- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய குணசேகரன்; தர்ஷன் கல்யாணத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா? எதிர்நீச்சல் தொடர்கிறது
கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய குணசேகரன்; தர்ஷன் கல்யாணத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா? எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தன்னுடைய பிளானை திடீரென மாற்றி இருக்கிறார். இதனால் தர்ஷனின் திருமணத்திலும் ட்விஸ்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனின் கல்யாண எபிசோடு நெருங்குவதால், அவருக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க, மறுபுறம் பல ட்விஸ்டுகளும் நடக்கின்றன. குறிப்பாக ஆதி குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ ஆதாரத்தை காட்டி அறிவுக்கரசியை மிரட்டும் கேமராமேன், தனக்கு 1 கோடி ரூபாய் கொடுத்தால், இந்த வீடியோ ஆதாரத்தை உன்னிடம் ஒப்படைத்து விடுவதாக பிளாக்மெயில் செய்கிறார். அறிவுக்கரசியும் வேறு வழியின்றி 1 கோடியை கொடுக்க சம்மதம் தெரிவிக்கின்றார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
தத்தளிக்கும் ஜீவானந்தம்
மறுபுறம் குணசேகரன் அனுப்பிய ரெளடிகளிடம் சிக்கி தவிக்கும் ஜனனி, பார்கவி மற்றும் ஜீவானந்தம், அங்கிருந்து வெளியேற முடியாமல் தத்தளிக்கிறார்கள். நம்ம எப்படி இருந்தாலும் கிளம்பிதான ஆக வேண்டும், காலையிலக்குள்ள மண்டபத்துக்கு போகணும்ல என ஜனனி சொல்ல, அதற்கு ஜீவானந்தம், கரெக்டு, இப்போ நம்ம கொஞ்ச நேரத்துல கிளம்பினால் நேராக சென்று மண்டபத்தில் ரீச் ஆகுற மாதிரி போக வேண்டும், ஆனால் மண்டபத்திற்கு செல்லும் வரை இவங்க நம்மல சாதாரணமா விட்டுவிட மாட்டார்கள் என சொல்கிறார். பதிலுக்கு பார்கவியும் தான் தைரியமாக இருப்பதாகவும், தனக்கு பயமெல்லாம் இல்லை எனவும், படபடப்பு தான் இருப்பதாகவும், நம்ம கிளம்பலாம் என சொல்கிறார்.
காலியாகும் கல்யாண மண்டபம்
அதேபோல் மண்டபத்தில் வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு ரூம் போட்டு கொடுக்க வேண்டும் என கதிரும், ஞானமும் பேசிக் கொண்டு உள்ளே வரும்போது மண்டபம் யாருமே இல்லாமல் காலியாக இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார்கள். அங்கிருக்கும் ஆதி குணசேகரனிடம் இதுபற்றி கேட்கிறார்கள். அவர் நான் தான் எல்லாரையும் வீட்டுக்கு கிளம்ப சொன்னதாக சொல்கிறார். சொந்தக்காரங்கள கூட வச்சிக்கிறது, அடிமடியில் விறகை கட்டின கதையாக இருக்கு. எவனையும் நம்ப முடியவில்லை. நம்ம வீட்டு பொம்பளைங்களே என்னென்ன சாகசம் பண்ணுறாங்க. இந்த நிமிஷம் வரைக்கும் ஜனனி, என்ன பண்ணிட்டு இருக்கானே தெரியல என சொல்கிறார் குணசேகரன்.
பிளானை மாற்றும் குணசேகரன்
அதுமட்டுமின்றி காலையில் முகூர்த்த நேரம் 4 மணிக்கு என சொல்கிறார் குணசேகரன். இதைக்கேட்டு அனைவரும் ஷாக் ஆகிறார்கள். சக்தி, ரேணுகா மற்றும் நந்தினியும் இந்த ட்விஸ்டை எதிர்பார்க்காததால், தர்ஷனை எப்படி வெளியே அழைத்துச் செல்வது என பிளான் போடுகிறார்கள். 4 மணிக்குள் பார்கவியை ஜனனி அழைத்து வருவது முடியாத காரியம் என்பதால், தர்ஷனை மண்டபத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்வதே ஒரே வழி, இதனால் அவரை எப்படி வெளியே அழைத்து செல்லப் போகிறார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.