- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கணவர் கார்த்திக்கிடம் லவ்வ புரபோஸ் பண்ணிய ரேவதிக்கு என்ன நடந்தது தெரியுமா? கார்த்திகை தீபம் 2!
கணவர் கார்த்திக்கிடம் லவ்வ புரபோஸ் பண்ணிய ரேவதிக்கு என்ன நடந்தது தெரியுமா? கார்த்திகை தீபம் 2!
Revathi Love Propose to Karthik Raja : நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு கணவர் கார்த்திக்கிடம் ரேவதி தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதன் பிறகு என்ன நடந்தது என்று கார்த்திகை தீபம் 2 சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்கலாம்.

காதலை சொன்ன ரேவதி, கார்த்திகை தீபம் 2
Revathi Love Propose to Karthik Raja : கார்த்திகை தீபம் 2 சீரியலில் என்னதான் கார்த்திக்கை திருமணம் செய்து கொள்ளும் போது ரேவதிக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட, அதன் பிறகு உண்மை தெரிந்த ரேவதி அவரை புரிந்து கொண்டு காதலிக்க ஆரம்பித்தார். இதற்காக அமெரிக்கா செல்ல இருந்த ரேவதி அந்த பிளானையும் கைவிட்டு விட்டார்.
கார்த்திகை தீபம் 2 இன்றைய எபிசோடு
மேலும், கார்த்திக் தான் தனது அத்தையின் மகன் என்ற உண்மையையும் தெரிந்து கொண்டார். அதுமட்டுமின்றி கார்த்திக் ஏற்கனவே திருமணமானவர் என்ற உண்மை தெரிந்து ரொம்பவே மனமுடைந்து போனார். ஆனால், அதற்கு முதல் மனைவி தீபா மீது கார்த்திக் எந்த அளவிற்கு அன்பு வைத்திருந்தார் என்ற உண்மை அறிந்து கொஞ்சம் பொறாமையும் கொண்டார். இதையடுத்து, கார்த்திக் மீது காதல் வரை பல முறை அவரிடம் சொல்லவும் முயற்சி செய்தார். ஆனால், அவருக்கு எல்லா சூழலிலும் ஏமாற்றமே மிஞ்சியது.
கார்த்திக்கிடம் காதலை சொன்ன ரேவதி
இந்த நிலையில் தான் இப்போது பாட்டி வீட்டில் இருக்கும் ரேவதி, கார்த்திக்கிடம் காதலை சொல்ல முயற்சி செய்தார். அதற்கு முன்னதாக கண்ணைக் கட்டி விளையாடும் விளையாட்டின் போது கார்த்திக்கை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார். அதன் பிறகு பாட்டிக்கு கொடுக்க நினைத்து அது எப்படியோ மாறிப்போய்விட்டது என்றார். இந்த நிலையில் தான் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்னதாக பீச்சில் ஒன்றாக அமர்ந்து நிலா சோறு சாப்பிடும் நிகழ்வு நடைபெறுகிறது.
இதில், ரேவதி கார்த்திக்கிடம் இதில், ரேவதி கார்த்திக்கிடம் தனது காதலை சொல்லவே, கார்த்திக் முடியாது, கடைசி வரை தனது மனதில் தீபாவிற்கு மட்டுமே இடமுண்டு என்று கூறிவிட்டார். இது ரேவதிக்கு ஏமாற்றமாக இருந்தாலும், எப்படியாவது உன்னை காதலிக்க வைக்கிறேன் என்று சபதம் போட்டுள்ளார்.
கார்த்திகை தீபம் 2 இன்றைய எபிசோடு
ரேவதி தனது சபதத்தில் ஜெயித்தாரா இல்லை கார்த்திக்கின் தீபா மீதான காதல் ஜெயித்ததா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதுவரையில் கார்த்திகை தீபம் 2 சீரியலில் அன்றாட எபிசோடுகளில் என்ன நடக்கிறது என்பதை பார்த்து மகிழலாம்.