- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Biggboss 7: 'பிக்பாஸ் சீசன் 7 'நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா விஜய் பட நடிகை? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
Biggboss 7: 'பிக்பாஸ் சீசன் 7 'நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா விஜய் பட நடிகை? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பமாகும் முன்பே, இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் ப்ரோமோ வெளியாகி வரும் நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் பட நடிகை ஒருவரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கும் என கூறப்படும் நிலையில், அவ்வப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் யார் யார் என்கிற தகவலும் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் விஜய் டிவி தொகுப்பாளினியான ஜாக்குலின், சர்ச்சை நடிகை ரேகா நாயர், பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், நடிகர் பிரித்திவிராஜ், கோவை பெண் ஓட்டுனர் ஷர்மிளா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடன இயக்குனர் தினேஷ் உள்ளிட்ட சிலரது பெயர் இந்த உத்தேச பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
கதிர் என நினைத்து சக்தியிடம் மொத்த உண்மையை உளறிய வளவன்! 'எதிர்நீச்சல்' சீரியலின் பரபரப்பான அப்டேட்!
Indhraja
இதைத்தொடர்ந்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தளபதி விஜய் நடித்த 'பிகில்' படத்தில் பாண்டியம்மாவாக நடித்த, பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதே போல், கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்த சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigil
எனவே இந்த முறை இந்திரஜா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இவர் கலந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.