- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரோகிணி கிரேட் எஸ்கேப்... பொண்டாட்டி பேச்சைக் கேட்ட மனோஜுக்கு ஆப்பு - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
ரோகிணி கிரேட் எஸ்கேப்... பொண்டாட்டி பேச்சைக் கேட்ட மனோஜுக்கு ஆப்பு - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷின் ஸ்கூலுக்கு சென்றபோது பாதியில் வீட்டுக்கு வந்த மனோஜை, நாய் கடித்துவிடுகிறது. அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Siragadikka aasai serial Today Episode
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷ் படிக்கும் பள்ளிக்கு வந்த ஸ்பீச் கொடுக்க மனோஜுக்கு அழைப்பு வருகிறது. இதையடுத்து கிரீஷின் பள்ளிக்கு டிப் டாப் ஆக கிளம்பி செல்கிறார். அவர் கிரீஷின் ஸ்கூலுக்கு தான் போகிறார் என்கிற தகவல் ரோகிணிக்கு தெரியவந்ததை அடுத்து, மனோஜை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என முடிவெடுத்து, தனக்கு மயக்கம் வருவதாக கூறுகிறார் ரோகிணி. இதனால் பாதியிலேயே பதறியடித்து வீட்டுக்கு வருகிறார் மனோஜ். அப்போது அவரை வீட்டு வாசலில் வைத்து நாய் கடித்துவிடுகிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
மனோஜை கடிக்கும் நாய்
இதையடுத்து மனோஜ் காலில் காயத்துடன் வீட்டுக்குள் வருகிறார். அப்போது அந்த நாயின் உரிமையாளர் தன்னுடைய சீனு இவரை கடித்துவிட்டதாக கூறுகிறார். இதனால் கோபமடையும் விஜயா, உங்க நாயை வைத்து ஏன் என் பிள்ளையை கடிக்க வச்சிருக்கீங்க என சண்டை போடுகிறார். அதற்கு அவர், என்னுடைய சீனுவை கல்லால் அடிக்காமல் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என சொல்கிறார். இதையடுத்து வீட்டுக்கு ஊசி போட டாக்டர் வருகிறார். அவரிடம் தனக்கு ஊசி வேண்டாம் என்றும், தயவு செய்து மாத்திரையே கொடுத்து விடுமாறு கெஞ்சிக் கேட்கிறார் மனோஜ்.
மனோஜின் மழுப்பல் பதில்
அதற்கு டாக்டர், ஊசி போடலேயே ரேபிஸ் வந்துரும் என சொல்கிறார். பின்னர் குடும்பத்தினர் மனோஜை சமாதானப்படுத்துகிறார்கள். ரோகிணியோ, மனோஜ் நீ வேணா ஊசி போடும் போது என்னுடைய கையை பிடிச்சிக்கோ என சொல்கிறார். பின்னர் எப்படியோ மனோஜுக்கு ஊசி போட்டு விடுகிறார். பின்னர் வார வாரம் மருத்துவமனைக்கு வருமாறு கூறிவிட்டு செல்கிறார் டாக்டர். அதன்பின்னர் மனோஜிடம் ஏன் ஸ்கூலுக்கு போகாமல் திரும்பி வந்த என கேட்கிறார் விஜயா. அதற்கு அவர், தான் வீட்டில் பர்சை மறந்து வைத்துவிட்டதாகவும் அதை எடுக்க வந்ததாகவும் கூறி மழுப்புகிறார்.
மனோஜுக்கு ரேபிஸ் நோயா?
பின்னர் வீட்டில் உள்ளவர்களெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போது, விஜயா, ரோட்டில் செடி நட்ட விஷயத்தை கூறுகிறார். இதைக்கேட்ட அண்ணாமலை, உண்மையாவா சொல்ற என கேட்க, இதில் என்ன இருக்கு செடி நடுவது நல்ல விஷயம் தானே என சொல்கிறார் விஜயா. இந்த வீட்டை சுத்தி இருந்த மரங்களை வெட்ட சொன்னதே நீ தான அதான் கேட்டேன் என கூறுகிறார் அண்ணாமலை. மனோஜ் ஸ்கூலுக்கு செல்வதை தடுத்துவிட்டதால் நிம்மதி பெருமூச்சு விடுகிறார் ரோகிணி. மறுபுறம் மனோஜை கடித்த நாய் இறந்துவிட்டதாக செய்தி வருகிறது. அதேபோல் மனோஜின் செயல்களும் நாய் போலவே உள்ளது. இதனால் அவருக்கு ரேபிஸ் நோய் வந்ததா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கான விடை இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும்.