MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • வனிதா விஜயகுமார் முதல் பிரதீப் ஆண்டனி வரை.. மிகவும் சர்ச்சைக்குரிய பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்கள் லிஸ்ட்..

வனிதா விஜயகுமார் முதல் பிரதீப் ஆண்டனி வரை.. மிகவும் சர்ச்சைக்குரிய பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்கள் லிஸ்ட்..

பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய சில போட்டியாளர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..   

3 Min read
Author : Ramya s
Published : Nov 14 2023, 02:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Big Boss 3 winner

Big Boss 3 winner

அதிகம் பார்க்கப்பட்ட ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை கடந்து தற்போது 7-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளர் இடம்பெறுவர். அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய சில போட்டியாளர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
29

பிரதீப் ஆண்டனி 

பிக்பாஸ் 7 சீசனில், பல்வேறு உத்திகளுடன் விளையாடி வந்த பிரதீப் ஆண்டனி வலுவான போட்டியாளராக கருதப்பட்டார். ஆனால் அவர் மீது சக போட்டியாளர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அவர் பெண்களைப் பற்றி தகாத கருத்துக்களை தெரிவித்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் போட்டியாளர்கள், இதுகுறித்து உரிமைக்குரல் எழுப்பிய நிலையில் பிரதீப்பின் நடத்தை குறித்து போட்டியாளர்களிடம் தனித்தனியாக கேள்வி எழுப்பிய கமல்ஹாசன், பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து அவரை வெளியேற்றினார். இதன் மூலம் பிரதீப் ஆண்டனி சர்ச்சைக்குரிய பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக மாறி உள்ளார்.

39
<p>aishwarya dutta</p>

<p>aishwarya dutta</p>

ஐஸ்வர்யா தத்தா :

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா தத்தா, பிக்பாஸ் வீட்டில் இருந்த போது வீட்டிற்குள் சலசலப்பு ஏற்பட்டது. ஒரு டாஸ்க்கின் போது அவர் தனது சக போட்டியாளரான தாடி பாலாஜி மீது குப்பைகளை கொட்டினார்.  ஐஸ்வர்யா தனது சக போட்டியாளரான ரித்விகாவை "சென்னை நாய்" என்று இனவெறிக் கருத்தை தெரிவித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது..

49
Saravanan

Saravanan

1990-களின் பிரபல நடிகராக இருந்த சரவணன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தார். நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோட் ஒன்றில் சரவணன் சொன்ன தகவல் சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது நெரிசல் மிகுந்த பேருந்துகளில் பெண்களை சில்மிஷம் செய்யும் பழக்கம் தனக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார். இது தேசிய அளவிலான சலசலப்பை உருவாக்கியது. பெண்கள் மீதான கருத்துக்களுக்காக நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

59

பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் இமேஜை உருவாக்குகிறது அல்லது அவர்களின் இமேஜை உடைக்கிறது என்பதை சொல்லி தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் அவசியமில்லை. அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் நெகட்டிவ் இமேஜை பெற்றவர் ஜூலி.  ஜல்லிக்கட்டு போராட்டத்தால் பிரபலமடைந்த ஜூலி பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.. மாற்றி மாற்றி பேசுவது, பொய் கூறுவது போன்ற சர்ச்சைகளில் சிக்கி வெளியேறினார். 

69

மாடலாக இருந்த டிகை மீரா பிக்பாஸ் தமிழ் சீசன் 3 இல் பங்கேற்ற பிறகு மிகவும் பிரபலமானார். அவர் பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்தபோது தனது சக போட்டியாளர்களுடன் சண்டையிட்டார். பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே மீரா பல சர்ச்சைகளில் சிக்கினார். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் மீராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

79
madhumitha

madhumitha

ஒரு கல் ஒரு கண்ணாடி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, டிக்கிலோனா, விஸ்வாசம் போன்ற தமிழ் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர் மதுமிதா. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மற்ற போட்டியாளர்களை தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் விமர்சித்தார். எனினும் சில காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

89

நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சுவாரஸ்யமாக, இருவரும் பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களாக நுழைந்தனர். இந்த நிகழ்ச்சி தம்பதியினரை இணைக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது, ஆனால் அவர்கள் வீட்டிற்குள் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபடுவதைக் காண முடிந்தது.

99

நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சுவாரஸ்யமாக, இருவரும் பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களாக நுழைந்தனர். இந்த நிகழ்ச்சி தம்பதியினரை இணைக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது, ஆனால் அவர்கள் வீட்டிற்குள் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபடுவதைக் காண முடிந்தது.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved