிருக்கிறார். அந்த வீட்டைத்தான் ரேவதிக்கு திருமண நாள் பரிசாக கொடுக்க இருக்கிறார். அந்த வீட்டின் மதிப்பு எவ்வளவு என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. எனினும், திருமண நாளன்று தான் ரேவதிக்கு மிகப்பெரிய கண்டம் இருக்கிறது. அந்த கண்டத்திலிருந்து எப்படி ரேவதியை காப்பாற்ற போகிறார்? அவருக்கு எப்படி இந்த புதிய வீட்டை திருமண நாள் பரிசாக கொடுக்க போகிறார் என்பது தான் இந்த வாரத்திற்கான கண்டெண்ட். என்ன நடக்கிறது என்பது பற்றி கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.