MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • இராவணனிடம் சிக்கும் தர்ஷன்... சாருபாலா எண்ட்ரியால் கதிகலங்கிய ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது

இராவணனிடம் சிக்கும் தர்ஷன்... சாருபாலா எண்ட்ரியால் கதிகலங்கிய ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஜனனியிடம் வழக்கு தொடர்பாக பேச சாருபாலா, ஆதி குணசேகரன் வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 02 2026, 10:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் தனக்கு வேலை கிடைத்துவிட்டதாக வீட்டில் உள்ள அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்திருந்தார். இதையடுத்து ஆபிஸுக்கு முதல் நாள் சென்றபோது தான் தர்ஷனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தர்ஷனின் டீம் லீடராக ஒரு லேடி வந்திருந்தார். அவர் வேறுயாருமில்லை, வில்லாதி வில்லி அறிவுக்கரசியின் தங்கச்சி அன்புக்கரசி தான். அவரைப்பார்த்து ஷாக் ஆன தர்ஷன், நீ எப்படி இங்க என கேட்டதும், நான் இங்க படிச்சு வரல, என்னுடைய திறமையை வைத்து இங்கு வேலைக்கு சேர்த்துக் கொண்டார்கள் என கூறுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
தர்ஷனை வைத்து காய் நகர்த்தும் இராவணன்
Image Credit : youtube/suntv

தர்ஷனை வைத்து காய் நகர்த்தும் இராவணன்

தர்ஷனிடம் பேசும் அன்புக்கரசி, நானும், என்னுடைய அக்காவும் உங்களை திருமணம் செய்துகொள்ள சொல்லி எந்தவித தொந்தரவும் செய்யமாட்டோம். நீங்க இங்க நிம்மதியா வேலை பார்க்கலாம். உங்களுக்கு பார்கவியோடு மீண்டும் திருமணம் நடக்கப்போகுதுன்னு கேள்விப்பட்டேன், உங்களுக்கு வாழ்த்துக்கள் என கூறுகிறார் அன்புக்கரசி. இதில் மற்றொரு ட்விஸ்ட் என்னவென்றால், தர்ஷன் வேலைக்கு சேர்ந்துள்ளது வில்லன் இராவணன் ஆதிமுத்துவின் ராம்ஸ் கம்பெனி தான். அவரை திட்டமிட்டு தான் இங்கு வேலைக்கு சேர்த்திருக்கிறார் இராவணன். தர்ஷன் மூலமாக இனி அவர் நிறைய கேம் ஆடவும் வாய்ப்பு உள்ளது.

Related Articles

Related image1
ஜனனிக்கு ஆப்பு... ஆதி குணசேகரனின் முடிவுக்கு ஓகே சொல்வாரா ஈஸ்வரி? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related image2
ஜனனி போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்... அந்தர் பல்டி அடித்த விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது ட்விஸ்ட்
35
சாருபாலா எண்ட்ரி
Image Credit : youtube/suntv

சாருபாலா எண்ட்ரி

மறுபுறம் வீட்டில் தன் மீதான கேஸை எல்லாம் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி ஆகியோர் வாபஸ் வாங்கிய மிதப்பில் இருக்கும் ஆதி குணசேகரன், இந்த வழக்கு பற்றி ஆடிட்டரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இந்த கேஸில் சாருபாலா மட்டும் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று ஆடிட்டர் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து வீட்டுக்குள் ஒரு கார் எண்ட்ரி ஆகிறது. அந்த காரில் இருந்து சாருபாலா இறங்கி வருகிறார். அவரைப் பார்த்ததும், ஆதி குணசேகரனும், அவரது தம்பிகளும் வெட வெடத்துப் போகிறார்கள். அவரை வாசலில் வந்து வரவேற்று உள்ளே அழைத்து செல்கிறார் ஜனனி.

45
புலம்பும் கதிர்
Image Credit : youtube/suntv

புலம்பும் கதிர்

உள்ளே சென்றதும், நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி, விசாலாட்சி ஆகியோரிடம் நலம் விசாரிக்கும் சாருபாலா, கேஸ் விஷயமாக உங்களுடன் தனியாக பேச வேண்டும் என்று ஜனனியை மாடிக்கு அழைத்து செல்கிறார். அப்போது அதை வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருந்த கதிர், என்ன நினைச்சிக்கிட்டு இருக்கா இவ, நேத்து அந்த சக்தி பயல எங்கயோ வெளிய அனுப்பி விட்ருக்கா, இப்போ இந்த வக்கீல கூட்டிட்டு வீட்டுக்கே வந்திருக்கா, இவ எல்லைமீறி போறா அண்ணேன் என ஆதி குணசேகரனிடம் சொல்லி புலம்புகிறார். அப்போது அருகில் இருந்த ஆடிட்டர், டென்ஷன் ஆகாதீங்க சார், அவங்களால ஒன்னும் செய்ய முடியாது என சொல்ல, யோவ் கேஸ் முடியுற வரைக்கும் வராம இருந்தால் நல்லதுனு நீ தானயா சொன்ன என எகிறுகிறார் கதிர்.

55
சாருபாலாவிடம் பிரச்சனையை சொன்ன ஜனனி
Image Credit : youtube/suntv

சாருபாலாவிடம் பிரச்சனையை சொன்ன ஜனனி

பின்னர் சாருபாலாவை ரூமுக்குள் அழைத்து செல்கிறார் ஜனனி. நீங்களே இந்த வழக்கை வாதாட போறீங்கனு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு என சொல்கிறார் ஜனனி. போன வேலை சீக்கிரமா முடிஞ்சிருச்சு, அதனால நானே பாத்துக்கலாம்னு வந்துட்டேன் என கூறுகிறார் சாருபாலா. அதன்பின்னர் ரேணுகா, நந்தினி மற்றும் ஈஸ்வரி அழைத்து வருமாறு ஜனனியிடம் கூறுகிறார் சாருபாலா. அப்போது வீட்டில் சில பிரச்சனைகள் நடந்துவிட்டதாகவும் அதில் அவர்கள் மூவரும் வழக்கை வாபஸ் வாங்கும் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் சொல்கிறார் ஜனனி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : கல்யாண வீட்டில் கலாட்டா... பார்கவியால் வெடித்த புது பிரச்சனை
Recommended image2
Siragadikka Aasai : பதவி வெறியில் சிந்தாமணி போட்ட டீலிங்... தலைவி பதவியை தூக்கி எறிவாரா மீனா?
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
ஜனனிக்கு ஆப்பு... ஆதி குணசேகரனின் முடிவுக்கு ஓகே சொல்வாரா ஈஸ்வரி? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
ஜனனி போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்... அந்தர் பல்டி அடித்த விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved