- Home
- Cinema
- தொலைக்காட்சி
- விவாகரத்துக்கு ஓகே சொன்னாரா நிலா?... கோர்ட்டில் நடந்த செம ட்விஸ்ட் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
விவாகரத்துக்கு ஓகே சொன்னாரா நிலா?... கோர்ட்டில் நடந்த செம ட்விஸ்ட் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் - நிலாவின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், அதில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ayyanar Thunai Serial Twist
அய்யனார் துணை சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த சீரியலில் பாண்டியன் புதிதாக மெக்கானிக் ஷாப் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதன் திறப்பு விழாவுக்கு நடேசன், சோழன், நிலா, சேரன், பல்லவன் மற்றும் பாண்டியனின் காதலில் வானதி எல்லோரும் வந்து கலந்துகொண்டனர். கடைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறேன் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்த பாண்டியன், அதை வானதியிடமும் சொல்லாமல் இருந்தார். அவரோ தன் பெயரை தான் பாண்டியன் கடைக்கு வைத்திருப்பான் என நினைத்திருக்க, அவரோ, தன் அண்ணன் சேரன் பெயரை கடைக்கு வைத்திருந்தார் இதனால் வானதி செம அப்செட் ஆனார்.
கடை திறப்பு விழாவில் நடந்த சம்பவம்
இதன் பின்னர் கடையின் திறப்பு விழாவின் போது ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைக்க பாண்டியன் தன்னை தான் அழைப்பான் என்று வானதி எதிர்பார்த்து காத்திருக்க, அவரோ தன் அண்ணன் சேரனிடம் கத்திரியை கொடுத்து வெட்ட சொல்கிறார். பின்னர் சேரன் எல்லாரும் சேர்ந்து ஓபன் பண்ணலாம் என முடிவெடுத்து அனைவரையும் கையை பிடிக்க சொல்லி, ரிப்பன் வெட்டுகிறார். உள்ளே போனதும் குத்து விளக்கு இருக்கிறது. சரி, இதையாவது தன்னை முதலில் ஏற்ற பாண்டியன் அழைப்பான் என வானதி காத்திருக்க, பாண்டியன் தன் அண்ணி நிலாவை அழைத்து குத்து விளக்கு ஏற்றச் சொல்கிறார்.
சோழன் - நிலா விவாகரத்து வழக்கு
இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற வானதி, எல்லோரும் சென்ற பிறகு பாண்டியனிடம் சண்டை போடுகிறார். பாண்டியனின் கடை திறப்பு விழாவை முடித்துவிட்டு ஆபிஸுக்கு செல்லும் நிலாவுக்கு ஒரு போன் கால் வருகிறது. வக்கீல் தான் போன் போட்டு பேசுகிறார். உங்களின் டைவர்ஸ் கேஸ் விசாரணைக்கு வர உள்ளதாகவும் அதற்காக நீங்களும், சோழனும் கோர்ட்டுக்கு வர வேண்டும் என அழைக்கிறார். சோழன் மீது அதிருப்தியில் இருக்கும் நிலா அவனை விவாகரத்து செய்யும் முடிவில் தான் இருக்கிறார். இதையடுத்து சோழனும், நிலாவும் விவாகரத்து வழக்குக்காக கோர்ட்டுக்கு வருகிறார்கள். அங்கு தான் ஒரு ட்விஸ்ட் நடக்கிறது.
முடிவை மாற்றிய நிலா?
இருவரும் விவாகரத்து முடிவோடு கோர்ட்டுக்கு செல்ல, அங்கு நிலாவின் தந்தையும் வேறு ஒரு வேலையாக வந்திருக்கிறார். அப்போது நிலாவும் சோழனும் விவாகரத்து வழக்குக்காக வந்திருப்பதை அறிந்த அவர், எனக்கு நீ இவன கல்யாணம் பண்ணிக்கும்போதே தெரியும், நீ இவனை விவாகரத்து தான் பண்ணுவேன்னு என திமிராக பேசுகிறார். இதனால் கோபமடையும் நிலா, விவாகரத்து முடிவில் இருந்து பின் வாங்குவதோடு, நாங்கள் இருவரும் உங்களுக்கு முன்னாடி சந்தோஷமாக வாழ்ந்து காட்டுவோம் என சவால் விடுகிறார். அப்போது அருகில் இருக்கும் சோழன், அப்பாடா இவரால இப்போ தான் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கு என சந்தோஷப்படுகிறார். இதையடுத்து என்ன ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

