பிக்பாஸ் மூலம் சம்பாதித்த பணத்தில் புது கார் வாங்கிய தனலட்சுமி... அதன் மதிப்பு இத்தனை லட்சமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் பொதுமக்கள் என்கிற அடையாளத்தோடு கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பேமஸ் ஆன தனலட்சுமி புது கார் ஒன்றை வாங்கி உள்ளார்.
dhanalakshmi
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் எளிதில் பேமஸ் ஆகிவிடலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் தனலட்சுமி. ஈரோட்டை சேர்ந்தவரான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்கள் என்கிற அடையாளத்தோடு களமிறங்கினார். பல்வேறு கட்ட ஆடிஷன்களில் இருந்து இறுதியாக தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவர் தான் தனலட்சுமி.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றதற்கு இவரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். அந்நிகழ்ச்சியில் அசீமுக்கு அடுத்தபடியாக அதிகளவில் சண்டை சச்சரவுகளில் சிக்கியவர் தனலட்சுமி தான். முதலில் அசல் கோளாரு தன்னை ஆண்ட்டி என அழைத்ததை எதிர்த்ததில் இருந்து, அசீமுக்கு பொம்மை டாஸ்க்கில் பதிலடி கொடுத்தது வரை இவர் போட்ட சண்டைகள் நியாயமானதாகவே இருந்தன.
இதையும் படியுங்கள்... மாமன்னனை பார்த்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டித்தழுவி கொண்டாடினார் - மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
dhanalakshmi
இதன்காரணமாக தான் 70 நாட்களுக்கு மேலாக அந்நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்தார் தனலட்சுமி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகளவு கண்டெண்ட் கொடுத்தவராக தனலட்சுமி இருந்ததால், அவருக்கு சம்பளமும் வாரி வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சி மூலம் மட்டும் இவருக்கு மொத்தமாக ரூ.11 லட்சத்துக்கு மேல் சம்பளம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
dhanalakshmi
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனலட்சுமி புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். கியா சோனட் கார் வாங்கி இருக்கும் தனலட்சுமி அதுகுறித்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த காரின் விலை ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணினாரா? சலிப்படைய வைத்தாரா? - மாமன்னன் படத்தின் விமர்சனம் இதோ