- Home
- Cinema
- மாதந்தோறும் ரூ.1 லட்சம் இஎம்ஐ கட்ட வேண்டும்; கடுமையாக உழைத்தவர் ரோபோ சங்கர் - நாஞ்சில் விஜயன்!
மாதந்தோறும் ரூ.1 லட்சம் இஎம்ஐ கட்ட வேண்டும்; கடுமையாக உழைத்தவர் ரோபோ சங்கர் - நாஞ்சில் விஜயன்!
Nanjil Vijayan Talk About Robo Shankar Hard Work : மறைந்த காமெடி நடிகர் ரோபோ சங்கர் உயிருடன் இருந்த போது தன்னுடைய வீட்டிற்கு மாதம் ரூ.1 லட்சம் இஎம்ஐ கட்ட வேண்டும், வாய்ப்பு இல்லை என்றால் அவர் என்ன செய்வார், என்றும் நாஞ்சில் விஜயன் கூறியுள்ளார்.

இந்திரஜா மற்றும் ரோபோ சங்கர்
மறைந்த காமெடி நடிகர் ரோபோ சங்கர் பற்றி விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, அவரது குடும்பத்தின் கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்துள்ளார். நடிகர் ரோபோ சங்கர் மதுரையைச் சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். ரோபோ சங்கர் நடிகர், ஸ்டாண்ட் அப் காமெடியன், டான்ஸராக தன்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ரோபோ சங்கருக்கு, அந்த நிகழ்ச்சியில் ரோபோ கெட்டப் போட்டதால் ரோபோ சங்கர் என்று அழைக்கப்பட்டார். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக அவர் தர்ம சக்கரம், படையப்பா, ஜூட், உயிரோசை, ஏய் போன்ற படங்களில் சினிமா நடித்துள்ளார். ஆனால், இந்தப் படங்களில் அவரது கதாபாத்திரங்கள் பெரிதாக பேசப்படவில்லை.
ரோபோ சங்கர் மற்றும் இந்திரஜா
இது போன்று ஒரு சில படங்களில் நடித்திருந்த ரோபோ சங்கருக்கு தனுஷின் மாரி படம் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, சிங்கம் 3, கலகலப்பு 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், மாரி 2, விஸ்வாசம், மிஸ்டர் லோக்கல், ஹீரோ, கோப்ரா, தேசிங்கு ராஜா 2, சொட்ட சொட்ட நனையுது ஆகிய படங்களில் நடித்துள்ளார். கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 என்ற ரியாலிட்டி ஷோவில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். கடந்த வாரத்திற்கு முன்னதாக நடைபெற்ற எலிமினேஷன் சுற்று போட்டியில் அவர் எலிமினேட் செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சியிலிருந்து செல்லும் போது விசில் அடித்துக் கொண்டே சென்றார். இந்த நிலையில் தான் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ரோபோ சங்கர் மற்றும் நாஞ்சில் விஜயன்
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், தொடர்ந்து உடலில் ஒவ்வொரு உறுப்புகள் செயலிழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
ரூ.2000 கோடி ஃபிக்ஸட் டெபாசிட்... ஆனாலும் பண ஆசை விடாத அக்ஷய் குமார்!
நாஞ்சில் விஜயன்
இந்த நிலையில் தான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரோபோ சங்கரின் மறைவு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் இறந்து 8 நாட்கள் கடந்த நிலையில் அவரது நினைவுகள் குறித்து பிரபலங்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தான் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனும் ரோபோ சங்கர் மட்டுமின்றி அவரது குடும்பத்தின் கஷ்ட நஷ்டங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Salman Khan : 2013க்குப் பிறகு மீண்டும் கன்னித்தன்மை பற்றி பேசிய சல்மான் கான்!
ரோபோ சங்கர்
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ரோபோ சங்கரின் வீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் இ எம் ஐ கட்ட வேண்டும். வேலை இருந்து வருமானம் இருந்தால் கட்டிவிடலாம். இதுவே நிரந்தர வேலை இல்லை என்றாலும் சரி, வாய்ப்புகள் இல்லை என்றாலும் சரி எப்படி கட்ட முடியும். அதனால் தான் குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைத்தார். அவரது மகள் இந்திரஜாவும் தன் பங்கிற்கு புரோமோஷன் செய்து வந்தார். இப்போதும் அதனை செய்து வருகிறார் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.