- Home
- Cinema
- தொலைக்காட்சி
- டாப் 10 சீரியல்கள் : இந்த வாரம் அதிக TRP ரேட்டிங்கை வாரிசுருட்டியது எந்தெந்த தொடர்கள்?
டாப் 10 சீரியல்கள் : இந்த வாரம் அதிக TRP ரேட்டிங்கை வாரிசுருட்டியது எந்தெந்த தொடர்கள்?
தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது. இந்த வாரம் சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டு உள்ள செல்லமே செல்லமே சீரியலும் இடம்பெற்றுள்ளது. அதன் ரேட்டிங்கை பார்க்கலாம்.

Top 10 Tamil Serial TRP Rating
சின்னத்திரை சீரியல்களை விரும்பிப் பார்ப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தான் தற்போது வாரத்தின் 7 நாட்களும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ரசிகர்களை கவரும் விதமாக ஏராளமான புத்தம் புது சீரியல்களும் ஒளிபரப்பிய வண்ணம் உள்ளனர். அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 50வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் என்னென்ன சீரியல்கள் இடம்பிடித்துள்ளது என்பதை பார்க்கலாம்.
டாப் 10ல் நுழைந்த செல்லமே செல்லமே
இந்த வார டாப் 10 பட்டியலில் 10வது இடத்தை சன் டிவியில் ரேஷ்மா நடிப்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள செல்லமே செல்லமே என்கிற சீரியல் பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு 6.64 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்த சின்ன மருமகள் சீரியலை பின்னுக்கு தள்ளி டாப் 10க்குள் நுழைந்துள்ளது செல்லமே செல்லமே சீரியல். கடந்த வாரம் 7-வது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் 9-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. அந்த சீரியலுக்கு 7.79 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
முன்னேறிய அன்னம் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை, கடந்த வாரத்தைப் போல் இந்த வாரம் 8-ம் இடத்திலேயே நீடிக்கிறது. கடந்த வாரம் 8.35 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியலுக்கு இந்த வாரம் அதைவிட குறைவாக 8.00 டிஆர்பி புள்ளிகள் தான் கிடைத்திருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக 7-வது இடத்தை அன்னம் சீரியல் பிடித்துள்ளது. கடந்த வாரம் 8.31 புள்ளிகள் உடன் 9-வது இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் கடகடவென முன்னேறி 8.39 புள்ளிகள் உடன் 7-ம் இடத்துக்கு தாவி இருக்கிறது.
சரிவை சந்தித்த அய்யனார் துணை
விஜய் டிவியின் டிரெண்டிங் சீரியலான அய்யனார் துணை, கடந்த வாரம் ஐந்தாம் இடத்தில் இருந்த நிலையில். இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 6-ம் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு 8.42 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் உள்ளது. கடந்த வாரம் நான்காம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 8.57 ரேட்டிங் உடன் 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த வாரம் நான்காம் இடத்தை மருமகள் சீரியல் பிடித்துள்ளது. கடந்த வாரம் 6-ம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல் மடமடவென முன்னேறி 8.67 புள்ளிகள் உடன் 4-ம் இடத்தில் உள்ளது.
ஆதிக்கம் செலுத்தும் சன் டிவி சீரியல்கள்
வழக்கம் போல் சன் டிவி சீரியல்கள் தான் இந்த வாரமும் முதல் மூன்று இடங்களை ஆக்கிரமித்து உள்ளன. மூன்றாவது இடத்தை கயல் சீரியல் பிடித்துள்ளது. அதற்கு 9.07 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதையடுத்து இரண்டாவது இடத்தில் சிங்கப்பெண்ணே சீரியல் உள்ளது. இந்த சீரியலுக்கு 9.89 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. முதலிடத்தில் மூன்று முடிச்சு சீரியல் தான் நங்கூரமிட்டு இருக்கிறது. இந்த சீரியலுக்கு 10.34 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன.

