- Home
- Cinema
- தொலைக்காட்சி
- புருஷன் கையால் பட்டுப்புடவை எடுத்தாலும் அம்மா வீட்டு நூல் புடவை மாதிரி வருமா? கோமதி வருத்தம்!
புருஷன் கையால் பட்டுப்புடவை எடுத்தாலும் அம்மா வீட்டு நூல் புடவை மாதிரி வருமா? கோமதி வருத்தம்!
Gomathi Emotional Speech : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் புருஷன் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்தாலும் அம்மா வீட்டிலிருந்து நூல் புடவை எடுத்துக் கொடுப்பதற்கு ஈடாகாது என்று கோமதி வருத்தமாக பேசினார்.

கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஒவ்வொருவரும் தயாராகும் நிலையில் தல தீபாவளி கொண்டாடும் தம்பதிகளுக்கு தீபாவளி சீர் கொடுக்கும் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதலாவதாக வசதியிலும் படிப்பிலும் வேலையிலும் உயர்ந்து நிற்கும் மீனாவின் குடும்பத்தினர் தல தீபாவளி கொண்டாடும் தனது மகளுக்கும், மருமகனுக்கும் சீர் கொடுத்தனர். அடுத்ததாக தங்கமயிலின் அப்பா மற்றும் அம்மா இருவரும் வீட்டிற்கு வந்து சீர் கொடுத்து அசத்தினர். இதற்கு பாண்டியனுக்கு கொடுக்க ஒருவர் கொண்டு வந்த ரூ.10 ஆயிரம் பணத்தில் தான் மாணிக்கம் தங்கமயிலுக்கு சீர் செய்துள்ளார்.
தீபாவளி சீர்வரிசை
அடுத்ததாக சுகன்யாவின் வீட்டிலிருந்து அவருடைய அம்மாவும், அப்பாவும் சீர் செய்ய வந்தனர். அவர்கள் பழனிவேலுவிற்கு கத்தையாக ரூ.500 நோட்டுகள் இருக்கும் அளவிற்கு பணத்தை கொடுத்துவிட்டு சென்றனர். இதில் மீனா மற்றும் தங்கமயிலுக்கு யாரும் பணம் கொடுக்காத நிலையில் பழனிவேலுவிற்கு மட்டும் பணம் கொடுப்பதற்கான காரணம் குறித்து இனி வரும் எபிசோடுகளில் காட்சிகள் இடம் பெறும் என்று தெரிகிறது.
பழனிவேல் - கோமதி: தாய்வீட்டு சீர்வரிசை
ஏற்கனவே அவர் மீது கடையிலிருந்து பணம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இப்போது மாணிக்கம் வேறு ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளார். அந்தப் பணத்தை பழனிவேலு தான் எடுத்தார் என்று கூட அவர் மீது குற்றம் சாட்டப்படலாம். மீனா, தங்கமயில் மற்றும் சுகன்யா ஆகியோருக்கு தல தீபாவளி சீர் கொடுக்கப்பட்ட நிலையில், ராஜீக்கு மட்டும் சீர் கொடுக்கப்படவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் - தீபாவளி
இதனை புரிந்து கொண்ட கோமதி, இங்க பாரு, நம்ம யோசித்தாலும் அந்த குடுப்பணை இல்லை. ஏனென்றால் அது நடக்கவே நடக்காது. புருஷன் ஆயிரக்கணக்காக பணம் செலவு செய்து பட்டுப்புடவை வாங்கி கொடுத்தாலும் பிறந்த வீட்டிலிருந்து ஒரு நூல் புடவையாவது வாங்கி கொடுப்பது போன்று வராது என்று கோமதி பேசினார். என்ன தான் இருந்தாலும் தனக்கு இத்தனை ஆண்டுகாலமாக தன்னுடைய பிறந்த வீட்டிலிருந்து தீபாவளி சீர் வரவில்லை என்ற ஆதங்கமும் வருத்தமும் கோமதிக்கு இருந்தாலும் அதே போன்று ஒரு நிலைமை இப்போது ராஜீக்கும் ஏற்பட்டுவிட்டது என்ற கவலை தான்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - தீபாவளி சீர்வரிசை
நம்ம ரெண்டு பேருக்கும் தீபாவளி சீர் கிடையாது என்று கோமதி சொல்ல அதற்கு மீனா உன்னுடைய அக்காவாக நான் இருந்து உனக்கு சீர் செய்கிறேன் என்றார். அதற்கு பாண்டியன் என்னப்பா நம்ம வீட்டு பொண்ணு அப்படியெல்லாம் விட்டு விடுவோமா என்றார். இதைத் தொடர்ந்து தன்னுடைய தம்பி பழனிவேலுவைப் பார்த்து பழனி இத்தனை வருடங்களாக எங்களுடன் தான் இருக்கிற, ஒரு முறையாவது நீ எனக்கு சீர் செய்திருக்கிறாயா என்று கேள்வி கேட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
உன்னுடைய மனைவி பிறந்த வீட்டிலிருந்து சீர் வந்துவிட்டது என்ற சந்தோஷத்தில் இருக்கிறார். அந்த சந்தோஷத்தை நீ எனக்கு கொடுத்திருக்கிறாயா என்று கேட்டார். மேலும், எல்லாருடைய சந்தோஷம் தான் முக்கியம் என்று யோசிக்கும் இந்த கோமதிக்கு அவரைப் பற்றி யோசிப்பதற்கு இங்கு யாரும் இல்லை. புலம்பி என்ன பிரயோஜனம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.