- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஜாமினில் வந்த ஜனனி... டர்ரான ஆதி குணசேகரன்..! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் செம ட்விஸ்ட்
ஜாமினில் வந்த ஜனனி... டர்ரான ஆதி குணசேகரன்..! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் செம ட்விஸ்ட்
சன் டிவி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜாமினில் வெளியே வந்த ஜனனி, நேராக ஆதி குணசேகரனிடம் வந்து சவால் விட்டுள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கைது செய்யப்பட்ட ஈஸ்வரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக தீர்ப்பு வந்துவிடும் என குஷியில் ஆதி குணசேகரன் இருக்கிறார். வக்கீலும் நம்ம பக்கம் ஸ்ட்ராங் ஆக இருப்பதால், ஜனனிக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என போன் போட்டு சொல்ல, உடனே ஹாப்பியான அறிவுக்கரசி, ஆதி குணசேகரனுக்கு வீட்டில் பாயாசம் செய்து கொடுத்து அசத்துகிறார். ஆனால் இறுதி விசாரணையில் ஜீவானந்தத்தை தனிப்படை அமைத்து கைது செய்ய உத்தரவிடும் நீதிமன்றம், ஜனனிக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லாததால், அவரை ஜாமினில் விடுவிப்பதாக அறிவிக்கிறார். அதே நேரம் போலீஸ் அவரிடம் விசாரணை நடந்த எந்தவித தடையும் இல்லை என்பதையும் கூறுகிறார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
ஆதி குணசேகரன் vs ஜனனி
ஜாமின் கிடைத்ததும் கோர்ட்டில் இருந்து நேராக வீட்டிற்கு வரும் ஜனனி நேராக ஆதி குணசேகரின் அருகில் வந்து அவருக்கு சரிசமமாக அமர்கிறார். இதைப்பார்த்து வெடவெடத்துப் போகிறார் ஆதி குணசேகரன். அவரிடம் இது இறுதி யுத்தம் என கூறும் ஜனனி, இனி குடும்பம் என்கிற கருணையோ, கரிசனமோ கிடையாது. இதுவரைக்கும் நிறைய தப்பு செய்திருக்கிறீர்கள். ஒருவேளை அந்த தப்பெல்லாம் உணர்ந்து, மன்னிப்பு கேட்டு ஒதுங்கி போயிருந்தால் கூட, வாய்ப்பு கொடுத்திருப்போம். ஆனா இனி அதுவும் இல்லை. இனிமே நீங்க மன்னிப்பு கேட்டால் கூட நாங்க மன்னிக்க மாட்டோம் என கறாராக கூறுகிறார் ஜனனி.
அடிதடியில் இறங்கிய கதிர் - சக்தி
இதைக்கேட்டு சவுண்டு விடும் கதிர், உன்னையெல்லாம் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பதே தப்புடி... இன்னைக்கே உன் கதையை முடிக்கிறேன் பாரு எனக்கூறிவிட்டு தோட்டத்தில் இருந்து ஜனனியை அடிக்க கட்டையை எடுத்து வருகிறார் கதிர். இதைப்பார்த்து கடுப்பான சக்தி, விறுவிறுவென சென்று, கதிரை அடிக்கிறார். பின்னர் அவர்களை அங்கிருந்தவர்கள் பிரித்து விடுகிறார்கள். இனி கையை தூக்குவது, அடிப்பது என எதாவது செஞ்சிங்கனா மொத்தமா முடிச்சுவிட்டு போயிட்டே இருப்பேன். மரியாதையா இருந்துக்கங்க, என ஆதி குணசேகரனுக்கும் கதிருக்கும் நேரடியாக வார்னிங் கொடுக்கிறார் சக்தி.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்து என்ன?
இதையடுத்து பேசும் ஜனனி, இனி சொல்வதற்கு ஒன்னுமில்லை, என்னைக்கு ஈஸ்வரி அக்காவை அடிச்சு இந்த நிலைமைக்கு கொண்டு போனீங்களோ அன்றைக்கே எல்லாமே முடிஞ்சு போச்சு என திட்டவட்டமாக கூறுகிறார் ஜனனி. இதனால் இனி ஆதி குணசேகரனுக்கும், ஜனனிக்கும் இடையேயான யுத்தம் அனல் பறக்கும் எனத் தெரிகிறது. மறுபுறம் ஜீவானந்தம் மற்றும் பார்கவியை கைது செய்ய களத்தில் இறங்கிய தனிப்படை அவர்களை தேடிக் கண்டுபிடித்ததா? ஆதி குணசேகரனின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன? என்பதை இனி வரும் எபிசோடுகளில் தான் பார்க்க வேண்டும்.