- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஜனனி பற்றி வந்த அப்டேட்... அரண்டுபோன ஆதி குணசேகரன்; போலீஸின் புது ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
ஜனனி பற்றி வந்த அப்டேட்... அரண்டுபோன ஆதி குணசேகரன்; போலீஸின் புது ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி ஆபத்தில் இருந்து தப்பித்துவிட்டதாக ரேணுகா சொன்னதைக் கேட்டதும் ஆதி குணசேகரன் வெடவெடத்துப் போய் உள்ளார். இதையடுத்து என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை பொய்யான வழக்கில் இருந்து காப்பாற்ற அமுதாவின் கணவரிடம் இருக்கும் வீடியோ உதவும் என்பதை அதை மீட்க போராடும் சக்தி, அதற்காக தன் அண்ணன் ஆதி குணசேகரனிடம் இருந்து 25 லட்சம் பணத்தையும் வாங்கிச் சென்றிருக்கிறார். அந்த பணத்தை எடுத்து அமுதாவின் கணவரிடம் காட்டி, அவர் மறைத்து வைத்திருந்த வீடியோ ஆதாரத்தை வாங்கிப் பார்த்துள்ளார் சக்தி. அதைப்பார்த்து அவர் பேரதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
ரேணுகா சொன்ன மேட்டரால் ஆடிப்போன குணசேகரன்
ஜனனி ஆபத்தில் சிக்கி இருப்பதால் நிச்சயம் அவருடைய கதை முடிந்திருக்கும் என்கிற மிதப்பில் இருக்கும் ஆதி குணசேகரனுக்கு இடியாய் வந்து ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறார் ரேணுகா. ஜனனிக்கு எந்த பிரச்சனையும் இல்லையாம், அவர் மேல் பதியப்பட்டிருந்த கேஸ் எல்லாம் போயிருச்சாம் என சொல்ல, அதைக்கேட்ட ஆதி குணசேகரன், கதிர், ஞானம் ஆகியோர் அதிர்ந்து போகிறார்கள். குறிப்பாக கதிர், அரண்டு போய் இருக்கிறார். இதனால் அவரை வேறு எந்த வழியில் மாட்டிவிடலாம் என மீண்டும் கையை கசக்கி யோசிக்கத் தொடங்கி இருக்கிறார் ஆதி குணசேகரன்.
வலைவீசி தேடும் போலீஸ்
அநேகமாக ரேணுகா யூகத்தின் அடிப்படையில் தான் இப்படி சொல்லி இருக்க வாய்ப்புள்ளது. சக்தி போன் போட்டு வீடியோ ஆதாரத்தை தான் மீட்டுவிட்டதாக சொன்னதை வைத்துக் கொண்டு ரேணுகா இப்படி கூறியிருக்கிறார் போல தெரிகிறது. மறுபுறம் ஜனனியை போலீஸ் ஒருபுறமும், ரெளடிகள் ஒருபுறமும் வலைவீசி தேடி வருகிறார்கள். தேவசகாயத்திடம் இருந்து தப்பித்து காட்டுக்குள் மதிவதினி உடன் ஓடிக் கொண்டிருக்கும் ஜனனியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என பாண்டியன் தலைமையிலான டீம் வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது. கொடைக்கானலில் ஜீவானந்தம் மற்றும் பார்கவியை பிடிக்க களமிறக்கப்பட்ட போலீஸில் இந்த பாண்டியனும் ஒருவர்.
அரெஸ்ட் பண்ண விரையும் தனிப்படை
பாண்டியனுக்கு போன் போடும் உயர் அதிகாரி, என்னையா ஆச்சு, ஒரு பொம்பளைய புடிக்க இவ்வளவு நாள் எடுத்துப்பீங்களா என கேட்கிறார். அதற்கு பாண்டியன், தேடுதல் வேட்டை நடந்து வருகிறது, இன்றைக்குள் கண்டிப்பாக பிடித்துவிடுவோம் சார் என கூறுகிறார். இதையேதான் விட்டதுல இருந்து சொல்லிகிட்டு இருக்கீங்க, சீக்கிரம் பிடிக்குற வேலையை பாருங்கயா. அதேமாதிரி அந்த ஜனனிகூட யார் இருந்தாலும் அவங்களையும் சேர்த்து அரெஸ்ட் பண்ணிடுங்க என உத்தரவிடுகிறார் உயர் அதிகாரி. அதற்கு பாண்டியன், பிடித்த உடனே உங்களுக்கு தகவல் கொடுக்கிறோம் என சொல்கிறார். பார்த்துயா, ஏற்கனவே ஒரு டீம் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிருக்கா, அவளை கவனமாக கூட்டிட்டு வாங்க என கூறி இருக்கிறார்.
ஜனனியின் நிலைமை என்ன?
உயர் அதிகாரியின் உத்தரவால் கடுப்பாகும் பாண்டியன், அந்த ஜனனியை எப்படியாச்சும் தேடி கண்டுபிடிக்கனும் என வலைவீசி தேடுகிறார். மறுபுறம் ஜனனி, ரெளடிகளுக்கு பயந்து காட்டுக்குள் மதிவதினி உடன் ஓடிக் கொண்டிருக்கிறார். மதிவதினி நடக்கக் கூட முடியாமல் கிறங்கிக் கிடக்க, அவரிடம் இவ்வளவு தூரம் போராடி எல்லாத்தையும் தாண்டி வந்துட்டோம், இனியும் எல்லாத்தையும் தாண்டி நிச்சயம் போயிடலாம் என ஊக்கம் கொடுத்து அழைத்துச் செல்கிறார் ஜனனி. இதையடுத்து என்ன ஆனது? ஜனனி போலீஸிடம் சிக்கினாரா? அல்லது ரெளடிகள் அவரை மடக்கினார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

