- Home
- Cinema
- தொலைக்காட்சி
- உண்மை தெரிந்த பிறகும் டிராமா போடும் சந்திரகலா – வில்லிக்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம்!
உண்மை தெரிந்த பிறகும் டிராமா போடும் சந்திரகலா – வில்லிக்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம்!
Chandrakala continues to create drama Karthigai Deepam 2 : கார்த்திகை தீபம் 2 சீரியலில் உண்மை தெரிந்த பிறகும் கூட சந்திரகலா போடும் டிராமாவிற்கு எல்லையில்லேயே இல்லாமல் போய்விட்டது.

Chandrakala continues to create drama Karthigai Deepam 2 : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம். முதல் சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிலையில் 2ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது வரையில் 967 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது. சாமுண்டீஸ்வரியின் மூத்த மகள் ரோகிணி கர்ப்பமாக இருக்கும் சூழலில் 2ஆவது மகள் ரேவதிக்கு திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது 3ஆவது மகளான துர்காவிற்கு திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு மணமேடை வரை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்னும் தாலி கட்ட வேண்டியது தான் பாக்கி.
என்னதான் உடன் பிறந்த சகோதரியாக இருந்தாலும், அவரையும், அவரது குடும்பத்தையும் பழி தீர்க்க தங்கை காத்துக் கொண்டிருப்பது காலம் காலமாக நாம் அன்றாடம் எதிர்கொண்டு வரும் சம்பவம் தான். ஒரு சிலரது குடும்பத்தில் அக்கா தங்கை பிரச்சனையாக இருக்கலாம். இன்னும் ஒரு சிலர் குடும்பத்தில் அண்ணன் தம்பிக்கு இடையில் பிரச்சனை இருக்கலாம். இப்படி குடும்பத்திற்குள்ளாக நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதுதான் கார்த்திகை தீபம் 2 சீரியல்.
இந்த சீரியலில் கார்த்திக் ராஜ், வைஷ்ணவி சதீஷ் (ரேவதி), சாமுண்டீஸ்வரி (ரேஸ்மா பசுபுலேட்டி), மைதிலி (ரேஷ்மா), காளியம்மாள் (ஃபாத்திமா பாபு) என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். என்னதான் திருமணம் நடந்தாலும் கணவர் வேண்டாமென்று அக்காவுடன் இருந்து கொண்டு அவருக்கு தெரியாமல் கணவருடன் ரகசியமாக பேசி வரும் சந்திரகலா தனது அக்காவின் குடும்பத்தை பழி தீர்க்க துடியாக துடிக்கிறார்.
அவரிடமிருந்து அவரது கணவர் சிவனாண்டியிடமிருந்தும் தனது மாமியாரையும், அவரது குடும்பத்தையும் காப்பாற்றவே மருமகன் கார்த்திக் போராடி வருகிறார். கிட்டத்தட்ட 75 சதவிகிதம் வரையில் குடும்பத்திற்காக எல்லாவற்றையும் செய்த கார்த்திக் இப்போது துர்காவின் திருமணத்தையும் அவரது ஆசைப்படியே நடத்த உள்ளார். கார்த்திகை தீபம் 2 இன்றைய 968 ஆவது எபிசோடில் தாலி கட்டப் போகும் நேரத்தில் செல்வத்தின் காதலி மண்டபத்திற்கு வந்து திருமணத்தை தடுத்து நிறுத்துகிறார். வசந்தாவை பார்த்து சந்திரகலா அதிர்ச்சி அடைகிறார். இதைத் தொடர்ந்து, அங்கு நவீன் வரவே, இவனை என்னால் மன்னிக்கவே முடியாது என்று சந்திரகலா ஆதங்கப்படுகிறார்.
ஆனால், அவரை இப்படி பேசாதீங்க, இப்படி பேசுவதை நிறுத்துங்க என்று அம்மாவிடம் துர்கா கெஞ்ச, நவீனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று சந்திரகலா கேட்கவே, ஏற்கனவே நவீன் கட்டிய தாலியை துர்கா காண்பிக்கிறார். இதைப் பார்த்த சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடு.