- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பெத்த அம்மாவே என்னை அசிங்கப்படுத்துனாங்க: பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் நடிகை சாந்தினி எமோஷன்!
பெத்த அம்மாவே என்னை அசிங்கப்படுத்துனாங்க: பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் நடிகை சாந்தினி எமோஷன்!
Chandhini Prakash Emotionally Talk About Her Mother : பிரபல சீரியல் நடிகை சாந்தினி, தன்னுடைய அம்மாவே தன்னை ஆசைப்படுத்துவது போல் விமர்சனம் செய்ததாக எமோஷ்னலாக பேசியுள்ளார்.

சீரியல் நடிகை சாந்தினி:
கடந்த சில வருடங்களாகவே, வெள்ளித்திரை பிரபலங்களுக்கு நிகரான வரவேற்பையும், பிரபலத்தையும் அடைகிறார்கள். குறிப்பாக இவர்களை பற்றிய எந்த ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் வெளியானாலும்... அது காட்டு தீ போல் பரவி விடுகிறது. அந்த வகையில் தான், ஏராளமான சீரியலில் வில்லியாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்த சாந்தினி தன்னை பற்றி கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சையில் சிங்கிள் பசங்க:
தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்... பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் சுகன்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கிள் பசங்க என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூமாபட்டிக்கு ஜோடியாக டான்ஸ் ஆடி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இவர்களது நெருக்கம், பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
இதெல்லாம் ஒரு மூஞ்சியா:
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த விஜய் டிவியின் விருது விழா நிகழ்ச்சியில் சாந்தினி பேசும்போது, "நான் நடிக்க வந்தபோது பல்வேறு விமார்சனங்களுக்கு ஆளானேன். இதெல்லாம் ஒரு மூஞ்சியா, நீ நடிச்சு எங்கே ஜெயிக்க போற, இது எல்லாம் வேலையில்லாத வேலை அப்படினு மற்றவங்க சொன்னால் கூட பரவாயில்லை. என் அம்மாவே சொன்னாங்க. ஆனால் மக்கள் என்னை ஒரு நடிகையாக ஏற்றுகொண்டனர் என்று கண் கலங்கி பேசியுள்ளார்.
காந்தாரா சாப்டர் 1 படத்திற்காக அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து நடித்தது ஏன்? ரிஷப் ஷெட்டி விளக்கம்
இன்ஸ்டாவில் ஆக்டிவ்:
இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கும் சாந்தினி, விஜய் டிவி சீரியல்களை தவிர, சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தை போல, சீரியலிலும் நடித்துள்ளார். மேலும் ரஞ்சிதமே, நட்சத்திர கொண்டாட்டம், சீரியல் நடிகைகள் கலந்து கொண்டு விளையாடிய நட்சத்திர கபடி போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதந்தோறும் ரூ.1 லட்சம் இஎம்ஐ கட்ட வேண்டும்; கடுமையாக உழைத்தவர் ரோபோ சங்கர் - நாஞ்சில் விஜயன்!