- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மைதிலியை கடத்தி சென்ற முத்துவேல் – டூப்ளிகேட் பேரனால் வந்த சிக்கல் – திண்டாடும் கார்த்திக்: கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
மைதிலியை கடத்தி சென்ற முத்துவேல் – டூப்ளிகேட் பேரனால் வந்த சிக்கல் – திண்டாடும் கார்த்திக்: கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
Karthigai Deepam 2 Serial Today 939th Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் ஒருபுறம் மைதிலியை காப்பாற்ற வேண்டும், மறுபுறம் டூப்ளிகேட் பேரனால் வந்த சிக்கலை சமாளிக்க வேண்டும், இதையெல்லாம் கார்த்திக் எப்படி சமாளிக்கிறார் என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் 2 இன்றைய எபிசோடு
Karthigai Deepam 2 Serial Today 939th Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலானது நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் கார்த்திக்கின் வீடியோகால் மீட்டிங்கை நேரில் கண்டு அவரை எப்படியாவது அக்காவிடம் மாட்டிவிடலாம் என்று தப்புகணக்கு போட்ட சந்திரகலாவிற்கு மயில்வாகனம் நல்ல ஐடியா கொடுக்க எப்படியோ கார்த்திக் அதிலிருந்து தப்பிவிட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக டூப்ளிகேட் பேரனாக நடிக்க வந்த கார்த்திக்கின் நண்பன் சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரியிடம் கையும், களவுமாக மாட்டிக் கொண்டார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
சாமுண்டீஸ்வரியிடம் மாட்டிக்கிட்ட டூப்ளிகேட் பேரன்
அதனுடைய தொடர்ச்சியாக இன்றைய எபிசோடு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. டூப்ளிகேட் பேரன் சந்திரகலாவிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது குறித்து பார்க்கலாம். ஆனால், அதற்கு முன்னதாக கார்த்திக்கை கோயிலுக்கு வரவிடாமல் தடுக்க முத்துவேல் மைதிலியை கடத்திச் சென்றுவிட்டார். அவரை மீட்க கார்த்திக் புறப்பட்டுச் சென்றார். அவர், முத்துவேலுவிற்கு போன் போடவே அவரோ இடத்தை மாற்றி மாற்றி சொல்லி அவரை அலைய விடுகிறார்.
மைதிலியை காப்பாற்ற போராடும் கார்த்திக்
ஒரு கட்டத்தில் கார்த்திக் முத்துவேல் தன்னை அலைய விடுகிறான் என்பதை புரிந்து கொள்கிறார். இதனால் எதுவும் அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை அறிந்து நேராக கோவிலுக்கு கிளம்பி வருகிறார். அங்கு தீமிதி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டிருக்க, ரேவதி, சுவாதி, ரோஹிணி ஆகியோர் தீமிக்க தயாராகிவிட்டனர். ஏற்கனவே காளியம்மாள், சிவனாண்டி ஆகியோர் திட்டமிட்டபடி கோயிலில் ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது. அதனை எப்படி கார்த்திக் தடுத்து நிறுத்தப் போகிறார் என்பதை இன்றைய எபிசோடை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.