- Home
- Cinema
- தொலைக்காட்சி
- விவாகரத்து வழக்கில் எதிர்பாரா திருப்பம்.... சோழனின் முடிவால் அதிர்ந்துபோன நிலா - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
விவாகரத்து வழக்கில் எதிர்பாரா திருப்பம்.... சோழனின் முடிவால் அதிர்ந்துபோன நிலா - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
அய்யனார் துணை சீரியலில் சோழன் மற்றும் நிலாவின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது இருவரும் எடுத்த முடிவு என்ன என்பதை பார்க்கலாம்.

Ayyanar Thunai Serial Today Episode
அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில், நடேசன் நிலாவின் பேச்சைக் கேட்காமல் மீண்டும் வெளியே பனியில் நடுங்கியபடி படுத்திருக்கிறார். இதைப்பார்த்த நிலா, மறுபடியும் எதுக்கு வெளியே உட்காந்திருக்கீங்க. உங்களை உள்ளே தான படுக்க சொன்னேன். மரியாதையா கட்டிலை தூக்கிட்டு உள்ளே வந்து படுங்க என சொல்கிறார். நிலாவின் மிரட்டலுக்கு பின் நடேசன் வேறு வழியின்றி உள்ளே சென்று படுக்கிறார். அதன்பின்னர் தான் தெரிகிறது, நடேசன் பயன்படுத்தி வந்த தலையணையும், போர்வையும் பல நாட்களாக துவைக்காமல் இருப்பதால் ரொம்ப வாடை அடிக்கிறது. அதன்பின் நிலா அதை பிடுங்கி வெளியே போடுகிறார்.
டைவர்ஸ் கேஸ் பற்றி சொல்லும் நிலா
பின்னர் சோழனிடம் தனியாக சென்று பேசும் நிலா, நாம் இருவரும் நாளைக்கு கோர்ட்டுக்கு போக வேண்டும் என்கிற விஷயத்தை சொல்கிறார். நாம் இருவரும் டைவர்ஸுக்கு அப்ளை பண்ணிருக்கோம்ல, அந்த கேஸ் நாளைக்கு விசாரணைக்கு வருது, கடந்த முறை செல்ல முடியவில்லை. அதனால் இம்முறை கண்டிப்பா போயே ஆகணும் என சொல்கிறார் நிலா. இதையடுத்து சோகமடைகிறார் சோழன், அப்போது தன் அண்ணன், தம்பிகளை அவர் பார்க்க வர, அப்போது அனைவரும் ஒவ்வொரு பக்கம் தங்கள் காதலிகளோடு கடலைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மேலும் அப்செட் ஆகிறார் சோழன்.
அப்செட் ஆகும் சோழன்
மறுபுறம் நிலா, தன்னுடைய புராஜெக்ட் விஷயமாக லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது நிலாவிடமே ஓப்பனாக கேட்டுவிடலாம் என முடிவெடுத்து பேசும் சோழன், உங்களுக்கு நிஜமாவே டைவர்ஸ் வேணுமா என கேட்கிறார். அதற்கு நிலா, பின்ன உங்களோட என்னை வாழ சொல்றீங்களா என மூஞ்சில் அடிச்சது போல் சொல்லிவிடுகிறார். இதைக்கேட்டு மனமுடைந்து போன சோழன் எதுவும் பேசாமல் அங்கிருந்து எழுந்து சென்றுவிடுகிறார். சோழன் சோகமாக சென்றதை பார்த்ததும் நிலா வருத்தப்படுகிறார். அவசரப்பட்டு அவனிடம் இப்படி சொல்லிவிட்டோமே என ஃபீல் பண்ணுகிறார்.
கோர்ட்டில் நடந்த ட்விஸ்ட்
இதையடுத்து மறுநாள் காலையில், நிலாவும், சோழனும் கோர்ட்டுக்கு போய் ஆஜர் ஆகிறார்கள். அங்கு முதல் வழக்கே நிலா - சோழனுடைய டைவர்ஸ் கேஸ் தான் வருகிறது. அப்போது உங்கள் முடிவில் மாற்றம் இருக்கிறதா என ஜட்ஜம்மா இருவரையும் கேட்கிறார். அதற்கு நிலா பதில் பேசாமல் நிற்க, சோழன், நாங்க டைவர்ஸுக்கு தயாராக இருக்கிறோம் எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என சொல்கிறார். இதைக்கேட்டு நிலா ஷாக் ஆகிறார். அதன்பின்னர் இவர்களை மறுபடியும் கவுன்சிலிங் அனுப்பி வைக்கிறார்கள். அப்போது அங்கே வரும் வக்கீல், கண்டிப்பாக அடுத்த ஹியரிங்கின் போது உங்களுக்கு டைவர்ஸ் கிடைச்சிரும்னு சொல்லுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

