- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மாப்பிளையை மற்ற போகும் சாமுண்டீஸ்வரி - மாயாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி; கார்த்திகை தீபம் அப்டேட்!
மாப்பிளையை மற்ற போகும் சாமுண்டீஸ்வரி - மாயாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி; கார்த்திகை தீபம் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், யாரும் எதிர்பாராத திருப்பு முனைகள் ரேவதியின் திருமணத்தில் நிகழ உள்ள நிலையில், இன்றைய எபிசோட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சாமுண்டீஸ்வரியின் பிளான் என்ன?
நேற்றைய தினம், மருத்துவர் மல்லிகா சாமுண்டேஸ்வரியை கோவிலில் சந்தித்து, உன்னிடம் ஏற்கனவே நான் மகேஷ் - மாயா பற்றி சொல்லியும், உன் பொண்ணுக்கு நீ அவனை தான் திருமணம் செஞ்சு வைக்க போறியா? என கேட்க, சாமுண்டீஸ்வரி நீ கவலையே படாத மல்லிகா... இந்த கல்யாணம் நடக்கும், ஆனால் மகேஷ் என்னோட பொண்ணு கழுத்துல கண்டிப்பா தாலி கட்ட மாட்டான் என சொல்கிறாள்.
ட்ரைவர் தான் மாப்பிள்ளையா?
இது மல்லிகாவை குழப்பத்தில் ஆழ்த்தினாலும், என்ன சாமுண்டீஸ்வரி சொல்ற எனக்கு ஒன்னும் புரியல என கூறும் மருத்துவர், அப்போ நீ வேற யாரையாவது யோசித்து வச்சிருக்கியா என்று கேட்க? சாமுண்டீஸ்வரியும் ஆமாம் என கூறுகிறார். இவர்கள் இருவர் பேசுவதையும் சந்திரகலா ஒட்டு கேட்டுவிட்டு, இதை சிவனாண்டி இடம் சொல்கிறார். அதே போல், ஒருவேளை அந்த ட்ரைவர் தான் மாப்பிள்ளையா என்கிற சந்தேகம் இருவருக்கும் எழுகிறது.
பாட்டி முன் தோன்றிய முருகன்:
சிவனாண்டியும் சரி விடு நாம பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறான். இன்னொரு புறம் பரமேஸ்வரி பாட்டி, கோவிலில் உட்கார்ந்து என்ன முருகா கல்யாண தேதியே நெருங்கிடுச்சி. இந்த கல்யாண விஷயத்துல நடக்க என்ன நடக்க போகுதோனு மனசு பக்கு பக்குனு இருக்கு என கூறுகிறார். பின்னர் பரமேஸ்வரி கண் முன் தோன்றிய முருகன், பரமேஸ்வரி நான் சொன்ன மாதிரியே இந்த கல்யாணம் நடக்கும். சாமுண்டேஸ்வரியே உன் பேரன் கையால் தாலி கட்ட சொல்லுவாள் என கூற... பரமேஸ்வரி பாட்டி ஆனந்த கண்ணீர் விடுகிறாள்.
மாயாவை அசிங்கப்படுத்திய சாமுண்டீஸ்வரி:
இதற்க்கு சாமுண்டேஸ்வரி இது பெண் அழைப்பு தான். பொண்ணை மட்டும் தான் நாங்க ஊர்வலமா அழைச்சிட்டு போவோம். இதுக்கு மாப்பிள்ளை பக்கத்துல உட்கார வேண்டிய அவசியம் இல்ல. அது தான் எங்க வழக்கம் என தடுத்து நிறுத்தி, நீங்களே மாப்பிள்ளையை கூட்டிகிட்டு மண்டபத்திற்கு வந்துடுங்க என சொல்கிறாள். மேலும் இனிமே கார்த்திக் தான் மாப்பிள்ளை தோழன் என்று சொல்ல எல்லாரும் ஷாக் ஆகின்றனர்.
சாமுண்டீஸ்வரி செய்ய போவது என்ன?
சந்திரகலா அவன் ட்ரைவர் என்று சொல், சாமுண்டேஸ்வரி கார்த்தியை அவனும் இந்த வீட்டில் ஒருவர் தான். எனக்கு தம்பி போல் என கூடி பதிலடி கொடுக்கிறாள். இப்படியான நிலையில், ரேவதியின் திருமணத்தில் என்ன நடக்க போகிறது, மகேஷை சாமுண்டீஸ்வரி எப்படி வெளியே அனுப்ப போகிறார்... என்பது பற்றி அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.