MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கதிர் என நினைத்து சக்தியிடம் மொத்த உண்மையை உளறிய வளவன்! 'எதிர்நீச்சல்' சீரியலின் பரபரப்பான அப்டேட்!

கதிர் என நினைத்து சக்தியிடம் மொத்த உண்மையை உளறிய வளவன்! 'எதிர்நீச்சல்' சீரியலின் பரபரப்பான அப்டேட்!

'எதிர்நீச்சல்' சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 26 2023, 09:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஜீவானந்தத்தின் மனைவியை குணசேகரன் தான் ஏதாவது செய்திருக்க வேண்டும் என்கிற சந்தேகத்தில் ஜனனி, நந்தினி, ரேணுகா, ஆகியோர் உள்ள நிலையில்... அதனை உறுதி செய்யும் விதமாக இன்றைய ப்ரோமோ வெளியாகி, அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஒவ்வொரு நாளும் எதிர்பாராத திருப்பங்களுடன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல். நேற்றைய எபிசோடில் குணசேகரனால் வீட்டு சிறை வைக்கப்பட்ட அப்பத்தா காணாமல் போக, அவரை ஒரு பக்கம் ஜனனியும், இன்னொரு பக்கம் குணசேகரனும் வலைவீசி தேடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அப்பத்தா நீதிபதியின் வீட்டில் இருப்பதாக ஜனனிக்கு மெசேஜ் செய்து அவரை அங்கு வர வைத்து நீதிபதியிடம் தன்னை பற்றிய முழு விவரங்களையும் கூறுகிறார்.

குடும்பமே டார்ச்சர் செய்தது! செல்வராகவனை விவாகரத்து செய்ய இது தான் காரணம்! உண்மையை உடைத்த சோனியா அகர்வால்!

35

அதே போல் ஜீவானந்தத்திற்கு தன்னுடைய சொத்துக்களை எழுதிக் கொடுத்தது நான் தான் என கூறுகிறார். பின்னர் அந்த இடத்திற்கு வரும் குணசேகரன்... அப்பத்தா, ஜீவானந்தம், ஜனனி, ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் பார்த்ததால் கடும் கோபத்திற்கு ஆளாகிறார். அப்போது அப்பத்தா செம்ம கெத்தாக, "ஏய் குணசேகரா நிறுத்து என கூறி, இந்த கேசை ரீஇன்வெஸ்டிகேட் பண்ண நீதிபதியிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கிறார். இனிமேல் நீ ஒன்னும் பண்ண முடியாது என பழைய ஃபாமில் அப்பத்தா கூறிய ஸ்டைல் வேற ரகம்.

45

ஆனால் குணசேகரனோ "நான் அழிஞ்சாலும் பரவால்ல, உங்களையும் அழிக்காம போக மாட்டேன் என தன்னுடைய கோபத்தை காட்ட, அவரை ஒரு வழியாக சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து செல்கிறார் ஞானம். பின்னர் இன்றைய புரோமோவில்... "காரில் போய்க்கொண்டிருக்கும் போது அப்பத்தா, ஜீவானந்தம் ஆகியோரை என்ன தான் சார் செய்வது என வழக்கறிஞர்களிடம் குணசேகரன் ஆலோசனை கேட்க... அதற்கு வழக்கறிஞர்கள் இருவருமே இப்போதைக்கு அவங்கள ஒன்னும் பண்ண முடியாது என கூறுகிறார்.

Sundari Season 2: சுந்தரி சீசன் 2 சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய ஹீரோ! யார் தெரியுமா? வெளியான தகவல்..!

55

இதைத் தொடர்ந்து கதிரின் போனுக்கு ஒரு கால் வருகிறது. அந்த இடத்தில் கதிர் இல்லாததால் அந்த போனை சக்தி எடுத்துப் பேசுகிறார். அப்போது அவரிடம் பேசும் வளவன், "டேய் கதிர் ஜீவானந்தம் பயலே உங்க பேச்சு கேட்டுகிட்டு நான் சுட்டனா இல்லையா? பிளான் மிஸ் ஆகி அவன் பொண்டாட்டி செத்துப் போயிட்டா என்று சொல்ல, இதைக் கேட்ட ரேணுகா, ஈஸ்வரி, ஜனனி, சக்தி ஆகிய அனைவருமே ஒரு நிமிடம் அதிர்ந்து போகின்றனர். மேலும் அடுத்ததாக ஜனனியின் மூவ் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபலம்... அவருக்கு பதில் இவரா?
Recommended image2
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் அதிரடி ட்விஸ்ட்... அக்‌ஷிதா – அவினாஷுக்கு செக் வைத்த அஸ்மிதா – பிரித்வி!
Recommended image3
Sun TV vs Vijay TV : சன் டிவியின் ரெக்கார்டை சல்லி சல்லியாய் உடைக்கும் விஜய் டிவி... இனி இந்த சீரியல் தான் நம்பர் 1
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved