தம்பின்னு கூட பாக்காம கேள்வி மேல கேள்வி கேட்ட கோமதி – பாவம் பழனிவேல்!
Gomathi Questions Palanivel in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் சரவணன் மற்றும் தங்கமயில் தொடர்பான காட்சியில் தங்கமயில் பற்றிய உண்மையை சரவணன் தெரிந்து கொண்டார். அப்போது தன்னை விட வயதில் மூத்தவர் என்றும் இத்தனை நாட்களாக தன்னையும் தனது குடும்பத்தையும் ஏமாற்றி விட்டதாக கூறி ஆதங்கப்பட்டார். இதைப் பற்றி தனது வீட்டில் சொல்ல வேண்டும் என்று கூறி தங்கமயிலுடன் வீட்டிற்கு வந்தார்.
கோமதி மற்றும் பழனிவேல்
அவர் சொல்ல வருவதற்கு முன்னதாக இடையில் குறுக்கிட்ட கோமதி தனது தம்பி பழனிவேலுவிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பினார். ஏமா, நாளைக்கா, கடை திறப்பு விழா எப்போது? நாளைக்கு வச்சிக்கிட்டு இன்னைக்கா வந்து சொல்லுவீங்க, ஏன் துறை சொல்ல மாட்டாரா என்றார். நாளைக்கு நல்ல நாள். அதான், நாளைக்கு கடை திறக்கிறோம் என்று சுகன்யா பேசினார்.
அமைதியாக இருந்த பாண்டியன்
பழனிவேல் நாளைக்கு கடை திறப்பது பற்றி வீட்டிலுள்ள யாருக்குமே தெரியாது. கடை திறப்பது எங்களுக்கு சந்தோஷம் தான். ஆனால், அதை முதலேயே சொல்ல வேண்டியது தானே. கடைசி நேரத்தில் வந்து சொல்ல வேண்டுமா என்று கேட்டார். பெரிய மாமாவும், சின்ன மாமாவும் பிசினஸ் பன்றாங்க, இவர் மட்டும் ஏன் இன்னொரு கடையில் வேலை பார்க்க வேண்டும் என்று சொல்லி இவருக்கு தனியாக கடை ஆரம்பித்து கொடுக்கிறார்கள் என்று சுகன்யா பேசினார்.
கோமதி - சுகன்யா வாக்குவாதம்
ஒரு கட்டத்தில் சுகன்யாவிற்கும் கோமதிக்கும் வாக்குவாதம் முற்றியது. இடையில் குறுக்கிட்ட பழனிவேல் இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் நான் இல்லை என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே தேவையில்லாமல் நடிக்காதே என்று கோமதி திட்டினார். தனது கணவரை ஓயாமல் திட்டியதை பார்த்த சுகன்யா, இத்தனை நாட்களாக அக்காவுக்காக இந்த வீட்டில் இருந்தீங்க. மச்சான் கடையில் அடிமை வேலை பார்த்தீங்க என்று வார்த்தையை விட, பிறகு சரி, ஏதோ ஒரு வேலை பார்த்தார்.
தனியாக தொழில் தொடங்கும் பழனிவேல்
இப்போது தனியாக ஒரு தொழில் தொடங்க போகிறார் என்று பேசினார். சந்தோஷம் என்று சொல்லிவிட்டு ஏன் குற்றவாளியை கூண்டில் நிற்கிற மாதிரி கேள்வி மேல கேள்வி கேக்குறீங்க. எல்லாமே உங்ககிட்ட கேட்டு தான் பண்ணனுமா? என்று சரமாறியாக கேள்வி எழுப்பினார்.
பாண்டியன், பழனிவேல்
இதைத் தொடர்ந்து இறுதியாக பாண்டியன், பழனிவேல் நீ சந்தோஷமாக உன்னுடைய கடையை திறந்து நல்லா இரு என்று வாழ்த்தினார். மேலும், இனிமேல் இதைப் பற்றி யாரும் எதுவும் பேசவும் வேண்டாம், கேட்கவும் வேண்டாம் என்றார். இச்சம்பவம் குறித்து சுகன்யா தனது பெரிய மாமன்களிடம் தெரியப்படுத்தினார். அப்போது கோமதிக்கு அண்ணிக்கு பொறாமை என்று பேசினார்.
கோமதிக்கு பொறாமை இல்லை
இதனால் ஆத்திரமடைந்த காந்திமதி என்னுடைய மகளுக்கு அப்படி ஒரு எண்ணம் எல்லாம் கிடையாது. நீ அப்படியெல்லாம் பேசாத என்று திட்டினார். கடைசியாக பழனி யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி நீ கவலைப்படாதே பொறுமையாக இரு, நாளைக்கு கோயிலுக்கு சென்று வந்த பிறகு கடையை திறக்கலாம் என்று பழனிவேலுவை சமாதானப்படுத்தினார்.