- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கும்பாபிஷேகத்தை நிறுத்த காளியம்மாள் போட்ட பிளான் – போலீசிடம் உதவி கேட்ட கார்த்திக்!
கும்பாபிஷேகத்தை நிறுத்த காளியம்மாள் போட்ட பிளான் – போலீசிடம் உதவி கேட்ட கார்த்திக்!
Kaliammal Sets a Condition For Raja : கார்த்திகை தீபம் 2 சீரியலில் காளியம்மாள் மற்றும் பெருமாள் இருவரும் மாறி மாறி கும்பாபிஷேகத்தை நிறுத்த திட்டமிட்டிருந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் 2 சீரியல் கும்பாபிஷேகம் புரோமோ வீடியோ
கார்த்திகை தீபம் 2 சீரியலில் கோயில் கும்பாபிஷேகத்தை நிறுத்த காளியம்மாள் 2 இடங்களில் பாம்ப் வைத்த நிலையில் ஒன்றை அவரே சொல்லி அதனை கார்த்திக் எடுத்துவிட்டார். மற்றொன்று எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் என்று ஒரு கண்டிஷன் போட்டார். அதுவும், கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்னதாக தான் யார் என்ற உண்மையை அத்தை சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல வேண்டும் என்று ஒரு கண்டிஷன் போட்டார்.
ஜீ தமிழ் சீரியல், கார்த்திக், ரேவதி
ஆனால், அதெல்லாம் முடியாது என்று கார்த்திக் கூறவே அப்போது பாம்ப் வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து கார்த்திக் தனது போலீஸ் நண்பர் சரவணனிடம் உதவி கேட்க, ஆனால், அவரால் எதுவும் செய்ய முடியாது சூழல் ஏற்பட்டது. பின்னர் கார்த்திக் மற்றும் மயில்வாகனம் இருவரும் பாம்ப் எங்கு இருக்கிறது என்பதை தேட தொடங்கினர்.
கார்த்திகை தீபம் 2 சீரியல் இன்றைய எபிசோடு
கோயிலின் மூலை முடுக்கெல்லாம் தேடி பார்த்தனர். ஆனால், கடைசி வரை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் கோயிலிலிருந்த சிசிடிவி கேமராவை பார்த்தால் தெரிந்திருக்கும். ஆனால், வெடிகுண்டு எங்கிருக்கிறது என்று கார்த்திக் மற்றும் மயில்வாகனம் இருவரும் தேடி அலைந்தனர். மயில்வாகனம் மட்டும் வெடி குண்டு வைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் வந்தார். ஆனால், அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
கார்த்திகை தீபம் 2 சீரியல்
இதற்கிடையில் பெருமாள் தனது போலீஸ் நண்பர் முத்து செல்வம் உதவியுடன் கும்பாபிஷேகத்தை நிறுத்த பிளான் போட்டார். ஏற்கனவே காளியம்மாள், சிவனாண்டி, முத்துவேல் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நிறுத்த திட்டமிட்டிருந்தது பெருமாளுக்கு தெரியாத சூழலில் அவர் புதிதாக ரேவதியை கடத்த திட்டமிட்டார். இதற்காக ரவுடிகளையும் ஏற்பாடு செய்து திட்டமிட்டபடி ரேவதியை கடத்தினர். அதன் பிறகு என்ன நடக்கும், ரேவதி காப்பாற்றப்பட்டாரா, வெடி குண்டு வைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பது குறித்து இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.