- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கல்யாணத்துக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை தொடங்கிய சாமுண்டீஸ்வரி – பயந்து நடுங்கும் துர்கா!
கல்யாணத்துக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை தொடங்கிய சாமுண்டீஸ்வரி – பயந்து நடுங்கும் துர்கா!
Durga Marriage Function Starts : எங்கு தனக்கும் அம்மா பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கும் திருமணம் நடந்து விடுவோம் என்று துர்கா பயந்து நடுங்கும் நிலையில் கார்த்திக் உனக்கு நவீன் உடன் தான் திருமணம் நடக்கும் என்கிறார்.

Durga Marriage Function Starts : கார்த்திகை தீபம் 2 சீரியலானது விறுவிறுப்பாகவும், பரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இதில், நாளுக்கு நாள் புதிய புதிய டுவிஸ்டுகள் இடம் பெறும் வகையில் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக நடந்த டுவிஸ்டில் துர்காவை காதலிக்க ஆரம்பிக்கிறார் நவீன். ஆனால், ஆரம்பத்தில் காதலிக்காமல் இருந்த துர்காவிற்கு நாட்கள் செல்ல செல்ல நவீனை பிடிக்க ஆரம்பிக்கிறது.
ஒரு கட்டத்தில் தனக்கு அம்மா திருமண ஏற்பாடுகள் செய்ததைத் தொடர்ந்து அதில் விருப்பம் இல்லாத துர்கா நவீனை திருட்டுத் தனமாக திருமணம் செய்து கொண்டார். அது கார்த்திக்கிற்கு தெரிய வர இருவரையும் சேர்த்து வைப்பதாக வாக்கு கொடுத்து துர்காவை வீட்டிற்கு அழைத்து வருகிறார். துர்காவின் கல்யாணம் குறித்து சந்திரகலாவிற்கு சந்தேகம் வர அதிலிருந்து எப்படியோ துர்கா தப்பித்துவிட்டார். ஆனால் பரமேஸ்வரி பாட்டி வீட்டில் நடைபெற்ற கண்ணா மூச்சி விளையாட்டில் துர்கா தாலியை காட்டி அனைவரிடமும் மாட்டிக் கொண்டார்.
அதன் பிறகு நடந்த எல்லாவற்றையும் கூற, அங்கு நவீனும் வருகிறார். பின்னர் துர்கா மற்றும் நவீனை ராஜராஜன் ஏற்றுக் கொள்கிறார். இதனை ஆட்கள் வைத்து வீடியோ எடுத்த சந்திரகலா துர்காவின் திருமணத்தை சொல்ல முயற்சிக்க கார்த்திக் அதற்கு முட்டுக் கட்டை போடுகிறார். இப்படியெல்லாம் நடந்த நிலையில் துர்காவிற்கும் அம்மா பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அதில், துர்காவிர்கு நவீன் தான் நிச்சயதார்த்த மோதிரம் போடுகிறார்.
இதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் துர்காவின் திருமணத்திற்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைப் பார்த்து பயந்த துர்காவிற்கு கார்த்திக் ஆறுதலாக உனக்கும் நவீனுக்கும் தான் திருமணம் நடைபெறும் என்று கூறுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கார்த்திகை தீபம் 2 சீரியலின் இன்றைய எபிசோடு.