- Home
- Cinema
- தொலைக்காட்சி
- காளியம்மாள் ஐடியா; கார்த்திக்கை ஜெயிலுக்கு அனுப்ப உயிரை பணையம் வைத்த சந்திரகலா: கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!
காளியம்மாள் ஐடியா; கார்த்திக்கை ஜெயிலுக்கு அனுப்ப உயிரை பணையம் வைத்த சந்திரகலா: கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!
Karthigai Deepam Serial Episode Highlights : கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கை பழி வாங்க சந்திரகலா தனது உயிரையே பணையம் வைத்துள்ளார். எதிர்பாராத பல டுவிஸ்டுகள் நிறைந்த இந்த சீரியலின் ஹைலைட்ஸ் பற்றி பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் சீரியல்: சந்திரகலா நாடகம்
கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கிற்கு இருக்கும் எதிரிகள் என்றால் அது சந்திரகலா, காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் தான். ஆனால், இந்த நால்வருக்கும் சாமுண்டீஸ்வரி மற்றும் கார்த்திக் ஆகியோரை பழி வாங்க வேண்டும். அது ஒன்னு தான் குறிக்கோள். இதற்காக எந்த எல்லைக்கும் போக இவர்கள் துணிந்தவர்கள். அது தொடர்பான புரோமோவை ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் எதிர்பாராத பல டுவிஸ்டுகள் நடந்திருக்கிறது. அதைப் பற்றி பார்க்கலாம். கார்த்திக்கை வீட்டைவிட்டு வெளியில் அனுப்பியாச்சு. இனி சாமுண்டீஸ்வரியை எளிதில் பழி வாங்கிவிடலாம் என்று காளியம்மாள் தப்புக்கணக்கு போட்டுவிட்டார்.
கார்த்திகை தீபம் சீரியல் 1058ஆவது எபிசோடு
இதற்காக ஸ்வீட் பாக்ஸில் தங்க காயின் வைத்து அதனை சாக்லேட் என்று சொல்லி சாமுண்டீஸ்வரியிடம் திருமண அழைப்பிதழ் கொடுப்பதாக சொல்லி கொடுத்துவிடுங்கள் என்று இருவரை ஏற்பாடு செய்தார். அவர்களும் கச்சிதமாக வேலையை செய்து முடித்தனர். இதைத் தொடர்ந்து சந்திரகலா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு போன் போட்டு சாமுண்டீஸ்வரி லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து போலீசுடன் வந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சாமுண்டீஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்ய தயாரானார்கள்.
சந்திரகலா அண்ட் கார்த்திக்
அப்போது கார்த்திக் அங்கு வந்து சாமுண்டீஸ்வரியை காப்பாற்றினார். ஆனால், எப்படி காப்பாற்றினார் என்பதற்கான காட்சிகள் இல்லை. இந்த நிலையில் தான் இதைப் பற்றி லாக்கப்பில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் காளியம்மாவிடம் சந்திரகலா கூறினார். இதைத்தொடர்ந்து காளியம்மாள் டுவிஸ்ட் வைக்கும் வகையில் ஒரு ஐடியா கொடுத்தார். அந்த ஐடியாவை மட்டும் கச்சிதமாக செய்து முடித்தால் சாமுண்டீஸ்வரி, கார்த்திக் மற்றும் ரேவதி ஆகியோரை நிரந்தரமாக பிரித்துவிடலாம் என்று கூறினார்.
சந்திரகலா அண்டு காளியம்மாள் பிளான்
அவரது ஐடியாவை சந்திரகலா செய்தார். இதற்காக தனது உயிரை பணையம் வைத்தார். தனக்குத் தானே கத்தியால் குத்திக் கொண்டு கார்த்திக் தன்னை கொலை செய்யவும் துணிந்துவிட்டார் என்று கண்ணீர்மல்க நாடகமாடினார். இதை நம்பிய சாமுண்டீஸ்வரி முதலில் தனது தங்கையின் உயிரைக் காப்பாற்றும் விதமாக அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றார். இது தொடர்பான காட்சிகள் இப்போது வைரலாகி வருகிறது.
கார்த்திகை தீபம் எதிர்பாராத டுவிஸ்ட்
எதிர்பாராத டுவிஸ்டுகள் கொண்ட கார்த்திகை தீபம் சீரியலில் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்திரகலாக குற்றம் சாட்டும் நிலையில் கார்த்திக் கைது செய்யப்படுவாரா? அல்லது தன்னை நிரபராதி என்று நிரூபிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த காட்சிகள் கார்த்திக்கை தீபம் 2 சீரியலில் இன்றைய 1058ஆவது எபிசோடில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.