MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பாக்கியாவை மிரட்டி பார்க்கும் இனியா! ஈஸ்வரியிடம் ஏற்பட்ட மாற்றம்? 'பாக்கியலட்சுமி' சீரியலில் செம்ம ட்விஸ்ட்!

பாக்கியாவை மிரட்டி பார்க்கும் இனியா! ஈஸ்வரியிடம் ஏற்பட்ட மாற்றம்? 'பாக்கியலட்சுமி' சீரியலில் செம்ம ட்விஸ்ட்!

'பாக்கிய லட்சுமி' தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், பாக்கியாவை இனியா மிரட்டி பார்க்க, பாக்கியா கல்லூரியில் படிப்பதற்கு ஈஸ்வரி என்ன சொல்வார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 09 2023, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி'. கணவர் கோபி தன்னை ஏமாற்றி விட்டு ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்கிற விரக்தியில் துவண்டு விடாமல், அவருக்கு முன் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என பாக்கியலட்சுமி தற்போது தொழில் ரீதியாக தன்னை வலிமைப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், அடுத்ததாக தன்னுடைய 25 வருட கல்லூரி கனவையும் எட்டிப் பிடித்துள்ளார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பாக்கியலட்சுமி தன்னுடைய கேட்டரிங்கை விரிவு படுத்தும் நோக்கில், பேங்கில் லோனுக்காக அப்லே செய்ய சென்றபோது, அணைத்து சான்றிதழ்களும் சரியாக இருந்த போதும், பேங்க் ரூல்ஸ் படி கல்லூரியில் ஒரு பட்டம் பெற்றிருந்தால் தான் இந்த சுயதொழில் லோன் கொடுக்க முடியும் என பேங்க் மேனேஜர் தெரிவித்ததை தொடர்ந்து, பன்னிரண்டாம் வகுப்போடு பாதியில் நின்று போன தன்னுடைய படிப்பை தொடர பாக்கியலட்சுமி முடிவு செய்தார். அதன்படி தன்னுடைய மகன் எழில் உதவியோடு, இனியா படிக்கும் கல்லூரியிலேயே சேர்ந்துள்ளார் பாக்கியலட்சுமி.

விஜய் படத்திற்காக முதல் ஆளாக வாழ்த்து கூறிய அஜித்.! தளபதிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம்? வெங்கட் பிரபு ஓபன் டாக்!

35

இவர் கல்லூரியில் படிப்பது இனியாவுக்கு சுத்தமாக பிடிக்காத நிலையில் மற்ற அனைவரும் பாக்யலட்சுமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் இந்த விஷயம் இதுவரை ஈஸ்வரிக்கு தெரியவராத நிலையில் அவருக்கு தெரிய வந்தால் அவரின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது.

45

காசிக்குச் சென்ற ஈஸ்வரி தன்னுடைய குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, ஒரு நாளைக்கு முன்னதாகவே கிட்டத்தட்ட சாமியார் வேடத்தில் வந்து இறங்கி இருக்கிறார். மேலும் வீட்டில் யோகாசனம் செய்து அசத்தியத்தை பார்த்து, வீட்டில் உள்ள அனைவருமே... ஈஸ்வரிக்கு ஏதோ ஆகிவிட்டதா என நினைக்கிறார்கள். 

பிரபல இளம் நடிகையை திருமணம் செய்யபோகிறாரா நடிகர் விஷால்? சமூக வலைத்தளத்தை சூடாக்கிய தகவல்!

55

இந்நிலையில் இனியா பாக்கியலட்சுமியிடம், அம்மா நீ கல்லூரிக்கு வரவேண்டாம் என்றும், தன்னை நண்பர்கள் கிண்டல் செய்வதாக கூறுகிறார்.  ஆனால் படிப்பதில் உறுதியாக இருக்கும் பாக்யா, யார் என்ன சொன்னாலும் நான் கல்லூரிக்கு செல்வேன் என இனியாவிடம் கூற... இனியா நான் பாட்டிகிட்ட சொன்னா நீ காலேஜுக்கு வர மாட்ட தானே? என கூறி பயமுறுத்தி மிரட்டுகிறார். எப்படியும் இன்றைய தினம் பாக்கியலட்சுமி கல்லூரிக்கு செல்வது ஈஸ்வரிக்கு தெரியவந்துவிடும் என்றும்... அவர் பாக்கியா படிப்புக்கு உறுதுணையாக நிற்கிறாரா? அல்லது வில்லியாக மார்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : தங்கமயிலிடம் சவால்விட்ட சரவணன்... பட்ஜெட் பத்மநாபனாக மாறிய செந்தில்
Recommended image2
Ethirneechal Thodargiradhu : தர்ஷினியை கடத்தியது ஜனனியா? சாட்டையை சுழற்றும் போலீஸ்; சிக்கப்போவது யார்?
Recommended image3
Siragadikka Aasai : மனோஜுக்கு ரோகிணி போட்ட கண்டிஷன்... நீத்துவால் புது சிக்கலில் மாட்டப்போகும் ஸ்ருதி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved