- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கிரீஷ் படிக்கும் ஸ்கூலை கண்டுபிடிக்கும் மீனா... வசமாக சிக்கப்போகும் ரோகிணி? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
கிரீஷ் படிக்கும் ஸ்கூலை கண்டுபிடிக்கும் மீனா... வசமாக சிக்கப்போகும் ரோகிணி? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷ் படிக்கும் பள்ளியை மீனா கண்டுபிடிக்கப் போகிறார். அது எப்படி நடந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தனக்கு பள்ளியில் ஸ்பீச் கொடுக்க அழைப்பு வந்திருக்கும் விஷயத்தை வீட்டில் வந்து சொல்கிறார். அப்போது அதைக்கேட்ட முத்து, நீ என்ன போய் பேசப்போற... எப்படி ஏமாத்துவது, எப்படி பணத்தை திருடுவதுனு தான் போய் பேசப்போற என கூற, அதைக்கேட்டு கடுப்பாகும் ரோகிணி, எப்பவும் அதைப்பற்றியே பேசாதீங்க. அவரை ஒரு ஸ்கூல்ல சிறப்பு விருந்தினராக கூப்டிருக்காங்க. படிக்காத உங்களுக்கெல்லாம் அது புரியாது என பதிலடி கொடுக்கிறார். தன் கணவரை படிக்காதவர் என சொன்னதால் கடுப்பாகும் மீனா, ரோகிணியிடம் வாக்குவாதம் செய்கிறார்.
முத்துவுக்கு சவால்விடும் மனோஜ்
படிக்காத பெரிய பெரிய ஆளுங்க தான், பெரிய கூட்டத்திற்கு முன் எவ்வளவோ நல்ல விஷயங்களையெல்லாம் பேசி இருக்காங்க. நல்ல எண்ணம் இருந்தாலே போதும் யார் வேண்டுமானாலும் மேடையில் பேசலாம் என சொல்கிறார் மீனா. உடனே மனோஜை பார்த்து படிக்காதவர்களெல்லாம் பொறாமைப் பட வேண்டாம் என சொல்கிறார் ரோகிணி. இதன்பின்னர் பேசும் முத்து, இவன பார்த்து எனக்கு பொறாமையா இருக்கா.., இவன் பேசுறத பசங்க கேட்க போறாங்க பாரு அவங்கள நினைச்சா தான் எனக்கு பயமா இருக்கு என சொல்கிறார் முத்து. முடிஞ்சா நீ ஸ்பீச் கொடுடா பார்ப்போம் என சவால் விடுகிறார் மனோஜ்.
நாயிடம் கடிவாங்கும் மனோஜ்
மனோஜின் சவாலை ஏற்று முத்துவும் பேசுகிறார். முத்து தமிழில் உரையாற்றிய பின்னர் பேச எழும் மனோஜ், ஆங்கிலத்தில் பீட்டர் விடுகிறார். இதைக்கேட்டு வீட்டு வாசலில் நாய் கத்துகிறது. நீ பேசுறது நாய்க்கே பொறுக்கலடானு எல்லாரும் கிண்டல் செய்கிறார்கள். இதையடுத்து வீட்டுக்கு வெளியே சென்று அந்த நாயை கல்லை எடுத்து அடிக்கிறார் மனோஜ். அதன்பின் மறுநாள் அவர் வெளியே செல்லும் போது அந்த நாய் மனோஜை கடித்துவிடுகிறது. அதுமட்டுமின்றி அந்த நாய் இறந்தும் விடுகிறது. நாய் இறந்துவிட்டால், உங்களுக்கும் எதாச்சும் ஆகும் என மருத்துவர்கள் சொன்னதால் டர்ராகிப் போகிறார் மனோஜ்.
கிரீஷின் பள்ளிக்கு செல்லும் மீனா
மனோஜ் கிரீஷின் பள்ளிக்கு ஸ்பீச் கொடுக்கப் போவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் மீனாவுக்கும் டெகரேஷன் செய்ய ஒரு பள்ளியில் இருந்து அழைப்பு வருகிறது. அநேகமாக அது கிரீஷ் படிக்கும் பள்ளியாக இருக்க அதிகம் வாய்ப்பு உள்ளது. அங்கு மீனா டெகரேஷன் செய்ய செல்லும் போது நிச்சயம் கிரீஷை கண்டுபிடிக்கக் கூடும். அப்படி கண்டுபிடித்தால் என்ன ஆகும்? அதன்பின் ரோகிணி பற்றிய உண்மை வெளிவருமா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் தான் பார்க்க வேண்டும். கிரீஷை பற்றிய உண்மை தெரிந்தால் ரோகிணி வீட்டை விட்டே துரத்தப்படுவார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.