- Home
- Cinema
- தொலைக்காட்சி
- TRP ரேஸில் தூக்கிவீசப்பட்ட அய்யனார் துணை; டாப்புக்கு வந்த எதிர்நீச்சல் 2! இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ
TRP ரேஸில் தூக்கிவீசப்பட்ட அய்யனார் துணை; டாப்புக்கு வந்த எதிர்நீச்சல் 2! இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த வாரம் டிஆர்பி ரேஸில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல் எது என்பதை பார்க்கலாம்.

Top 10 Tamil Serial TRP Rating
சின்னத்திரையில் சக்கைப்போடு போடும் சீரியல்களுக்கு தான் அதிகப்படியான டிஆர்பி ரேட்டிங் கிடைக்கும். அந்த டிஆர்பி ரேட்டிங்கை கருத்தில் கொண்டு தான் சீரியல்களின் வெற்றி, தோல்வி என்பது கணிக்கப்படுகிறது. ஏதேனும் சீரியலுக்கு டிஆர்பி கம்மியானால் அதற்கான கதைக்களத்தை மாற்றி டிஆர்பியை அதிகப்படுத்த பார்ப்பார்கள். அதேபோல் ஏதேனும் சீரியலுக்கு நல்ல ரேட்டிங் கிடைத்தால் அதே கதைக்களத்தை மெயிண்டெயின் செய்ய முனைப்பு காட்டுவார்கள். அதனால் டிஆர்பியை வைத்து தான் சீரியல்களின் தலையெழுத்தே இருக்கிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 40வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கை பார்க்கலாம்.
டாப் 10 பட்டியலில் புது சீரியல்
சன் டிவியில் கடந்த மாதம் வரை இராமாயணம் என்கிற டப்பிங் தொடர் ஒளிபரப்பாகி வந்தது. அந்த தொடர் முடிந்ததை அடுத்து அதற்கு பதிலாக ஹனுமன் என்கிற மற்றோரு டப்பிங் சீரியல் ஒளிபரப்பப்பட்டது. அந்த சீரியல் முதல் வாரமே 6.68 டிஆர்பி ரேட்டிங் பெற்று 10வது இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல் உள்ளது. கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் கடகடவென பின்னுக்கு தள்ளப்பட்டு 9வது இடத்தில் உள்ளது. இந்த சீரியலுக்கு 7.65 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. அன்னம் சீரியல் 7.87 புள்ளிகளுடன் 8ம் இடத்தில் உள்ளது.
சரிவை சந்தித்த சிறகடிக்க ஆசை
இந்த வார டிஆர்பி ரேஸில் 7-வது இடத்தை சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்துள்ளது. கடந்த வாரம் ஆறாவது இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த சீரியலுக்கு 8.10 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. இதையடுத்து எஞ்சியுள்ள 6 இடங்களையும் சன் டிவி சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. அதன்படி 8.55 டிஆர்பி ரேட்டிங் உடன் கேப்ரியல்லா நடித்த மருமகள் சீரியல் 6-ம் இடத்தில் உள்ளது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சன் டிவியின் பிரைம் டைம் சீரியலான கயல், 8.98 ரேட்டிங் உடன் 5-ம் இடத்தில் உள்ளது.
சிங்கப்பெண்ணே சீரியலை முந்திய எதிர்நீச்சல் 2
சன் டிவியின் நம்பர் 1 சீரியலாக கோலோச்சி வந்த சிங்கப்பெண்ணே, கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், கடந்த வாரம் இரண்டாம் இடத்தில் இருந்த அந்த சீரியல் இந்த வாரம் 9.58 புள்ளிகள் உடன் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. மூன்றாம் இடத்தில் அன்னம், கயல், மருமகள் சீரியல்களின் மெகா சங்கமம் உள்ளது. அதற்கு 9.76 புள்ளிகள் கிடைத்துள்ளது. கடந்த வாரம் 4வது இடத்தில் இருந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இந்த வாரம் கடகடவென முன்னேறி 9.80 புள்ளிகள் உடன் 2ம் இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை தக்க வைத்துள்ள மூன்று முடிச்சு சீரியலுக்கு 10.11 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.